நீங்கள் ஒரு டான்சராக இருந்தால் உங்களுக்கு தேவைப்படும் அனைத்து வகை பாடல்களும் மியூசிக்கல்.லி என்ற செயலியில் கிடைக்கும். இந்த செயலியில் உள்ள இசை, பாடல்களை வைத்து நீங்கள் உங்கள் திறமையை வளர்த்து கொள்ளலாம்.
மியூசிக்கல்.லி செயலி என்றால் என்ன?
இதுவொரு இலவச செயலி. இந்த செயலி மூலம் நீங்கள் சுமார் 15 வினாடிகள் கொண்ட இசை வீடியோவை உருவாக்கலாம். மேலும் இதே போன்று பல இசை வீடியோக்களின் கிளிப்புகளை உருவாக்கி பின்னர் அதை ஒன்றன் பின் ஒன்றாக பயன்படுத்தவும் செய்யலாம்.
அதுமட்டுமின்றி இந்த செயலியின் டேட்டாபேஸில் உள்ள மில்லியன் கணக்கான இசை ஆல்பங்களில் உங்களுக்கு தேவையான இசையை தேர்வு செய்து நீங்கள் பயன்படுத்தியும் கொள்ளலாம். நீங்கள் விரும்பும் இசை வீடியோவை செலக்ட் செய்த பின்னர் செல்பி கேமிராவை பயன்படுத்தி இந்த பாடலுக்கான உங்கள் உதட்டு அசைவையும் பார்க்கலாம்.
மேலும் உங்களுக்கு பிடித்த வீடியோக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் பகிரும் வசதியும் இதில் உண்டு,
இசை ஆல்பத்தை தேர்வு செய்வது எப்படி?
இந்த செயலியில் மிகப்பெரிய அளவில் இசை லைப்ரரி உள்ளதால் நம்முடைய தேவை பூர்த்தி ஆகிவிடும். எந்த வகை பாடலாக இருந்தாலும் இதில் கண்டிப்பாக கிடைக்கும். சில குறிப்பிட்ட பாடல்களை தேர்வு செய்ய வேண்டும் என்றால் சியர்ச் பாக்ஸில் குறிப்பிட்டு அதை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இந்த செயலியில் உண்டு.
வீடியோவை பதிவு செய்யும் வசதி
இந்த செயலி மூலம் நீங்கள் வீடியோவை பதிவு செய்ய விரும்பினால் இந்த செயலியின் மத்தியில் உள்ள மஞ்சள் நிற பட்டனை அழுத்த வேண்டும். பின்னர் ஸ்டார்ட் என்ற பட்டனை அழுத்தி நீங்கள் பதிவு செய்ய வேண்டிய இசையை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் குறிப்பிட்ட வினாடிகளுக்கு மட்டும் பதிவு செய்ய விரும்பினால் டைமர் பட்டனை தேர்வு செய்து கொள்ளலாம்
டூயட் பாடலை நாமே கம்போஸ் செய்யலாம்:
இந்த செயலியில் நீங்கள் ஃபாலோ செய்யும் ஒருவருடன் இணைந்து டூயட் பாடலை கிரியேட் செய்யும் அற்புதமான வசதியையும் தந்துள்ளது.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ ஒன்றை எடுத்து அதில் உள்ள '...' என்ற ஐகானை டேப் செய்து டூயட் பாடலை கிரியேட் செய்யலாம். மேலும் இந்த டூயட் வீடியோவை உருவாக்கி அதை பிரிவியூ பார்க்கவும், அதனை மேலும் மெரூகூட்டவும் செய்யலாம்.