வாய்ஸ் கால்ஸ்
ரிலையன்ஸ் ஜியோ இலவச வாய்ஸ் கால் என்பது உண்மையில் இன்டர்நெட் மூலம் கால் செய்யும் வகையில் செயல்படுகிறது ஒன்று, மேலும் மற்ற நெட்ஒர்க்களுக்கு கால் செய்யும் போது அடிக்கடி கால் சுட் ஆவது போன்ற சில பிரச்சனைகள் இன்னும் சரி செய்யப்பட வேண்டியுள்ளது. அதனால் கொஞ்சம் காத்திருங்கள்.
நெட்ஒர்க் கவரேஜ்ரிலையன்ஸ் ஜியோ இன்டர்நெட் அதிவேகமாக உள்ளது. இருந்தும் இந்தியா முழுக்க இதன் நெட்ஒர்க் பற்றி அறிய சில நாட்கள் ஆகலாம். இப்போது தான் சிம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வெல்கம் ஆபர் மூலம் பலர் இணைவார்கள். ஒரு சில மாதங்களுக்கு அப்புறம் ரிலையன்ஸ் ஜியோவின் நெட்ஒர்க் செயல்பாடு குறித்து ஒரு தெளிவு வந்தவுடன் நீங்கள் நம்பரை போர்ட் செய்யலாம்.
அவேரஜ் ஸ்பீட்
ரிலையன்ஸ் ஜியோ இன்டர்நெட் ஸ்பீட் மற்றவைகளை விட அதிகம் தான். ஏனெனில் குறைவான நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் இப்போது. இன்னும் சில மாதங்களில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் போது அதன் ஸ்பீட் என்ன என்பது தெரிய வரும். ஏர்டெல் இன்டர்நெட் முதலில் ஸ்பீட் அதிகமாகவும், மற்ற நெட்ஒர்க்கள் 4g சேவையை தொடர்ந்து குறைய தொடங்கியதும் நினைவில் கொள்க.
சுஸ்டமர் சர்வீஸ்
பல லட்சக்கணக்கானோர் சேவையில் இணைவார்கள். அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் எப்படி சிறந்த சுஸ்டமர் சர்வீஸ் கொடுக்க போகிறார்கள் என்பது பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
மேற்சொன்ன கருத்துக்களுடன் நீங்கள் உடன்பட்டால் ரிலையன்ஸ் ஜியோவை இரண்டாவது சிம்மாக பயன்படுத்துங்கள்.
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்