0 Views
புனேவை சேர்ந்த இரு விஞ்ஞானிகள், மிகவும் நெருக்கமான இரண்டு கருந்துளைகளை
(பிளாக் ஹோல்ஸ்) கண்டுபிடித்துள்ளனர். பூமி கிரகத்தில் இருந்து சுமார் 400
மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மிகப்பெரிய பைனரி கருந்துளை
அமைப்பில் கண்டறியப்பட்டுள்ள இந்த கருந்துளைகள் தான், இதுநாள் வரை
பிரபஞ்சத்தில் அறியப்பட்ட மிக நெருங்கிய அமைப்பாகும்.
பூகோளத்திலிருந்து 400 மில்லியன் ஒளியாண்டுகள் (ஒரு ஒளியாண்டு என்பது
9,500,000,000,000 கிலோமீட்டர் ஆகும்) தொலைவில் உள்ள என்ஜிசி 7674
எனப்படும் சுழலும் விண்மீன் மண்டலத்தில் காணப்பட்டுள்ள இந்த நெருக்கமான
இரண்டு மீப்பெரும் கருந்துளைகள், ஒரு ஒளியாண்டை விடவும் குறைவான தொலைவிலேயே
பிரிக்கப்பட்டுள்ளன.
இன்டர்ஸ்டெல்லார் க்ளைமேக்ஸ் காட்சி ஞாபகம் இருக்கிறதா.?
சரி,
இந்தியர்களின் கண்களில் சிக்கிய இந்த மாபெரும் கண்டுபிடிப்பை நினைத்து
பெருமைபட்டுக்கொண்டது போதும். இனி இந்த கருந்துளையின் மரணபீதியளிக்கும்
பக்கங்களை சற்று காண்போம். கருந்துளை என்பது நிஜமா.? அல்லது வெறும்
கற்பனையா.? ஒருநாள் பிளாக் ஹோல் இந்த பூமியை விழுங்குமா.? அப்படி
விழுங்கினால் நம் நிலை என்னவாகும்.? இன்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தின்
க்ளைமேக்ஸ் காட்சியினைப்போல நாம் சுருங்குவோமா.? அல்லது விரிவோமா.? அல்லது
கிழிந்து மரணிப்போமா.?
ஆயிரக்கணக்கான பில்லியன் சூரிய திரள் சக்தி.!
சூப்பர்மாசிவ்
பிளாக் ஹோல்கள் (supermassive black hole) என்பதை மீப்பெரும் கருந்துளை
என்பார்கள். இவைகள்தாம் இருப்பதிலேயே மிகப்பெரிய கருந்துளை வகையாகும்.
இவ்வகை கருந்துளைகள் ஆயிரக்கணக்கான பில்லியன் சூரிய திரள்கள் (Sun Mass)
உடையவை. இவைகள் கிட்டத்தட்ட அனைத்துப் பெரிய விண்மீன் கூட்டத்தின்
மையப்பகுதிகளிலும் காணப்படுகின்றன, நமது பால்வெளி மண்டலத்தில் உட்பட. அதன்
இருப்பு ஒரு விடயமே அல்ல. விடயம் என்னவெனில் அது நம் பூமி கிரகத்தை விழுங்க
தயாராகி கொண்டிருக்கிறது என்பது தான். இந்த அதிர்ச்சியான தகவலை வானியல்
நிபுணரான ப்ரேசர் காயின் (Fraser Cain) வழங்கியுள்ளார்.
மையத்தில் பதுங்கி கிடக்கிறது.!
