Latest
Loading...
Showing posts with label Tips. Show all posts
Showing posts with label Tips. Show all posts

04 October 2017

வாட்ஸ்ஆப்பில் ஆட்டோமெட்டிக்காக போட்டோக்கள் டவுன்லோட் ஆவதை தடுப்பது எப்படி?

0 Views
உலகெங்கிலும் 1.2 பில்லியன் மக்களால் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்படுகிறது, இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் அளவிற்க்கு அதிகமாக வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்படுகிறது. இது 2009 ஆம் ஆண்டு ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகிய இருவர்களால் இது உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் ஏற்கவே பணி புரிந்தவர்கள். இவர்கள் யாஹூ நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் பேஸ்புக் நிறுவனத்தில் பணி புரிவதற்காக விண்ணப்பித்திருந்தனர். எனினும் அது பேஸ்புக் நிறுவனத்தால் புறக்கணிக்கப்பட்டது.
இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட இருவராலும் உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் சேவையை பேஸ்புக் நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்க வேண்டியிருந்தது. தற்போது வாட்ஸ்ஆப்பில் உள்ள படங்கள், வீடியோக்கள் சேமிப்பதை நிறுத்துவது எப்படி எனப்பார்ப்போம்.

வாட்ஸ்ஆப்:



வைஃபை உடன் இணைக்கப்பட்டிருக்கும்போது வாட்ஸ்ஆப் கேலரியில் தானாகவே போட்டோ மற்றும் வீடியோவை பதிவிறக்கம் செய்துகொள்ளும். மேலும் அந்த வைஃபை செட்டிங்க்ஸ் சென்று படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றை வரமால் மாற்றி அமைக்கலாம்.

செட்டிங்க்ஸ் ;

முதலில் வாட்ஸ்ஆப் செட்டிங்க்ஸ் அமைப்பை தேர்ந்தேடுக்கவேண்டும். தரவு மற்றும் சேமிப்பக பயன்பாட்டில் சில அமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டும்.


ஆட்டோ:

இந்த மெனுவில், மேலே உள்ள மீடியா ஆட்டோ-பதிவிறக்க விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள்.

ஆவணங்கள்:



புகைப்படங்கள், ஆடியோ, வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, நெவர் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

கேமரா ரோல் :

அதன்பின் நீங்கள் கைமுறையாக பதிவிறக்க விரும்பும் போட்டோ மற்றும் வீடியோவை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
ஸ்மார்ட்போன் கேமராவில் ரோல்லின் தோற்றத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தடுக்க மிக எளிமையாக தேர்வுசெய்யலாம், அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது, அமைப்புகள் மெனுவில் செட்டிங்க்ஸ் சென்று கேமரா ரோல் மெனுவைத் திறந்து, அதை ஆப் செய்ய வேண்டும்.

உங்கள் புகைப்படத்தில் உள்ள பெர்சனல் விபரங்களை நீக்குவது எப்படி?

0 Views



இந்த விபரங்கள் ஒரு தேர்ந்த கேமிராவில் தானாகவே ஜிபிஎஸ் மூலம் பதிவு செய்யப்படும். தேதி, நெரம், கேமிராவின் மாடல், ஐஎஸ் ஓ வேகம் மற்றும் போகல் நீளம் ஆகிய விபரங்கள் ஒரு தேர்வு பெற்ற புரபொசனல் கேமிராமேனுக்கு உபயோகப்படும்.
ஆனால் அதே நேரத்தில் இந்த புகைப்படங்கள் பொதுவானவற்றிற்கு பயன்படுத்தும்போது இந்த விபரங்களை நீக்கிவிடுவது நல்லது. இந்த விபரங்களை எப்படி நீக்குவது என்பது குறித்து தற்போது பார்ப்போம்
ஸ்டெப் 1: முதலில் ரைட் க்ளிக் செய்து அதில் உள்ள பிராப்பர்ட்டீஸ் என்பதை செலக்ட் செய்ய வேண்டும்




ஸ்டெப் 2: பின்னர் டீடெய்ல்ஸ் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 3:
 இதில் நீங்கள் EXIF மெட்டாடேட்டை என்ற ஃபைலை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதில் உள்ள Remove Properties and Personal information என்பதை க்ளிக் செய்ய வேண்டும்
ஸ்டெப் 4: தற்போது Remove Properties செலக்ட் செய்து அதில் உள்ள ஃபைல்களை தேர்வு செய்ய வேண்டும்
ஸ்டெப் 5: அதில் எந்தெந்த பகுதிகளை நீக்க வேண்டும் அல்லது அனைத்தையும் நீக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள் ப
ஸ்டெப் 6: பின்னர் தேர்வு செய்தவுடன் ஓகே பட்டனை அழுத்தினால் நீங்கள் செலக்ட் செய்த விபரங்கள் மறைந்துவிடும்,

03 October 2017

நைட் முழுக்க போனுக்கு சார்ஜ் போடலாமா என்ற கேள்வி உங்களுக்கும் இருக்கா?... அப்ப இத படிங்க...

