Latest
Loading...

29 September 2017

தண்ணீரில் ஸ்மார்ட்போன்கள் விழுந்துவிட்டால் செய்ய வேண்டிய 5 விடயங்கள்.!

0 Views
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது, அதன்பின் இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் பல தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவருகிறது, 

இருந்தபோதிலும் சில ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்துவிட்டால் பின்பு அவற்றை உபயோகப்படுத்த முடியாது. சில ஸ்மார்ட்போன்கள் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியுடன் வருகிறது, பல ஸ்மார்ட்போன்களில் அந்த வசதி கிடைப்பதில்லை எனவே அந்த ஸ்மார்ட்போன்களை திரும்ப உபயோகப்படுத்துவது மிகமிக கடினம். 



குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது போன்களுக்கு வாரண்ட்டி கொடுக்கு இருந்தபோதிலும் தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனங்கள் திரும்பபெறாது. எனவே ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.


கடல்நீர்: 


உப்பு தன்மை கொண்ட கடல் நீரில் ஸ்மார்ட்போன்கள் விழுந்துவிட்டால் அதில் இருக்கும் மெட்டல் பாகங்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனவே அவற்றை மிட்டெடுக்கும் தன்மை மிகக்குறைவு. அதன்பின் நன்னீரில் விழும் ஸ்மார்ட்போன்களை குறிப்பிட்ட செயமுறை மூலம் மிட்டெடுக்க முடியும்.






பேட்டரி & சிம்: 



தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் சிம்கார்டை அகற்றிவிட வேண்டும். மேலும் அதில் இருக்கும் மெமரிகார்டு போன்ற இணைப்பு பாகங்களை முதலில் அகற்றிவிட வேண்டும்.




ஹேர் ட்ரையர்: 


தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போனை ஹேர் ட்ரையர் போன்ற கருவி மூலம் உலர்த்தக் கூடாது, பின்பு அதில் இருந்துவரும்வெப்பத்தின் அளவு அதிகம் என்பதால் ஸ்மார்ட்போன் அதிகம் பாதிக்கப்படும்.


சார்ஜ்: 


சார்ஜ் செய்யும் போர்ட் பொறுத்தவரை சுத்தமான துணி கொண்டு துடைப்பது மிகவும் நல்லது.




சுத்தமான துணி: 


சுத்தமான துணி கொண்டு ஸ்மார்ட்போனை துடைப்பது மிகவும் நல்லது, குறிப்பிட்ட நேரம் வரை அந்த துணியைப் பயன்படுத்துவது நல்லது. அப்படி துணி கொண்டு துடைத்தும் குறிபிட்ட நேரத்திற்க்கு பிறகு போன் இயக்கத்திற்க்கு வரவில்லை என்றால், அதைப் பயன்படுத்துவது மிகவும் கடினம்.


மியூசிக்கல்.லி (Musical.ly)செயலியை பயன்படுத்துவது எப்படி?

0 Views

நீங்கள் ஒரு டான்சராக இருந்தால் உங்களுக்கு தேவைப்படும் அனைத்து வகை பாடல்களும் மியூசிக்கல்.லி என்ற செயலியில் கிடைக்கும். இந்த செயலியில் உள்ள இசை, பாடல்களை வைத்து நீங்கள் உங்கள் திறமையை வளர்த்து கொள்ளலாம்.




மியூசிக்கல்.லி செயலி என்றால் என்ன? 

இதுவொரு இலவச செயலி. இந்த செயலி மூலம் நீங்கள் சுமார் 15 வினாடிகள் கொண்ட இசை வீடியோவை உருவாக்கலாம். மேலும் இதே போன்று பல இசை வீடியோக்களின் கிளிப்புகளை உருவாக்கி பின்னர் அதை ஒன்றன் பின் ஒன்றாக பயன்படுத்தவும் செய்யலாம். 



அதுமட்டுமின்றி இந்த செயலியின் டேட்டாபேஸில் உள்ள மில்லியன் கணக்கான இசை ஆல்பங்களில் உங்களுக்கு தேவையான இசையை தேர்வு செய்து நீங்கள் பயன்படுத்தியும் கொள்ளலாம். நீங்கள் விரும்பும் இசை வீடியோவை செலக்ட் செய்த பின்னர் செல்பி கேமிராவை பயன்படுத்தி இந்த பாடலுக்கான உங்கள் உதட்டு அசைவையும் பார்க்கலாம்.

