Latest
Loading...

27 September 2017

15 வருட வரிச்சலுகை கேட்கிறது ஆப்பிள் நிறுவனம்

0 Views

கடந்த  வருடம் 2016 மே மாதம் நான்கு நாள் பயணமாக  இந்தியா வந்த ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் கூக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது நினைவிருக்கலாம் .  இந்த சந்திப்பின் நோக்கமாக “ Refurbished செய்யப்பட்ட iPhone களை “ இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆப்பிள் தரப்பில் இருத்து முன் வைக்கப்பட்டது .
“Refurbished “   என்பது ஏற்கனவே கடையில் விற்பனை செய்யப்பட்ட பொருளை வாரண்டி பிரச்சனையில் முழுவதுமாக நிறுவனமே   அந்த பொருளை திரும்பப்பெற்றுக் கொண்டு , வாடிக்கையாளாருக்கு புதிய பொருளை கொடுப்பார்கள் . அந்த பழுதான பொருளை மீண்டும் தயாரிப்பு தொழிற்ச்சாலைக்கு அனுப்பி பழுதை சரி செய்து மீண்டும் புதிய பொருள் போன்றே பெட்டியில் போட்டு விற்பார்கள் ,இந்த வகை பொருட்களுக்கு  “Refurbished Products “ என சந்தையில் சொல்வோம் .
உலகம் முழுவதும் இருந்து திரும்பபெறப்பட்ட வாரண்டி பிரச்சனையுள்ள iPhone களை பட்டி டிங்கரிங் பார்த்து இந்தியாவில் குவித்து , புதிய போன் விலைக்கு கொஞ்சம் கம்மியா விற்பனை செய்யும் தில்லாலங்கடி திட்டத்துடன் தான் ஆப்பிள் நிறுவனம் அணுகியது . ஆனால் கசாப்புக் கடையில் தானே தலையைக்  கொடுத்த ஆடு கதையாக ., ஆப்பிள் நிறுவனம் உங்கள் தொழிற்ச்சாலையை இந்தியாவில் தொடங்குங்கள் , நாங்கள் உதவுகிறோம் என நரேந்திர மோடி அந்த சந்திப்பில் சொன்னர் .ஆப்பிள் நிறுவனத்தின் பல அலுவலகங்கள் இந்தியாவில் இருந்தாலும்  , அவர்களின் iPhone தயாரிப்பு தொழிற்ச்சாலையை “Make in India “ திட்டத்தின்  ஒரு பகுதியாக தொடங்கவைப்பதை ஒரு பெருமையான நிகழ்வாகவே பி .ஜெ .பி  அரசு கருதியது .
கடந்த வருடம் 2016 மே மாதம் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்த ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் கூக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது நினைவிருக்கலாம் . இந்த சந்திப்பின் நோக்கமாக “ Refurbished செய்யப்பட்ட iPhone களை “ இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆப்பிள் தரப்பில் இருத்து முன் வைக்கப்பட்டது . “Refurbished “ என்பது ஏற்கனவே கடையில் விற்பனை செய்யப்பட்ட பொருளை வாரண்டி பிரச்சனையில் முழுவதுமாக நிறுவனமே அந்த பொருளை திரும்பப்பெற்றுக் கொண்டு , வாடிக்கையாளாருக்கு புதிய பொருளை கொடுப்பார்கள் . அந்த பழுதான பொருளை மீண்டும் தயாரிப்பு தொழிற்ச்சாலைக்கு அனுப்பி பழுதை சரி செய்து மீண்டும் புதிய பொருள் போன்றே பெட்டியில் போட்டு விற்பார்கள் ,இந்த வகை பொருட்களுக்கு “Refurbished Products “ என சந்தையில் சொல்வோம் . உலகம் முழுவதும் இருந்து திரும்பபெறப்பட்ட வாரண்டி பிரச்சனையுள்ள iPhone களை பட்டி டிங்கரிங் பார்த்து இந்தியாவில் குவித்து , புதிய போன் விலைக்கு கொஞ்சம் கம்மியா விற்பனை செய்யும் தில்லாலங்கடி திட்டத்துடன் தான் ஆப்பிள் நிறுவனம் அணுகியது . ஆனால் கசாப்புக் கடையில் தானே தலையைக் கொடுத்த ஆடு கதையாக ., ஆப்பிள் நிறுவனம் உங்கள் தொழிற்ச்சாலையை இந்தியாவில் தொடங்குங்கள் , நாங்கள் உதவுகிறோம் என நரேந்திர மோடி அந்த சந்திப்பில் சொன்னர் .ஆப்பிள் நிறுவனத்தின் பல அலுவலகங்கள் இந்தியாவில் இருந்தாலும் , அவர்களின் iPhone தயாரிப்பு தொழிற்ச்சாலையை “Make in India “ திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கவைப்பதை ஒரு பெருமையான நிகழ்வாகவே பி .ஜெ .பி அரசு கருதியது . இதை உணர்ந்து கொண்ட ஆப்பிள் நிறுவனம் , நாங்கள் இங்கே தொழிற்ச்சாலை வைக்க எங்களின் நிபந்தனைகளை அரசு ஏற்கவேண்டும் என வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர் .

