Latest
Loading...

27 September 2017

இணைய அச்சுறுத்தல்களில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள சில டிப்ஸ்

0 Views
உலகில் மூன்றில் இருவர் தினசரி வாழ்வில் இணையம் பயன்படுத்தி வருகின்றனர். இணையம் எனும் எல்லையற்ற உலகில் பல்வேறு நன்மைகளும், தீமைகளும் அரங்கேறி வருகின்றன. ஹேக்கிங், தீவிரவாதம் முதல் வாடிக்கையாளர்களின் தரவுகளை திருடி விளம்பரம் செய்வது என நாம் கற்பனையிலும் நினைக்காதவற்றை செய்து வருகின்றனர்.



வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்கள் விரும்பி பயன்படுத்தும் செயலிகள் மூலம் பறித்து கொண்டு அவர்களின் விருப்பத்தை விவரமாக தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்கியோ அல்லது பல்வேறு இதர தகவல்களை கொண்டு அவர்களை மிரட்டும் சம்பவங்கள் அரங்கேறலாம். இவ்வாறு இணைய உலகின் அச்சுறுத்தலில் சிக்காமல் தப்பிக்க சில வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.




தேடுப்பொறி (சர்ச்இன்ஜின்): கூகுள் போன்ற தேடுப்பொறிகள் வாடிக்கையாளர்கள் தேடும் குறியீட்டு வார்த்தைகளை தொடர்ந்து டிராக் செய்யும். இதனால் இணையத்தில் உங்களது தனியுரிமைக்கே இடம் கிடையாது. எனினும் உங்களது தனியுரிமையை காக்கும் வகையில், பிரவுசிங் தகவல்களை டிராக் செய்யாத தேடுப்பொறிகளை பயன்படுத்தலாம். இவை உங்களது தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்




மொபைல் விளம்பரங்கள்: ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த பல்வேறு ஆண்ட்ராய்டு செயலிகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு செயலியும் வாடிக்கையாளர் தகவல்களை வெவ்வேறு விதமாக பயன்படுத்தும். செயலிகளில் இடம்பெற்றிருக்கும் விளம்பரங்கள் உங்களது தகவல்களை பதிவிட கட்டாயப்படுத்தும். இவ்வாறு வாடிக்கையாளர்கள் பதிவிடும் தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு இவை விற்பனை செய்யும். இதனால் தகவல்களை பதிவிடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது.




லொகேஷன் டிராக்கிங்: பல்வேறு செயலிகளும், வலைத்தளங்களும் உங்களது முகவரிகளை தெரிந்து கொண்டு அதற்கேற்ப விளம்பரங்களை பதிவிடும். இது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவே. இதனால் லொகேஷன் டிராக்கிங் டிசேபிள் செய்தோ அல்லது விபிஎன் பயன்படுத்தியோ உங்களது லொகேஷனை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.




குக்கீஸ்: உங்களது இணைய பயன்பாடு குக்கீஸ்களாக சேமித்து வைக்கப்பட்டு, அவை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் விளம்பரங்களை அதற்கேற்ப வழங்க முடியும். இதனால் யாரேனும் உங்களது குக்கீஸ்களை திருடினால் அவற்றை கொண்டு தீங்கு விளைவிக்க முடியும். இதனால் சீரான இடைவெளியில் உங்களது குக்கீஸ்களை அழித்து விடுவது நல்லது.

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...