மேலும் உங்களுக்கு பிடித்த வீடியோக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் பகிரும் வசதியும் இதில் உண்டு,



இசை ஆல்பத்தை தேர்வு செய்வது எப்படி? 

இந்த செயலியில் மிகப்பெரிய அளவில் இசை லைப்ரரி உள்ளதால் நம்முடைய தேவை பூர்த்தி ஆகிவிடும். எந்த வகை பாடலாக இருந்தாலும் இதில் கண்டிப்பாக கிடைக்கும். சில குறிப்பிட்ட பாடல்களை தேர்வு செய்ய வேண்டும் என்றால் சியர்ச் பாக்ஸில் குறிப்பிட்டு அதை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இந்த செயலியில் உண்டு.




வீடியோவை பதிவு செய்யும் வசதி 

இந்த செயலி மூலம் நீங்கள் வீடியோவை பதிவு செய்ய விரும்பினால் இந்த செயலியின் மத்தியில் உள்ள மஞ்சள் நிற பட்டனை அழுத்த வேண்டும். பின்னர் ஸ்டார்ட் என்ற பட்டனை அழுத்தி நீங்கள் பதிவு செய்ய வேண்டிய இசையை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் குறிப்பிட்ட வினாடிகளுக்கு மட்டும் பதிவு செய்ய விரும்பினால் டைமர் பட்டனை தேர்வு செய்து கொள்ளலாம்


டூயட் பாடலை நாமே கம்போஸ் செய்யலாம்: 


இந்த செயலியில் நீங்கள் ஃபாலோ செய்யும் ஒருவருடன் இணைந்து டூயட் பாடலை கிரியேட் செய்யும் அற்புதமான வசதியையும் தந்துள்ளது. 



ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ ஒன்றை எடுத்து அதில் உள்ள '...' என்ற ஐகானை டேப் செய்து டூயட் பாடலை கிரியேட் செய்யலாம். மேலும் இந்த டூயட் வீடியோவை உருவாக்கி அதை பிரிவியூ பார்க்கவும், அதனை மேலும் மெரூகூட்டவும் செய்யலாம்.



உங்கள் கீபோர்டில் ஒளிந்திருக்கும் இரகசியமான 32 காம்பினேஷன் ஷார்ட்கட்ஸ்.!

0 Views
இன்று உலக அளவில் கணினியின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது, கணினி மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்டது எனக் கூறப்படுகிறது, மேலும் கல்வி, மருத்துவம், அலுவலகப்பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் அதிகம் பயன்படுகிறது இந்த கணினி. 

அலுவலகப் பணிகளுக்கும் கணினியின் பயன் அளவிடற்கரியதாகும். அலுவலகக் கோப்புகளையும் ஊழியர்களின் விவரங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொள்வதற்குக் கணினி பெரும் துணைபுரிகிறது. கடிதங்களைத் தயாரித்தல், ஊழியர்களின் வரவு செலவு, சம்பளம் போன்றவற்றைத் தாயாரித்தலிலும் கணினி உதவுகிறது கணினியில் மவுசைதான் நாம் அதிகம் உபயோகம் செய்கின்றோம், 




ஆனால் மிக எளிமையாக ஷார்ட் கட் பயன்படுத்தினால் கணினியில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகளை குறைந்த நேரத்தில் செய்யதுவிடலாம், மேலும் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலார்கள் அனைவரும் இந்த கீபோர்டு ஷார்ட் கட் பயன்பாட்டை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்க்கு பல வழிமுறைகள் உள்ளன, பின் வரும் ஸ்லைடர்களில் அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்


வழமுறை- 1: 

Windows: விண்டோஸ் என்ற பொத்தானை அழுத்தினால் அனைத்து மெனுவும் திறக்கப்படும், தேவையான விருப்பத்தை தேர்வு செய்ய முடியும். 

Win + A: விண்டோஸ் 10-இல் கணியின் மையத்தை திறக்கிறது. 
Win + B: அறிவிப்புப் பகுதியின் முதல் ஐகானைத் தேர்வுசெய்கிறது அம்புக்குறி விசையைப் பயன்படுத்தி சின்னங்களை மாற்றலாம்.





வழிமுறை-2: 

Win + Ctrl + B:அறிவிப்புப் பகுதியில் புதிய செய்தியை கொண்டுவந்து கொடுக்கும். 

Win + C: இந்தப் பயன்பாடு விண்டோஸ் 10-இல் உள்ளது, ஆதரிக்கப்படும் மொழியைப் பயன்படுத்த முடியும்.
Win + D: உடனடியாக டெஸ்க்டாப்பைக் காட்டுகிறது.

