"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" - என்ற பழமொழி ஞாபகம்  இருக்கிறதா.?? இனி எப்போதும் ஞாபகத்தில் இருக்கும், மறக்கவே மாட்டீர்கள்.  அதெப்படி.? - என்று கேட்கிறீர்களா.?? சொல்கிறேன்


சின்ன ரப்பர் பேண்ட், பயன்படுத்தாத பழைய சிரிஞ்ச் (syringe) தொடங்கி  காலியான வாட்டர் பாட்டில்கள் வரை நாள்தோறும் குப்பைதொட்டிக்குள் போடப்படும்  பல பொருட்கள் மிகவும் பயன்தரும் பொருட்களென்று கூறினால் நம்புவீர்களா.?? -  நம்பித்தான் ஆக வேண்டும்.  இங்கே தொகுக்கப்பட்டுள்ள புத்திசாலித்தனமான 13 ஸ்மார்ட்போன் ஹேக்ஸ்களை  பற்றி அறிந்து கொண்டபின், ஒரு குண்டூசியை தூக்கியெறிக்கூட நூறு முறை  யோசிப்பீர்கள்.
ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #09
 பேப்பர் கிளப் (Paperclip) தளர்ந்து விட்டால் தூக்கிப்போட்டு விடாதீர்கள்  அதனை கொண்டு போன் ஸ்டாண்ட் ஒன்றை செய்யுங்கள். இப்போது தொலைபேசி கீழே  விழுமென்ற கவலை இல்லாமல் வீடியோக்களை பார்க்கலாம்.
ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #08
மிகவும் குளிர்கிறதென்பதால் கையுறை அணிந்து கொண்டீர்களா.? ஆனால் கையுறை  போட்டுக்கொண்டே ஸ்மார்ட்போனை இயக்க முடியவில்லையா.? கவலையை விடுங்கள்.  உங்கள் விரல் மீது சில அலுமினிய தாள்களை சுற்றிக்கொள்ளுங்கள், இப்போது டச்  வேலை செய்யும்.
ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #07
 ஸ்மார்ட்போன்களின் போர்ட்களில்/ துளைகளில் உள்ள அழுக்கு மற்றும் தூசியை  சுத்தம் செய்ய ஒரு ஊசியை பயன்படுத்தவும். ஊசியில் ஏற்றப்பட்ட காற்றை  வெளிப்படுவதின் மூலம் மிகவும் சிறிய அளவிலான சுத்தத்தை பெறலாம்; பெரிய  அளவிலான சுத்தத்தை எதிர்பார்க்க வேண்டாம்.
ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #06
நீங்கள் ஒரு பொறுமையான திறமைசாலியாய் இருப்பின், பலூன் ஒன்றின் மூலம் ஒரு  ஸ்மார்ட்போன் கேஸை உருவாக்கலாம். முதலில் பாதி கொள்ளளவில் பலூனை ஊதி, பின்  அதனுள் தொலைபேசி திணிக்க, பலூன் ஒரு கையுறை போன்று உங்கள் ஸ்மார்ட்போனில்  ஒட்டிக்கொள்ளும்.
ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #05
 ஒரு டேப் மற்றும் சில ரப்பர் பேண்டுகளில் இருந்து உங்கள் மிக எளிமையான  "ட்ரைபாட்" ஒன்றை செய்திட முடியும். ஸ்மார்ட்போனை டேப்பிற்குள் திணித்து,  ரப்பர் போட்டு விழாத வண்ணம் லாக் செய்துகொள்ளவும். இந்த "டேப் ட்ரைபாட்"  ஆனது பார்க்கும் பாதி வீடியோவை இது மறைக்கும் என்றாலும் கூட செல்பீக்கள்  மற்றும் விடியோக்கள் எடுக்க சிறப்பாக பயன்படும்.
ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #04
 நீர் நிரப்பட்ட வாட்டர் பாட்டில் ஒன்றை உங்களின் பிளாஷ் லைட்டின் மீதி  நிலைநிறுத்த உங்களால் ஒரு நைட் லேம்ப்தனை உருவாக்க முடியும். பெரிய அளவிலான  பிரகாசத்தை எதிர்பார்க்க முடியாதெனினும்; இரவு நேரங்களில் பிறரை தொந்தரவு  செய்யாத அளவு இது உதவும்.
ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #03
 ரிஸ்க் எடுக்க விரும்பினால் உங்களின் ஸ்மார்ட்போனை நீருக்கடியில் அனுப்பி  புகைப்படம் எடுக்க விரும்பினால் ஒரு ஆணுறை உங்களுக்கு நிச்சயம் உதவும்.
ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #02
 நம்பினால் நம்புங்கள் உங்கள் இயர்போனின் வயரில் உள்ள பொத்தான் ஒரு கேமரா  ட்ரிகர் பட்டன் ஆகும். கருவியுடன் செருகி, கேமராவை ஆன் செய்து எங்காவது  நிலைநிறுத்திய பின்னர் ஹெட்போன் பொத்தானை அழுத்தவும், போட்டோ தானாக கிளிக்  ஆகும்.
ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #01
அசைவப்பிரியர்களே இது உங்களுக்கான ஸ்பெஷல் ஹேக் என்றே கூறலாம். சரிபாதியாக  உடையப்பெற்ற முட்டையோடு ஒன்றை எடுத்து உங்களின் பிளாஷ் லைட்டின் மேல்  கவிழ்த்தி மிகவும் கவனமாக டேப் ஒன்று போட்டு ஒட்டிவிட்டால் - பிரகாசமான  ஸ்பாட் லைட் ரெடி.!









