Latest
Loading...

29 September 2017

சீக்ரெட் மெஸேஜ் முதல் க்ளோஸ் பிரெண்ட் வரை பேஸ்புக்கின் ரகசியமான செட்டிங்ஸ்.!

0 Views
பேஸ்புக் 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும், இவற்றை உருவாக்கியது மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது நண்பர்கள். தற்போது பேஸ்புக் மூலம் மிக அதிக வருமானம் பெறுகிறார் மார்க் ஜுக்கர்பெர்க். உலக நாடுகள் முழுவதும் பல மில்லியன் மக்கள் இந்த பேஸ்புக் வலைதளத்தை உபயோகம் செய்கின்றனர். இந்தப் பயன்பாட்டில் பல்வேறு அப்டேட் வந்துவிட்டது.



இப்போதெல்லாம் ஒரு பேஸ்புக் கணக்கு இல்லாமல் ஒரு நபரைக் கண்டுபிடிக்க மிகவும் கடினமாக உள்ளது, மேலும் சமூக வலைதளங்கில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது இந்த பேஸ்புக் சேவை. மேலும் இவற்றில் பல தொழில்நுட்பங்கள் அடங்கியுள்ளது.




மெசேஜ் ரெக்வெஸ்ட்: 



பேஸ்புக்கில் இரண்டு இன்பாக்ஸ்கள் உள்ளன, பெரும்பாலும் இவற்றில் ஒன்றை மட்டும் தான் நாம் அதிகமாகப் பயன்படுத்துகின்றோம்,இவற்றில் உள்ள மெசேஜ் ரெக்வெஸ்ட் என்ற செயல்பாட்டை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை, மெசேஜ் ரெக்வெஸ்ட் மூலம் தகவல் மற்றும் செய்திகளை பகிர முடியம்.





லாகின்: 



நீங்கள் எந்த ஸ்மார்ட்போன் மற்றும் டெஸ்க்டாப்பில் பேஸ்புக் பயன்படுத்தினால் அவற்றை மிக எளிமையாக கண்டுபிடிக்க முடியம்,நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் மாடலை கூட அறிந்து கொள்ள முடியும், அதற்க்கான வழிமுறை: பேஸ்புக் லாகின் கிளிக் செய்ய வேண்டும், அதன்பின் செக்யூரிட்டியை தேர்ந்தேடுக்க வேண்டும், பின்பு அதனுள் நீங்கள் பயன்படுத்திய ஸ்மார்ட்போன் மற்றும்டெஸ்க்டாப் தகவலை அறிந்துகொள்ள முடியும்.

லாகின் அப்ரூவல்ஸ்: 



பேஸ்புக் பாதுகாப்பு முறையைப் பற்றி ஏதாவது சந்தேகம் இருந்தால் செக்யூரிட்டி வழியை தேர்ந்தேடுத்து அப்ரூவல்ஸ்-ஐ பயன்படுத்தலாம்,தெரியாத சாதனத்திலிருந்து உங்கள் கணக்கில் உள்நுழையும் போது பாதுகாப்பு அமைப்புக்கு கடவுச்சொல் தேவைப்படும். நீங்கள் ஒருபோதும் பயன்படுத்தாத சாதனத்திலிருந்து உங்கள் பக்கத்திற்கு உள்நுழைந்த போது, உங்கள் தொலைபேசிக்கு அனுப்பப்படும் கடவுச்சொல்லை நீங்கள்பயன்படுத்த வேண்டும்.


ட்ரஸ்டேட் காண்டாக்ட்: 



இந்த சேவை மிகவும் பாதுகாப்பானது, ட்ரஸ்டேட் காண்டாக்ட் என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும், அதன்பின்பு செக்யூரிட்டி டேப்-என்பதை தேர்ந்தேடுக்கவும், மேலும் நம்பகமான தொடர்புகளுக்கு மட்டுமே இவை பயனுள்ளதாக இருக்கும்.

புகைப்படங்கள் : 



சில நேரங்களில் நம் பழைய நண்பர்களோடு நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் பழைய உரையாடல்களைப் பார்க்க வேண்டும் என்றால் இதைச் செய்ய, நீங்கள் கீழே இறக்க வேண்டியதில்லை, உங்கள் நண்பரின் சுயவிவரத்தில் உள்ள ('See Friendship.') ஐகானைக் கிளிக் என்பதைத் தட்டவும்.

வியூ ஆக்ட்டிவ் லாக்: 


பேஸ்புக்கில், நீங்கள் லைக் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் போன்றவற்றை பார்க்க வாய்ப்பு உள்ளது, முகப்பில் உள்ள "வியூ ஆக்ட்டிவ் லாக்" கிளிக் செய்தால் போதும்.


சுயவிவரம்: 



உங்கள் சுயவிவரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை அறிய விரும்பினால் வியூ ஆக்ட்டிவ் லாக் வழியே சென்று (View As) கிளிக் செய்தால் போதும் அறிந்து கொள்ள முடியும்.



வீடியோ சாட்; 



பேஸ்புக் மெசேஜ் பகுதியில் வீடியோ சாட் உள்ளது, அவற்றில் உள்ள கேமராவை கிளிக் செய்தால்போதும் மிக அருமையாகவீடியோ சாட் பயன்படுத்த முடியும்.



பகிரும் வசதி : 



தேர்ந்தேடுத்த நண்பர்களுக்கு மட்டும் புகைப்படம் மற்றும் வீடியோவைப் பகிரும் வசதி உள்ளது. இந்தப் பயன்பாடுஅதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.





எடிட் ப்ரோபைல்: 


நீங்கள் விரும்பிய போஸ்ட் மற்றும் வீடியோ போன்றவற்றை தேர்ந்தேடுத்து சேமித்து வைக்க முடியும். மேலும் இந்த பயன்பாடு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எடிட் ப்ரோபைல் சென்று இந்தப் பயன்பாட்டை செயல்படுத்த முடியும்.

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...