உதிரி பாகங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் Countervailing Duty (CVD) எனும் கலால் வரியை எங்கள் நிறுவனத்திற்கு மட்டும் 15 வருடங்களுக்கு விதிக்க கூடாது எனும் வைத்துள்ளார்கள் . வரவிருக்கும் GST வரிவிதிப்பு முறையில் இப்படி ஒரு நிறுவனத்திற்கு வரிவிலக்கு கொடுப்பது சாத்தியமில்லை என நிதிச் செயலாளர் காஸ்முக் அதியா தெரிவித்துள்ளார் . இப்படி ஆப்பிளுக்கு சலுகை கொடுத்தால் அதே வகை உற்பத்தியில் இருக்கும் Samsung, Xiomi நிறுவங்களும் இதே சலுகையை எதிர்பார்க்கும் ஆபத்து உள்ளதால் , இந்திய அரசு முடிவெடுக்க முடியாமல் திணறிவருகிறது . குறிப்பாக CVD வரியில் சலுகை கேட்பது , இந்தியாவினுள் இருந்து மூலப்பொருள் , உதவிப்பொருட்களை வாங்கி உற்பத்தி செய்யும் வகையில் இல்லாமல் , வெளிநாட்டில் இருந்து அவற்றை இறக்குமதி செய்து அவற்றை பூட்டி சேர்த்து (Assemble ) விற்கும் வகையிலான தொழிற்ச்சாலையாகவே இது இருக்கும் என நாம் எளிதில் கணிக்கலாம் . மேலும் , எங்கள் நிறுவனத்திற்கு வரும் பொருட்களை சுங்க அதிகாரிகள் ஓவ்வொரு முறையும் சோதனை செய்யவோ, ஆவணங்கள் அனுமதிக்காக காத்திருக்கவோ கூடாது . எப்போது வந்தாலும் சோதிக்காமல் உடனே சுங்க அனுமதி தரவேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம் .

இதை உணர்ந்து கொண்ட ஆப்பிள்   நிறுவனம் , நாங்கள் இங்கே தொழிற்ச்சாலை வைக்க எங்களின் நிபந்தனைகளை அரசு ஏற்கவேண்டும்  என வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர் .

உதிரி பாகங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் Countervailing Duty (CVD) எனும் கலால் வரியை எங்கள் நிறுவனத்திற்கு மட்டும் 15 வருடங்களுக்கு விதிக்க கூடாது எனும் வைத்துள்ளார்கள் .  வரவிருக்கும் GST வரிவிதிப்பு முறையில் இப்படி ஒரு நிறுவனத்திற்கு வரிவிலக்கு  கொடுப்பது சாத்தியமில்லை என நிதிச் செயலாளர் காஸ்முக் அதியா தெரிவித்துள்ளார் . இப்படி ஆப்பிளுக்கு  சலுகை கொடுத்தால் அதே வகை உற்பத்தியில் இருக்கும் Samsung, Xiomi நிறுவங்களும் இதே சலுகையை எதிர்பார்க்கும் ஆபத்து உள்ளதால் , இந்திய அரசு முடிவெடுக்க முடியாமல் திணறிவருகிறது . குறிப்பாக CVD வரியில் சலுகை கேட்பது , இந்தியாவினுள் இருந்து மூலப்பொருள் , உதவிப்பொருட்களை  வாங்கி உற்பத்தி செய்யும் வகையில் இல்லாமல் , வெளிநாட்டில்  இருந்து அவற்றை இறக்குமதி செய்து அவற்றை பூட்டி சேர்த்து (Assemble )  விற்கும் வகையிலான  தொழிற்ச்சாலையாகவே இது இருக்கும் என நாம் எளிதில் கணிக்கலாம் .
மேலும் , எங்கள் நிறுவனத்திற்கு வரும் பொருட்களை சுங்க அதிகாரிகள் ஓவ்வொரு முறையும் சோதனை செய்யவோ, ஆவணங்கள் அனுமதிக்காக காத்திருக்கவோ கூடாது . எப்போது வந்தாலும் சோதிக்காமல் உடனே சுங்க அனுமதி தரவேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம் .

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...