வழிமுறை-3: 

Win + E: இந்தப் பயன்பாடு விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் திறக்கிறது. 

Win + F: கோப்புகள் மற்றும் கோப்புறைகள் கண்டுபிடிக்க உதவுகிறது. 
Win + Ctrl + F : கணினியைப் பற்றி தெரிந்துகொள்ள இவை உதவுகிறது.

வழிமுறை-4: 

Win + G: விண்டோஸ் 7, விஸ்டா, விண்டோஸ் 10 போன்றவற்றில் விளையாட்டு பட்டியலைக் கொடுக்கிறது. 

Win + K:ஒரு புதிய தொடக்க மெனுவை திறக்கிறது, விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1-இல் பயன்படுகிறது. 
Win + L: விண்டோஸ் லாக் செய்ய இந்த பயன்பாடு உள்ளது.

வழிமுறை-5: 

Win + M: உங்கள் திரையை மினிமைஸ் செய்ய உதவுகிறது. 

Win + ⇧ Shift + M: நீங்கள் மினிமைஸ் செய்த பகுதியை ரீஸ்டோர் செய்ய உதவுகிறது. 
Win + O : இந்தப் பயன்பாடு கீரோஸ்கோப் செயல்பாட்டை முடக்குகிறது.




வழிமுறை-6: 

Win + P : வெளிப்புற மானிட்டர் ஃ ப்ரொஜெக்டருக்கு இயக்க உதவியாக உள்ளது. 

Win + Q: மெனுவில் பயன்பாடுகளுக்கான தேடல் எனக் கூறப்படுகிறது. 
Win + R : பொதுவாக ரன் டயலாக் பாக்ஸ் திறக்க உதவுகிறது.

வழிமுறை-7: 

Win + T:தேவையான டாஸ்க்பார் ஒபன் செய்ய உதவுகிறது. 

Win + U: யுடிலிட்டி மேனேஜர் பகுதியை திறக்க உதவுகிறது. 
Win + W: விண்டோஸ் இன்க் பகுதியை பயன்படுத்த முடியும். 
Win + X: விண்டோஸ் மொபைல் அப்ளிகேஷன் சென்டர் திறக்க உதவுகிறது. Win + Y :யாஹூ மெஸ்சென்ஜ்ர் பகுதிக்கு செல்ல முடியும்.



மேக் ஒஎஸ் கீபோர்டு வழமுறை-1: 

Command + Up Arrow: விரைவாக வலைதளத்திற்க்கு செல்ல முடியும். 

Command + Down Arrow: வலைதளம் பக்கத்தில் இவற்றைப் பயன்படுத்த முடியும். 
Command + Semicolon: தவறாக எழுதப்பட்ட சொற்களை இந்த பயன்பாடு காட்டும்.

வழிமுறை-2: 

Command + 1 (2, 3): வரிசையாக உங்களது டேப் திறக்க இவைப் பயன்படும். 

Option + Delete : இந்தப் பயன்பாடு அனைத்து ஆவனங்களையும் டெலிட் செய்ய பயன்படும். 
Command + H: மறைந்துள்ள அனைத்து ஆப் பயன்படுகளை திறக்கப் பயன்படும்.




வழிமுறை-3: 

Command + Shift + T : இந்தப் பயன்பாடு யுஆர்எல் நினைவில் கொள்ள பயன்படும். 

Command + F3 : தேவையில்லாத ஆப் நீக்க இந்த பயன்பாடு உதவியாக உள்ளது. 
Option + Shift + Volume Up/Volume down: ஒலி வெளியீடு நிலைகளை அறிந்துகொள்ள முடியும்.



வீட்டில் உள்ள வைபை நெட்வொர்க்கை பாதுகாப்பது எப்படி?

0 Views தற்போதைய டெக்னாலஜி உலகில் மால்வேர் தாக்குதல் செய்பவர்கள் மற்றும் ஹேக்கர்கள் பெருகி வரும் நிலையில் அலுவலக பணிகளை வீட்டின் நெட்வொர்க்கில் இருந்து செய்வது அவர்கள் நம்மை ஹேக் செய்ய எளிதாக அமைந்துவிடுகிறது.



எனவே அலுவலக பணிகளை வீட்டின் நெட்வொர்க்கில் இருந்து பணிபுரிபவர்கள் ஒருசில பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.





