அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய விண்வெளிய ஆய்வு நிலையம் மற்றும் இத்தாலிய விண்வெளி ஆய்வு நிலையம் கூட்டாக இணைந்து சனிக்கிரகத்தை ஆராயும் முயற்சியில் ஈடுபட்டன.
இதன் ஒருபகுதியாக காசினி- ஹியூஜென்ஸ் என்ற விண்கலம் கடந்த 1997ம் ஆண்டு ஏவப்பட்டது.
2004ம் ஆண்டு சனிக்கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த காசினி தகவல்களை அனுப்பத் தொடங்கியது.
சனிக்கிரகத்தின் வளையங்களை ஒவ்வொன்றாக தாண்டி தற்போது அக்கிரகத்திற்கு 1500 கிலோமீற்றர் உயரத்தில் உள்ளது.
இதனுடைய பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், சனிக்கிரகத்தின் மீது மோதி தூள் தூளாகும் வண்ணம் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
கடந்த 12ம் திகதி சனிக்கிரகத்தை கடைசியாக ஆராய்ந்த காசினி புகைப்படத்தை அனுப்பியது, இதனை காசினியின் கடைசி முத்தம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.