ரீஸ்டார்ட் செய்யாமல் இருப்பது
கம்ப்யூட்டர் என்பது நம்மைப்போல தான்.அதிக தவகல்களை கையாளும் போதும், இடைவிடாது இயங்கும் போதும் அவ்வப்போது சோர்வடையும். இதை சரி செய்ய கொஞ்சம்
ரீஸ்டார்ட் செய்வது நல்லது. இல்லையென்றால் கம்ப்யூட்டர் ஹேங் ஆவதால் தகவல் இழப்பு ஏற்படும்.
பேக்அப் செய்யாமல் இருப்பது
நமது கம்ப்யூட்டர் தானே எங்கே போகப்போகிறது என்ற எண்ணம் நம்மிடம் இருக்கும். இப்போம் பேக்அப் செய்ய என்ன அவசியம் என தோன்றும். அதை முதலில் தவிர்த்து உங்கள் தகவல்களை டிவிடி, பென் டிரைவ் அல்லது கூகுள் டிரைவ் மூலம் சேமியுங்கள். கம்ப்யூட்டர் எப்போது வேண்டுமானாலும் செயலிழக்கும் என்பதை மறவாதீர்.
கம்ப்யூட்டர் முன் உணவு
கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டே டீ, காபி உணவு உண்பதை தவிருங்கள்.அப்படிசெய்வதால் பல சமயங்களில் உணவு சிந்தும் போது கணினி கீபோர்டு போன்ற பாகங்கள் செயல்படாமல் போகலாம்.
இடைவேளை தேவை
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதும், அமர்ந்திருப்பதும் பல நோய்களை நமக்கு கொடுக்கின்றன. அவ்வப்போது சிறிய இடைவேளை நமக்கு தேவை.
ஒரே பாஸ்வர்ட்
பாஸ்வர்ட்களை நிலையில் கொள்ள சோம்பல்பட்டு ஒரே பாஸ்வர்ட் பல இணைய சேவைகளுக்கு வைப்பது பெரிய தவறு திருத்திக்கொள்ளுங்கள். மேலும் உங்கள் போன் நம்பர், பிறந்த தேதி, பிடித்த நடிகர் என்பது எளிதில் கண்டுபிடிக்கப்படலாம். நம்பர், சிம்பல், எழுத்துக்கள் கொண்ட கலவையாக இருப்பது சிறப்பு.
பல ப்ரோக்ராம் ஒரே நேரம்
நாம் கணினி பயன்படுத்துவதே பல வேலைகளை செய்யத்தான். இருந்தும் பல ப்ரோக்ராம் செயல்களை ஒரே நேரத்தில் செய்வதால் கம்ப்யூட்டர் மெதுவாக செயல்படுகிறது. பல தருணங்களில் செயல் படுவதை நிறுத்துகிறது. இது கம்ப்யூட்டருக்கு பெரிய பிரச்சனையை தரும்.
தேவையில்லாத ப்ரோக்ராம்கள்
நமக்கு தேவையில்லாத ப்ரோக்ராம்கள், பிளக்கின்கள், பைல்கள் ஏதுவாக இருந்தாலும் அழித்திடுங்கள். இல்லையென்றால் சில ப்ரோக்ராம்கள் பின்னணியில் செயல்பட்டு கணினி வேகத்தை குறைக்கும்.
தகவல்களை அளியுங்கள்
நாம் பழைய கம்ப்யூட்டர்களை விற்கவோ, மாற்றவோ நேரிடும் போது நமது பழைய தகவல்களை முற்றிலுமாக அழியுங்கள். இல்லாவிடில் வேறெவரும் நமது தகவல்களை திருட நேரிடும்.
கம்ப்யூட்டர்கள் நமது சகாக்கள். கம்ப்யூட்டர் பழக்கங்களை நாம் மாற்றினால் நமது கம்ப்யூட்டர் மட்டுமல்லாது நாமும் சிறப்பாக நோய் இல்லாமல் வாழலாம்.
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்