பெயரை மாற்றுங்கள்: ஹேக்கர்களை சமாளிக்க முதலில் அனைவரும் செய்ய வேண்டியது வைஃபையின் பெயரை மாற்றுவது. வைபையில் உள்ள பெயரை மாற்றிவிட்டால் ஹெக்கர்களுக்கு அது ஒரு சவாலாக இருக்கும். ஹேக்கர்களுக்கு வைபை நிறுவனம் கொடுக்கும் பெயர்களை ஊகிப்பது மிக எளிது. எனவே பெயரை மாற்ற வேண்டியது முதல் வேலை







வலிமையான பாஸ்வேர்டு: வைபை ரூட்டர் வாங்கும்போது அதில் ஏற்கனவே ஒரு பாஸ்வேர்டு இருக்கும். அந்த பாஸ்வேர்டை கத்துக்குட்டி ஹேக்கர்கள் கூட மிக எளிதில் ஊகித்து விடுவார்கள். எனவே ரூட்டர்களில் உள்ள பாஸ்வேர்டை கடினமானதாக மாற்றுங்கள். 20 டிஜிட்டில் எண்கள், எழுத்துக்கள், அடையாள குறியீடுகள் ஆகியவற்றை கலந்து பாஸ்வேர்டு உருவாக்குங்கள்,



நெட்வொர்க் என்கிரிப்ஷனை எனேபிள் செய்யுங்கள் என்கிரிப்ஷன் என்பது வைபைக்கு சம்பந்தப்பட்டவர்களை மட்டும் அனுமதிப்பது. இந்த வசதியை எனேபிள் செய்து கொண்டால் பெயர் தெரியாத மர்ம நபர்கள் நெட்வொர்க்கில் நுழைய முடியாது. இந்த என்கிரிப்ஷனில் பல வகை உண்டு. WEP, WPA or WPA2 ஆகிய வகைகளில் WEP என்பது பழைய வகை. இதை தவிர்ப்பது நல்லது. WPA2 லேட்டஸ்ட் வகை, இதனை உபயோகித்தால் பாதுகாப்பு அதிகம்



ரூட்டரை எங்கே வைக்க வேண்டும் தெரியுமா? வைபை ரூட்டரை வைக்க வேண்டிய இடம் மிக முக்கியம். ஒரு வீட்டின் நடு அறையில் வயர்லெஸ் ரூட்டரை வைப்பது பாதுகாப்பானது. வீட்டின் நடுவில்தான் நெட்வொர்க் சிக்னல் சீராக ஏற்ற இறக்கமின்றி கிடைக்கும். அதிக சிக்னல் அல்லது குறைவான சிக்னல் கிடைக்கும் பாதுகாப்பற்றது



ரிமோட் ஆக்சஸை டிஸேபிள் செய்ய வேண்டும் பெரும்பாலான வைபை நிறுவனங்கள் ரிமோட் சிஸ்டத்தை அனுமதிக்கும்படிதான் வைத்திருப்பார்கள். ஆனால் இது ஹேக்கர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் மிக எளிதாக உள்ளே நுழைய வழிவகுத்துவிடும். எனவே இந்த ரிமோட் சிஸ்டத்தை டிஸேபிள் செய்து வைக்க வேண்டியது மிக முக்கியம். இதை டிஸேபிள் செய்துவிட்டால் யாராலும் உங்களுடைய வைபையை பயன்படுத்த முடியாது. இதை செய்வதற்கு ரிமோட் ஆக்சஸ் அல்லது ரிமோட் அட்மின் சென்று டிஸேபிள் செய்யலாம்.

சீக்ரெட் மெஸேஜ் முதல் க்ளோஸ் பிரெண்ட் வரை பேஸ்புக்கின் ரகசியமான செட்டிங்ஸ்.!

0 Views பேஸ்புக் 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும், இவற்றை உருவாக்கியது மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது நண்பர்கள். தற்போது பேஸ்புக் மூலம் மிக அதிக வருமானம் பெறுகிறார் மார்க் ஜுக்கர்பெர்க். உலக நாடுகள் முழுவதும் பல மில்லியன் மக்கள் இந்த பேஸ்புக் வலைதளத்தை உபயோகம் செய்கின்றனர். இந்தப் பயன்பாட்டில் பல்வேறு அப்டேட் வந்துவிட்டது.



இப்போதெல்லாம் ஒரு பேஸ்புக் கணக்கு இல்லாமல் ஒரு நபரைக் கண்டுபிடிக்க மிகவும் கடினமாக உள்ளது, மேலும் சமூக வலைதளங்கில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது இந்த பேஸ்புக் சேவை. மேலும் இவற்றில் பல தொழில்நுட்பங்கள் அடங்கியுள்ளது.




