Latest
Loading...

28 September 2017

ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களை சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது எப்படி?

0 Views
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு, ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களை சைபர் தாக்குதல்களில் இருந்து தங்களது சாதனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை இங்கு தொகுத்திருக்கிறோம்.




ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோரும் தங்களது சாதனங்களை ரூட் செய்திருப்பர். எனினும் ரூட் செய்யப்பட்ட சாதனங்கள் சைபர் தாக்குதல்களுக்கு மிக எளிமையாக இலக்காகும் என்பது பலரும் அறிந்திராத ஒன்றாகும். அந்த வகையில் ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதுகாக்க சில டிப்ஸ்..






ரூட் அக்சஸ் பயன்பாடு: 



ஆண்ட்ராய்டு சாதனத்தை ரூட் செய்தால் முழுமையான அட்மினிஸ்ட்ரேட்டர் அக்சஸ் கிடைத்திடும், எனினும் இவை தீங்கு விளைவிக்கும் செயலிகளுக்கு ஏதுவாகவும் பயன்படுத்த முடியும். இதனால் சூப்பர்சு (SuperSU) செயலியை இன்ஸ்டால் செய்து ஸ்மார்ட்போனில் ரூட் அளவு அக்சஸ் கோரும் செயலிகளை காட்டிக் கொடுக்கும். இதனால் தீங்க விளைவிக்க நினைக்கும் செயலிகளை அறிந்து கொள்ள முடியும்.




ஆப் பெர்மிஷன்: 


கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பல்வேறு செயலிகள் உங்களது சாதனத்தில் அனுமதி கோரும், அவ்வாறு அனுமதி கோரும் செயலிகள் கோரும் அனுமதியை சரிவர கண்காணிக்க F- Secure App Permission செயலி பயனுள்ளதாக இருக்கும். ஆண்ட்ராய்டு சாதனத்தை பாதுகாக்க இந்த செயலி கட்டாயம் இன்ஸ்டால் செய்ய வேண்டிய ஒன்றாக இருக்கிறது.



ஃபயர்வால் பயன்பாடு: 


ஸ்மார்ட்போனில் நம்பகத்தன்மை அற்ற நெட்வொர்க்களில் பயன்படுத்தும் போது உங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க அனைத்து நெட்வொர்க் பயன்பாடுகளையும் முடக்க முடியும். இதை செய்ய AfWall+ சிறப்பானதாக இருக்கும். இந்த செயலி உங்களது டேட்டா நெட்வொர்க்களை பயன்படுத்தும் செயலிகளின் இயக்கத்தை தடுத்து நிறுத்தும்.






ஆண்டிவைரஸ் செயலி: 


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பதில் ஆண்டிவைரஸ் செயலிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் தலைச்சிறந்த ஆண்டிவைரஸ் செயலிகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை பாதுகாக்கலாம்.



இன்ஸ்டால்: 



ஸ்மார்ட்போனினை ரூட் செய்த பின் அதில் அதிகாரப்பூர்வமற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும். இதனால் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை மட்டும் இன்ஸ்டால் செய்வது ஸ்மார்ட்போனிற்கு பாதுகாப்பாக இருக்கும்.




சிஎம் செக்யூரிட்டி செயலி: 





ஆண்ட்ராய்டு சாதனத்தை வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுாக்கும் பணியினை சிஎம் செக்யூரிட்டி செயலி சிறப்பாக செய்யும். இந்த செயலியை கொண்டு ஸ்மார்ட்போனில் நீங்கள் இன்ஸ்டால் செய்துள்ள தீங்கு விளைவிக்கும் செயலிகளை கண்டறிந்து கொள்ள முடியும். இத்துடன் ஆப் லாக் கொண்டு செயலிகளை மற்றவர்கள் பாதுகாக்காமல் தடுக்க முடியும்.




ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்: 



ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் இன்ஸ்டால் செய்து வைத்தால், ஸ்மார்ட்போன் தொலைந்து போனாலும் அதனை டிராக் செய்வது எளிமையாகி விடும். செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கூகுள் அக்கவுண்ட் உடன் லாக்இன் செய்தால், ஸ்மார்ட்போனினை டிராக் செய்வதோடு, லாக் செய்யவும் முடியும்.



ஆப் லாக்கர்: 


நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் சில சமயங்களில் மற்றவர்கள் பயன்படுத்த நேரிடும். அவ்வாறு மற்றவர்கள் பயன்படுத்தும் போது உங்களது தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் ஆப் லாக்கர் செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலியை கொண்டு வாட்ஸ்அப், மெசஞ்சர், பிரவுசர் மற்றும் கேலரி போன்றவற்றை பாதுகாக்க முடியும்.





பிரீ-இன்ஸ்டால் செயலி: 



ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்த பின் பலரும், போனில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வர். ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகள் ஆண்ட்ராய்டு சீராக இயங்க வழி செய்யும். இதனால் இவ்வாறான செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது ஆண்ட்ராய்டு சீராக இயங்குவதை தடுப்பதாக அமையலாம். இதனால் ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யாமல் இருப்பது நல்லது.





பேக்கப்: 



ஸ்மார்ட்போன்களை பேக்கப் செய்வது அவசியமான ஒன்றாகும். ஸ்மார்ட்போன்களை சீரான இடைவெளியில் பேக்கப் செய்வது உங்களது தகவல்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். இவ்வாறு தகவல்களை பேக்கப் செய்ய டைட்டானியம் பேக்கப் செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தகவல்களை பேக்கப் செய்யும். இதில் அனைத்து செயலிகள், சிஸ்டம் ஆப்ஸ் மற்றும் எக்ஸ்டெர்னல் டேட்டா உள்ளிட்டவற்றை பேக்கப் செய்யும். செயலிகள் இயக்கத்திற்கு எவ்வித கோளாறும் ஏற்படாமல் பேக்கப் செய்யும்.




மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...