Latest
Loading...

29 September 2017

சிஎம் லான்ச்சர் 3D செயலியை பயன்படுத்தி ஆண்ட்ராய்டை கஸ்டமைஸ் செய்வது எப்படி

0 Views
ஆண்ட்ராய்டு என்றாலே கஸ்டமைசேஷன் தான் அனைவருக்கும் முதலில் நினைவில் வரும். ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் வால்பேப்பர் முதல் இயங்குதளம் வரை மிக எளிமையாக கஸ்டமைஸ் செய்ய முடியும்.


தங்களது ஸ்மார்ட்போன்களை கஸ்டமைஸ் செய்ய நினைப்போர், ஸ்மார்ட்போனை எவ்வாறு ரூட் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பர். இவ்வாறானவர்களுக்கான சேவையாக லான்ச்சர்கள் இருக்கிறது. இங்கு சிஎம் லான்ச்சர் 3D வழங்கும் அம்சங்களை பார்ப்போம்.
முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். இந்த செயலி சீனாவை சேர்ந்த இண்டர்நெட் நிறுவனமான சீட்டா மொபைல்ஸ் உருவாக்கியதாகும்.



அதிக தீம் மற்றும் ஐகான்கள்

இந்த செயலியில் ஒவ்வொரு மெனுவையும் மிக எளிமையாக கஸ்டமைஸ் செய்ய மொத்தம் 10,000 2D / 3D தீம்களும், லாக் ஸ்கிரீன் தீம், வால்பேப்பர், ஐகான் மற்றும் காண்டாக்ட் தீம்கள் இருக்கிறது.

3D தீம் மற்றும் லைவ் வால்பேப்பர்

இந்த அம்சம் கொண்டு 3D விட்ஜெட், 3D தீம், லைவ் வால்பேப்பர்களை பெற முடியும். கூடுதலாக 3D ஃபிட்ஜெட் ஸ்பின்னர், 3D வொல்ஃப், டிரான்ஸ்பேரண்ட் ஸ்கிரீன் தீம் மற்றும் புதிய விஆர் தீம்களும் கிடைக்கிறது.

பாதுகாப்பு



இந்த லான்ச்சர் AV-TEST மூலம் சக்தியூட்டப்படுகிறது, இது ஆண்டி-வைரஸ் இன்ஜின் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் போனினை மால்வேர் அச்சுறுத்தல்கள், பிரைவசி லீக்ஸ் மற்றும் ஒவ்வொரு ஃபோல்டர்களையும் பிரத்தியேக ஃபோல்டரில் வைத்துக் கொள்கிறது.

பேட்டரி பேக்கப்

பெரும்பாலான லான்ச்சர்கள் பேட்டரியை வேகமாக தீர்த்துவிடும் நிலையில், இந்த லான்ச்சர் 30 சதவிகிதம் வரை பேட்டரியை பேக்கிரவுண்டில் செயலிகள் இயங்குவதை நிறுத்தி தானாகவே சேமிக்கும் வசதி கொண்டுள்ளது.

எளிய அமைப்பு

சிஎம் லான்ச்சர் 3D ஃபோல்டர்களை கச்சிதமாக ஒருங்கிணைத்து ஒவ்வொரு ஃபோல்டரையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். மேலும் பூஸ்ட் அண்ட் வைபை பூஸ்ட் அம்சங்கள் ஸ்மார்ட்போனினை வேகமாகவும், சீரான அனுபவத்தை வழங்கும்

செய்திகள்

கஸ்டமைசேஷன் அம்சங்கள் மட்டுமின்றி சிஎம் லான்ச்சர் 3D நேரலை செய்திகளை வழங்குகிறது, இதனை வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ள முடியும்.


சீரான அனுபவம்

இந்த செயலி மிகவும் அதிநவீன 3D அனிமேஷன் இன்ஜின் கொண்டுள்ளதோடு அதிகப்படியான கிராஃபிக் எஃபெக்ட் மற்றும் டிரான்சிஷன் பணிகளை சீராகவும், வேகமாகவும், சுவார்ஸ்யமாகவும் வழங்குகிறது.

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...