மெசேஜ் ரெக்வெஸ்ட்: 



பேஸ்புக்கில் இரண்டு இன்பாக்ஸ்கள் உள்ளன, பெரும்பாலும் இவற்றில் ஒன்றை மட்டும் தான் நாம் அதிகமாகப் பயன்படுத்துகின்றோம்,இவற்றில் உள்ள மெசேஜ் ரெக்வெஸ்ட் என்ற செயல்பாட்டை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை, மெசேஜ் ரெக்வெஸ்ட் மூலம் தகவல் மற்றும் செய்திகளை பகிர முடியம்.





லாகின்: 



நீங்கள் எந்த ஸ்மார்ட்போன் மற்றும் டெஸ்க்டாப்பில் பேஸ்புக் பயன்படுத்தினால் அவற்றை மிக எளிமையாக கண்டுபிடிக்க முடியம்,நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் மாடலை கூட அறிந்து கொள்ள முடியும், அதற்க்கான வழிமுறை: பேஸ்புக் லாகின் கிளிக் செய்ய வேண்டும், அதன்பின் செக்யூரிட்டியை தேர்ந்தேடுக்க வேண்டும், பின்பு அதனுள் நீங்கள் பயன்படுத்திய ஸ்மார்ட்போன் மற்றும்டெஸ்க்டாப் தகவலை அறிந்துகொள்ள முடியும்.

லாகின் அப்ரூவல்ஸ்: 



பேஸ்புக் பாதுகாப்பு முறையைப் பற்றி ஏதாவது சந்தேகம் இருந்தால் செக்யூரிட்டி வழியை தேர்ந்தேடுத்து அப்ரூவல்ஸ்-ஐ பயன்படுத்தலாம்,தெரியாத சாதனத்திலிருந்து உங்கள் கணக்கில் உள்நுழையும் போது பாதுகாப்பு அமைப்புக்கு கடவுச்சொல் தேவைப்படும். நீங்கள் ஒருபோதும் பயன்படுத்தாத சாதனத்திலிருந்து உங்கள் பக்கத்திற்கு உள்நுழைந்த போது, உங்கள் தொலைபேசிக்கு அனுப்பப்படும் கடவுச்சொல்லை நீங்கள்பயன்படுத்த வேண்டும்.


ட்ரஸ்டேட் காண்டாக்ட்: 



இந்த சேவை மிகவும் பாதுகாப்பானது, ட்ரஸ்டேட் காண்டாக்ட் என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும், அதன்பின்பு செக்யூரிட்டி டேப்-என்பதை தேர்ந்தேடுக்கவும், மேலும் நம்பகமான தொடர்புகளுக்கு மட்டுமே இவை பயனுள்ளதாக இருக்கும்.

புகைப்படங்கள் : 



சில நேரங்களில் நம் பழைய நண்பர்களோடு நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் பழைய உரையாடல்களைப் பார்க்க வேண்டும் என்றால் இதைச் செய்ய, நீங்கள் கீழே இறக்க வேண்டியதில்லை, உங்கள் நண்பரின் சுயவிவரத்தில் உள்ள ('See Friendship.') ஐகானைக் கிளிக் என்பதைத் தட்டவும்.

வியூ ஆக்ட்டிவ் லாக்: 


பேஸ்புக்கில், நீங்கள் லைக் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் போன்றவற்றை பார்க்க வாய்ப்பு உள்ளது, முகப்பில் உள்ள "வியூ ஆக்ட்டிவ் லாக்" கிளிக் செய்தால் போதும்.


சுயவிவரம்: 



உங்கள் சுயவிவரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை அறிய விரும்பினால் வியூ ஆக்ட்டிவ் லாக் வழியே சென்று (View As) கிளிக் செய்தால் போதும் அறிந்து கொள்ள முடியும்.



வீடியோ சாட்; 



பேஸ்புக் மெசேஜ் பகுதியில் வீடியோ சாட் உள்ளது, அவற்றில் உள்ள கேமராவை கிளிக் செய்தால்போதும் மிக அருமையாகவீடியோ சாட் பயன்படுத்த முடியும்.



பகிரும் வசதி : 



தேர்ந்தேடுத்த நண்பர்களுக்கு மட்டும் புகைப்படம் மற்றும் வீடியோவைப் பகிரும் வசதி உள்ளது. இந்தப் பயன்பாடுஅதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.





