இந்திய தொலைத் தொடர்புத் துறையில் புதிய கூட்டாளியும், இதர போட்டியாளர்களின் பிராதன எதிராளியுமான ரிலையன்ஸ் ஜியோ "பூஸ்டர் பேக்"{ என்று அழைக்கப்படும் சிறப்பு ரீசார்ஜ் பொதிகளையும் வழங்குகிறது.
பயனர்களின் தினசரி வரம்புகள் முடிந்தவுடன் 4ஜி வேகத்திலான் கூடுதல் தரவை பெற இந்த பொதிகள் அனுமதிக்கும். ஜியோவின் திட்டங்கள் தினசரி பயன்பாட்டு வரம்பிற்கு உட்பட்டுள்ளன. குறிப்பாக ஜியோவின் மிகவும் பிரபலமான திட்டங்களான ரூ.309/- மற்றும் ரூ.399/- ஆகியவைகள் 1ஜிபி என்ற தினசரி பயன்பாட்டு வரம்பை கொண்டுள்ளன. வரம்பை எட்டும் வரை இதன் 4ஜி வேகமானது 128கேபி பிபிஎஸ் ஆகும், அதன் பின்னர் வேகம் குறையும்.
எந்தவொரு செல்லுபடி காலமும் இல்லாத சிறப்பு ரீசார்ஜ் 4ஜி வேகத்திலான தினசரி பயன்பாட்டு வரம்பை விட கூடுதலான தரவை, அதே அளவிலான வேகத்தில் பெற ஜியோவின் சில பூஸ்டர் பொதிகளை ரீசார்ஜ் செய்யலாம். ஜியோவின் பூஸ்டர் ரீசார்ஜ்கள் எந்தவொரு செல்லுபடி காலமும் இல்லாத சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களாகும்.
அதிகபட்சம் 10ஜிபி வரை கூடுதல் 4ஜி தரவு இந்த பூஸ்டர் திட்டங்கள் உங்களின் பிராதன திட்டத்தின் செல்லுபடி காலத்தை பொறுத்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சம் 10ஜிபி வரை கூடுதல் 4ஜி தரவுகளை வழங்கும் ஜியோவின் பூஸ்டர் பொதிகள் ரூ. 11/- முதல் ரூ.301/- வரை நீள்கின்றது. அவைகளின் விலை நிர்ணயம் மற்றும் நன்மைகள் என்னென்ன.?
ஜியோ பூஸ்டர் பேக் : ரூ. 11 ஆட்-ஆன் பேக் என்றும் அழைக்கப்படும் இந்த பூஸ்டர் பேக் ஆனது 35 நிமிடங்களுக்கான குரல் அழைப்புகளுடன் சேர்த்து 4ஜி வேகத்திலான 100எம்பி தரவையும் வழங்குகிறது.
ஜியோ பூஸ்டர் பேக் - ரூ. 51 இந்த ரூ.51/- பூஸ்டர் பேக் ஆனது (ஜியோவின் வலைத்தளத்தின்படி) 1ஜிபி அளவிலான 4ஜி தரவையும் உடன் 175 நிமிடங்களுக்கான குரல் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது.
ஜியோ பூஸ்டர் பேக் : ரூ. 91 இந்த ஜியோ பூஸ்டர் பேக் ஆனது 4ஜி வேகத்திலான 2ஜிபி டேட்டாவுடன் 325 நிமிடங்களுக்கான குரல் அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது.
ஜியோ பூஸ்டர் பேக் : ரூ. 201 ரூ.201/- என்ற ஜியோ பூஸ்டர் பேக்கின் கீழ் பயனர்கள் 5ஜிபி அளவிலான 4ஜி தரவு மற்றும் 725 நிமிடங்களுக்கான குரல் அழைப்பு ஆகிய நன்மைகளை அனுபவிக்கலாம்.
ஜியோ பூஸ்டர் பேக் : ரூ. 301 இருப்பதிலேயே அதிகபட்ச விலை நிர்ண்யம் கொண்ட ரூ.301/- பூஸ்டர் பேக்கின் கீழ் அதிகபட்சமாக 10 ஜிபி அளவிலான டேட்டாவையும் உடன் 1000 நிமிடகளுக்கான குரல் அழைப்புகளையும் பயனர்கள் பெறுவார்கள்.
இந்த பொதிகளை ஆக்டிவேட் செய்வதெப்படி.? உங்கள் வழக்கமான திட்டத்தின் அன்றாட வரம்பைத் தாண்டி கூடுதலான தரவு தேவைப்படும் போது, மேலே உள்ள எந்தவொரு பூஸ்டர் பொதியையும், எப்போது வேண்டுமானாலும் ஆக்டிவேட் செய்து உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம். சரி இந்த பொதிகளை ஆக்டிவேட் செய்வதெப்படி.?
வழிமுறைகள்
- மைஜியோ பயன்பாட்டைத் திறக்கவும். ஹோம் பக்கத்தில், "மை ரீசார்ஜ்" என்பதின் கீழ் டேட்டா பூஸ்டர் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- அதனுள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஆட்-ஆன் பொதிகளையும் நீங்கள் பார்க்கலாம். அதில் ஒன்றை தேர்வு செய்ய, கட்டணம் செலுத்தும் செயல்முறைக்குள் திருப்பி விடப்படுவீர்கள்.
-உங்கள் வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது பேமண்ட் வேலட் ஆப் மூலம் நீங்கள் பணம் செலுத்தலாம். நீங்கள் பணம் செலுத்திய உடனேயே குறிப்பிட்ட பேக் ஆக்டிவேட் செய்யப்பட்டு கூடுதல் நன்மைகள் அனுபவிக்க்க கிடைக்கும்.