BHIM ஆப் ஆனது பணம் பரிவர்த்தனை போன்ற தகவல்களை கொண்டுள்ளதால் பொய்யான ஆப்பை பயன்படுத்தும் போது உங்கள் தகவல்கள் திருடுபோக வாய்ப்புகள் அதிகம். மேலும் பணமும் விரயமாகலாம். இந்த பொய்யான ஆப்களால் பலரும் பணத்தை இழந்துள்ளனர்.
சில பொய்யான BHIM ஆப்;
*99# BHIM UPI Bank No Internet”,
“BHIM payment updater 2017”,
“Bhim Banking”,
“BHIM *99# For All Banks”,
“Bhim 2017”,
“Bhim All Banking”
கூகுள் பிளே ஸ்டாரில் BHIM ஆப் தேடும் போது முதலிடத்தில் உள்ளது தான் உண்மையான BHIM ஆப். நீங்கள் கீழே சென்றால் வருவது அனைத்தும் பொய்யான BHIM ஆப்.
உண்மையான BHIM ஆப் கண்டறிவது எப்படி?
1. கூகுள் பிளே ஸ்டாரில் BHIM ஆப் தேடும் போது முதலிடத்தில் இருக்கும்
2. கூகுள் பிளே ஸ்டாரில் நேரடியாக டவுன்லோட் செய்யவும். வேறு தளங்கள் மூலம் வேண்டாம்.
3. BHIM ஆப் ஆனது National Payments Corporation of India (NPCI) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
4. BHIM ஆப் லோகோ ஆனது இரண்டு முக்கோணம் ஒரே இடது பக்கமாக ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும். வெள்ளை நிறம் பின்புறத்தில் இருக்கும். வேறு எந்த எழுத்தும் எழுதப்பட்டிருக்காது..
5. BHIM ஆப் லோகோ வடிவில் இருந்து NPCI நிறுவனத்தால் உருவாக்கப்படவில்லை என்றால் பொய்யான ஆப்.
டிஜிட்டல் பரிவர்த்தனை நோக்கி நாம் சென்றுகொண்டு இருக்கையில் இது போன்ற பல பொய்யான ஆப்களால் நாம் ஹேக் செய்யப்படலாம். எனவே இது குறித்த விழிப்புணர்வு நமக்கு தேவை. தெரிந்து கொள்ளுங்கள்…
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்