எடிட் ப்ரோபைல்: 


நீங்கள் விரும்பிய போஸ்ட் மற்றும் வீடியோ போன்றவற்றை தேர்ந்தேடுத்து சேமித்து வைக்க முடியும். மேலும் இந்த பயன்பாடு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எடிட் ப்ரோபைல் சென்று இந்தப் பயன்பாட்டை செயல்படுத்த முடியும்.

சிஎம் லான்ச்சர் 3D செயலியை பயன்படுத்தி ஆண்ட்ராய்டை கஸ்டமைஸ் செய்வது எப்படி

0 Views ஆண்ட்ராய்டு என்றாலே கஸ்டமைசேஷன் தான் அனைவருக்கும் முதலில் நினைவில் வரும். ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் வால்பேப்பர் முதல் இயங்குதளம் வரை மிக எளிமையாக கஸ்டமைஸ் செய்ய முடியும்.


தங்களது ஸ்மார்ட்போன்களை கஸ்டமைஸ் செய்ய நினைப்போர், ஸ்மார்ட்போனை எவ்வாறு ரூட் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பர். இவ்வாறானவர்களுக்கான சேவையாக லான்ச்சர்கள் இருக்கிறது. இங்கு சிஎம் லான்ச்சர் 3D வழங்கும் அம்சங்களை பார்ப்போம்.
முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். இந்த செயலி சீனாவை சேர்ந்த இண்டர்நெட் நிறுவனமான சீட்டா மொபைல்ஸ் உருவாக்கியதாகும்.



அதிக தீம் மற்றும் ஐகான்கள்

இந்த செயலியில் ஒவ்வொரு மெனுவையும் மிக எளிமையாக கஸ்டமைஸ் செய்ய மொத்தம் 10,000 2D / 3D தீம்களும், லாக் ஸ்கிரீன் தீம், வால்பேப்பர், ஐகான் மற்றும் காண்டாக்ட் தீம்கள் இருக்கிறது.

3D தீம் மற்றும் லைவ் வால்பேப்பர்

இந்த அம்சம் கொண்டு 3D விட்ஜெட், 3D தீம், லைவ் வால்பேப்பர்களை பெற முடியும். கூடுதலாக 3D ஃபிட்ஜெட் ஸ்பின்னர், 3D வொல்ஃப், டிரான்ஸ்பேரண்ட் ஸ்கிரீன் தீம் மற்றும் புதிய விஆர் தீம்களும் கிடைக்கிறது.

பாதுகாப்பு



இந்த லான்ச்சர் AV-TEST மூலம் சக்தியூட்டப்படுகிறது, இது ஆண்டி-வைரஸ் இன்ஜின் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் போனினை மால்வேர் அச்சுறுத்தல்கள், பிரைவசி லீக்ஸ் மற்றும் ஒவ்வொரு ஃபோல்டர்களையும் பிரத்தியேக ஃபோல்டரில் வைத்துக் கொள்கிறது.

பேட்டரி பேக்கப்

பெரும்பாலான லான்ச்சர்கள் பேட்டரியை வேகமாக தீர்த்துவிடும் நிலையில், இந்த லான்ச்சர் 30 சதவிகிதம் வரை பேட்டரியை பேக்கிரவுண்டில் செயலிகள் இயங்குவதை நிறுத்தி தானாகவே சேமிக்கும் வசதி கொண்டுள்ளது.

எளிய அமைப்பு

சிஎம் லான்ச்சர் 3D ஃபோல்டர்களை கச்சிதமாக ஒருங்கிணைத்து ஒவ்வொரு ஃபோல்டரையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். மேலும் பூஸ்ட் அண்ட் வைபை பூஸ்ட் அம்சங்கள் ஸ்மார்ட்போனினை வேகமாகவும், சீரான அனுபவத்தை வழங்கும்

செய்திகள்

கஸ்டமைசேஷன் அம்சங்கள் மட்டுமின்றி சிஎம் லான்ச்சர் 3D நேரலை செய்திகளை வழங்குகிறது, இதனை வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ள முடியும்.


சீரான அனுபவம்

இந்த செயலி மிகவும் அதிநவீன 3D அனிமேஷன் இன்ஜின் கொண்டுள்ளதோடு அதிகப்படியான கிராஃபிக் எஃபெக்ட் மற்றும் டிரான்சிஷன் பணிகளை சீராகவும், வேகமாகவும், சுவார்ஸ்யமாகவும் வழங்குகிறது.

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...