"மனித
இனத்தின் குடியிருப்பான பூமி கிரகத்தை கொண்டுள்ள விண்மீன், ஒரு நாள் அதன்
மையத்தில் பதுங்கி கிடக்கும் மீப்பெரும் கருந்துளை மூலம் விழுங்கப்படும்"
என்கிறார் ப்ரேசர் காயின். நமது பால்வெளி மண்டலமானது ஆனது சூரியனைக்
காட்டிலும் பல மில்லியன் மடங்கு பெரிய மற்றும் ஒரு கொடூரமான பாரிய
கருந்துளையை சுற்றிதான் சுழல்கிறது என்று கருதப்படுகிறது. என்றாவது ஒரு
நாள் அந்த மகத்தான சக்தி பால்வெளி மண்டலத்தில் உள்ள பிற விண்வெளி
பொருட்களோடு சேர்த்து நமது பூமி கிரகத்தையும் விழுங்கும் என்கிறார் ப்ரேசர்
காயின்.
அவ்வப்போது அது நட்சத்திரங்களை விழுங்கும்
"நமது
பால்வெளி மையத்தில் உள்ள கருந்துளையானது எந்தவொரு கருந்துளையைக்
காட்டிலும் அதிகமான, அதாவது 4.1 மில்லியனுக்கும் அதிகமான சூரிய திரள் கொண்ட
ஒரு மீப்பெரும் கருந்துளையாக திகழ்கிறது. தனுசு விண்மீன் திசையில் உள்ள
அது வெறும் 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது" என்றும் ப்ரேசர்
காயின் தெரிவித்துள்ளார். அந்த கருந்துளையானது நட்சத்திரங்கள் மற்றும்
நட்சத்திர அமைப்புகள் கிழித்துக் கொண்டிருக்கும் செயல்பாட்டில்
உள்ளதென்றும், அவ்வப்போது அது நட்சத்திரங்களை விழுங்கும் என்றும்
கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு மரண விருந்து
"இந்த
கருந்துளையானது எந்த நேரமும் பால்வெளி மீதான விழுங்கலை தொடங்கலாம். நமது
பால்வெளி மட்டுமின்றி அருகிலுள்ள (ஆந்த்ரோமெடா உட்பட) அனைத்தும் அந்த
கருத்துளைக்கு உணவாகும். அப்போது இரண்டு முழு மேக நட்சத்திரங்களும் தொடர்பு
கொள்ளும். 100 மில்லியன் சூரியன் திரள்கள் அளவிலான சக்தியை கொண்டு,
ஆந்த்ரோமெடா விண்மீனின் மையத்தில் உள்ள கருந்துளையுடனான அந்த மோதல்
விண்வெளியில் ஒரு மரண விருந்தாக அமையும்" என்கிறார் ப்ரேசர் காயின்.
மூன்று பண்புகளும் சில கணிப்புகளும்
பிளாக்
ஹோல்களை பொறுத்தமட்டில், ஒப்பீட்டளவிலான வெளிப்புற புரிதல்கள் மட்டுமே
நம்மிடம் உள்ளன. அதன் உள்ளே என்ன நடக்கிறதென்பது மர்மம் தான். இருப்பினும்,
வெளிப்புற ஆய்வுகளில் இருந்து புரிந்துகொள்ளப்பட்ட - பெருந்திரள் (Mass),
சுழற்ச்சி (Spin) மற்றும் மின்னேற்றம் (Electric Charge) என்ற - அதன்
மூன்று பண்புகளை கொண்டு சில கணிப்புகளை நிகழ்த்த முடிகிறது. அதாவது, ஒரு
பிளாக் ஹோல் இந்த பூமியை விழுங்கினால் என்னவாகும் என்பது சார்ந்த
கணிப்புகள். ஒருவேளை பூமி கிரகம், பிளாக் ஹோலுக்குள் விழுந்தால் அல்லது
பிளாக் ஹோல் பூமியை ஈர்த்து விழுங்கினால் நாம் 3 விளைவுகளை எதிர்நோக்கலாம்.
விளைவு 01 : சூடு நீரில் போட்ட நூடூல்ஸ் போல.!
