உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது, அதன்பின் இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் பல தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவருகிறது,
இருந்தபோதிலும் சில ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்துவிட்டால் பின்பு அவற்றை உபயோகப்படுத்த முடியாது. சில ஸ்மார்ட்போன்கள் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியுடன் வருகிறது, பல ஸ்மார்ட்போன்களில் அந்த வசதி கிடைப்பதில்லை எனவே அந்த ஸ்மார்ட்போன்களை திரும்ப உபயோகப்படுத்துவது மிகமிக கடினம்.
குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது போன்களுக்கு வாரண்ட்டி கொடுக்கு இருந்தபோதிலும் தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனங்கள் திரும்பபெறாது. எனவே ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.
கடல்நீர்:
உப்பு தன்மை கொண்ட கடல் நீரில் ஸ்மார்ட்போன்கள் விழுந்துவிட்டால் அதில் இருக்கும் மெட்டல் பாகங்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனவே அவற்றை மிட்டெடுக்கும் தன்மை மிகக்குறைவு. அதன்பின் நன்னீரில் விழும் ஸ்மார்ட்போன்களை குறிப்பிட்ட செயமுறை மூலம் மிட்டெடுக்க முடியும்.
பேட்டரி & சிம்:
தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் சிம்கார்டை அகற்றிவிட வேண்டும். மேலும் அதில் இருக்கும் மெமரிகார்டு போன்ற இணைப்பு பாகங்களை முதலில் அகற்றிவிட வேண்டும்.
ஹேர் ட்ரையர்:
தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போனை ஹேர் ட்ரையர் போன்ற கருவி மூலம் உலர்த்தக் கூடாது, பின்பு அதில் இருந்துவரும்வெப்பத்தின் அளவு அதிகம் என்பதால் ஸ்மார்ட்போன் அதிகம் பாதிக்கப்படும்.
சார்ஜ்:
சார்ஜ் செய்யும் போர்ட் பொறுத்தவரை சுத்தமான துணி கொண்டு துடைப்பது மிகவும் நல்லது.
சுத்தமான துணி:
சுத்தமான துணி கொண்டு ஸ்மார்ட்போனை துடைப்பது மிகவும் நல்லது, குறிப்பிட்ட நேரம் வரை அந்த துணியைப் பயன்படுத்துவது நல்லது. அப்படி துணி கொண்டு துடைத்தும் குறிபிட்ட நேரத்திற்க்கு பிறகு போன் இயக்கத்திற்க்கு வரவில்லை என்றால், அதைப் பயன்படுத்துவது மிகவும் கடினம்.