ஆம். நீங்கள் நினைப்பது சரிதான்."தற்போது தான் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை" பயன்படுத்துவதாக பில் கேட்ஸ் கூறியுள்ளார். மேலும் அந்த ஸ்மார்ட்போனில் தன் அனுபவத்தை அதிகரிக்கும்படியான பல மைக்ரோசாப்ட் பயன்பாடுகள் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆப்பிள் உற்பத்திகளின் மீது ஆர்வமற்ற நிலை.!
ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்மட இந்த பில்லியனர் தன்னுடைய சாதகமான விருப்பங்களைப் பற்றி பேசினார். அதில் ஆப்பிள் உற்பத்திகளின் மீது ஆர்வமற்றதாக இருப்பதாலேயே, ஆண்ட்ராய்டு மீதான அன்பை தான் கொண்டுள்ளதாக வெளிப்படையாக கூறினார்.
புறக்கணிப்பை நிகழ்த்த பிரதான காரணம்.!
ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு இடையே நிகழும் கணினி வியாபாரப்போட்டி தான், பில் கேட்ஸ் ஐபோன் மற்றும் ஐபாட் மீதான புறக்கணிப்பை நிகழ்த்த பிரதான காரணம் என்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஐபோன் வெளியீட்டுக்கு முன்னரே, பில் கேட்ஸ் மொபைல் சாதனங்கள் மூலம் சந்தை கையகப்படுத்தலை கணித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பில் கேட்ஸ் மட்டுமல்ல.!
ஒருமுறை பில் கேட்ஸ்-ன் மனைவி மெலிண்டா கேட்ஸ் "எங்கள் வீட்டில் ஒரு ஆப்பிள் சாதனம் கூட கிடையாது" என்று கூறியதில் இருந்து பில் கேட்ஸ் மட்டுமல்ல, அவரின் குடும்பத்தில் கூட யாருமே ஆப்பிள் கருவிகளை பயன்படுத்துவதில்லை என்பதையும் அறிய முடிகிறது.
சிறந்த மாற்று, விண்டோஸ் அல்ல.!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை போட்டியாளரான ஆண்ட்ராய்டின் ஸ்மார்ட்போனை பில் கேட்ஸ் பயன்படுத்துகிறார் என்பதை கேட்கும் போது ஆச்சரியமாக இருந்தாலும், மொபைல் உலகில் - ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ்-க்கு ஆண்ட்ராய்டு தான் சிறந்த மாற்று, விண்டோஸ் அல்ல என்பதையும் நாம் இங்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்.