இந்த
முதல் விளைவை - ஸ்பேகட்டிபிக்கேஷன் (Spaghettification) என்கிறார்கள்
அறிவியல் விஞ்ஞானிகள். அதாவது, பிளாக்ஹோலை மிகவும் நெருக்கமான முறையில்
சந்திக்கும் எந்தவொரு பொருளும் நீட்டித்து விரிவடையும் (அதாவது சூடு நீரில்
போட்ட நூடூல்ஸ் போல விரியும்). இந்த ஸ்பேகட்டிபிக்கேஷன் விளைவானது
நூடூல்ஸ் எஃபெக்ட் (Noodles Effect) என்றும் அழைக்கப்படுகிறது. மற்றும்
'ஸ்பேகட்டி' (spaghetti) என்பது ஒரு பாஸ்டா வகையின் பெயர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
உயிர் இனங்கள் விரிந்து - கிழிந்து இறக்க நேரிடும்.!
பூமி
கிரகத்தில் இருக்கும் உயிர் இனங்கள் மற்றும் பெரும்பாலான பொருட்கள்
விரிவடையும் தன்மை (அதாவது எலாஸ்டிக் தன்மை) கொண்டவைகளல்ல. ஆகையால், பிளாக்
ஹோலுக்குள்ளே அல்லது பிளாக் ஹோலுக்கு மிக நெருக்கமாக பூமி சென்றால் உலகில்
உள்ள மனிதர்கள் விரிந்து, அதன் விளைவாய் கிழிந்து இறக்க நேரிடும் என்கிறது
இந்த ஸ்பேகட்டிபிக்கேஷன் விளைவு.
விளைவு 02 : மிக அழகான முப்பரிமாண மயமாகும்.!
பூமி
கிரகம், பிளாக் ஹோலுக்குள் விழுந்தால் - முப்பரிமாண இருப்பை (Holographic
Existence) உணரும் என்கிறது ஒரு அறிவியல் கோட்பாடு. அதாவது பூமி கிரகம்
தன்னை தானே ஒரு நிறைவில்லாத பிரதியை (Imperfect copy) எடுத்துக்கொண்டு ஒரு
வகையான மூப்பரிமான காட்சியை அளிக்குமே தவிர அழிந்து போகாது என்கிறது இந்த
கோட்பாடு. கேட்பதற்கே மிக ரம்மியாமாக இருக்கிறதல்லவா.?!
எல்லையை தீண்டும் எந்தவொரு பொருளும் அழியாது.!
இந்த
"முப்பரிமாண" கோட்பாடானது, இரண்டு எதிரெதிர் கோட்பாடுகளான ஃபூஸ்பால்
(Fuzzbaal) மற்றும் ஃபையர்வால்ஸ் (Firewalls) ஆகிய இரண்டுக்குமே எதிர்
கருத்தை முன் வைக்கும் ஒரு கோட்பாடாக திகழ்கிறது. ஃபூஸ்பால் கோட்பாடானது,
பிளாக் ஹோல் எல்லையை தீண்டும் எந்தவொரு பொருளும் அழியாது என்கிறது.
ஃபையர்வால்ஸ் கோட்பாடோ, பிளாக் ஹோல் எல்லையை தொடும் எந்தவொரு பொருளும்
அழிந்து போகும் என்கிறது.
விளைவு 03 : விரியவும் வாய்ப்பில்லை; கிழியவும் வாய்ப்பில்லை.!
பிளாக்
ஹோல் ஆனது தன்னை நெருங்கும் எந்தவொரு புதிய பொருள் மீதும் அதிகப்படியான
கதிர்வீச்சை (Radiation) வெளிப்படுத்தும் பண்பை கொண்டது. அப்படியாக, பிளாக்
ஹோல் மூலம் ஈர்க்கப்பட்டு ஸ்பேகட்டிபிக்கேஷன் விளைவு ஏற்பட்டு விரிவடைந்து
கிழிவதற்கு முன்னே அதீத கதிர்வீச்சால் முழு கிரகமும்
வருத்தெடுக்கப்படலாம்.
Thanks for Your Visiting.Keep it up.Thank you.. :) :)