0 Views
full-night-charging-right-or-wrong


அப்படி இரவு ழுமுக்க சார்ஜ் போட்டு காலையில் தான் சார்ஜிலிருந்து எடுப்போம். அவ்வாறு இரவு முழுக்க சார்ஜ் போடலாமா?... அப்படியே போட்டாலும் உங்கள் ஸ்மார்ட்போன் என்ன ஆகும்?

பொதுவாக எந்த போனாக இருந்தாலும் பேட்டரி ஓரளவுக்கு மேல் ஹீட் ஆகக்கூடாது. ஆனால் இப்போது வரும் போன்களில் புராசஸர் வேகம் அதிகமாக்குவதால் பேட்டரி அதிகமாக ஹீட் ஆகும் வாய்ப்பு உண்டு.

அதனால் எவ்வளவு நேரம் சார்ஜ் போடுவது  என்ற கேள்விக்கு குறிப்பிட்ட சில போன்களைப் பொருத்துதான் நமக்கு பதில் கிடைக்கும்.
பொதுவாக எந்த போனாக இருந்தாலும் பேட்டரி ஓரளவுக்கு மேல் ஹீட் ஆகக்கூடாது. ஆனால் இப்போது வரும் போன்களில் புராசஸர் வேகம் அதிகமாக்குவதால் பேட்டரி அதிகமாக ஹீட் ஆகும் வாய்ப்பு உண்டு. அதனால் எவ்வளவு நேரம் சார்ஜ் போடுவது என்ற கேள்விக்கு குறிப்பிட்ட சில போன்களைப் பொருத்துதான் நமக்கு பதில் கிடைக்கும். இதை எப்படி தெரிந்துகொள்வது? நீங்கள் ஓய்வாக இருக்கும்பொழுது, போனில் 20 சதவீதத்துக்கும் குறைவாக பேட்டரி இருக்கும்பொழுது சார்ஜில் போட்டுவிட்டு, அது முழுமையாக சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று பாருங்கள். சில போன்கள் 2 மணிநேரம் எடுக்கும். சில போன்கள் 5 மணிநேரம் எடுக்கும். அந்த நேர அளவைப் பொருத்து நீங்கள் இரவில் சார்ஜ் போடுங்கள். இப்போது வரும் சில போன்களில் ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் ஏறியதும் கரண்ட் சப்ளை கட் செய்யப்படும். அப்படிப்பட்ட போன் பயன்படுத்துபவர்கள் இரவு முழுக்க சார்ஜ் போடுவதால் எந்த பிரச்னையும் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். அதுவும் பிரச்னை தான். குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜ் போட்டு எடுத்துவிடுங்கள். அப்போதுதான் உங்கள் போனை அதிகமாக ஹீட் ஆவதிலிருந்து தடுக்க முடியும்.
இதை எப்படி தெரிந்துகொள்வது?

நீங்கள் ஓய்வாக இருக்கும்பொழுது, போனில் 20 சதவீதத்துக்கும் குறைவாக பேட்டரி இருக்கும்பொழுது சார்ஜில் போட்டுவிட்டு, அது முழுமையாக சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று பாருங்கள். சில போன்கள் 2 மணிநேரம் எடுக்கும். சில போன்கள் 5 மணிநேரம் எடுக்கும். அந்த நேர அளவைப் பொருத்து நீங்கள் இரவில் சார்ஜ் போடுங்கள்.

இப்போது வரும் சில போன்களில் ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் ஏறியதும் கரண்ட் சப்ளை கட் செய்யப்படும். அப்படிப்பட்ட போன் பயன்படுத்துபவர்கள் இரவு முழுக்க சார்ஜ் போடுவதால் எந்த பிரச்னையும் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். அதுவும் பிரச்னை தான்.

குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜ் போட்டு எடுத்துவிடுங்கள். அப்போதுதான் உங்கள் போனை அதிகமாக ஹீட் ஆவதிலிருந்து தடுக்க முடியும்.


8 வகை ஸ்கேம் இமெயில்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

0 Views இன்றைய டெக்னாலஜி உலகில் இமெயில் பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. இந்த நிலையில் ஸ்கேம் என்று சொல்லக்கூடிய மோசடி இமெயில் குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த ஸ்கேம் இமெயில் நமக்கு பல தொல்லைகள் தரும் என்பதால் இப்படிப்பட்ட இமெயில்களின் வகைகள் குறித்து தற்போது பார்ப்போம்.

spam mail




லாட்டரி ஸ்கேம் லாட்டரி என்ற பெயரில் ஸ்கேம் இமெயில் பலருக்கு வந்திருக்கும். உங்களுக்கு மிகப்பெரிய தொகை லாட்டரி பரிசு கிடைத்திருப்பதாகவும், அந்த தொகையை பெற சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்றும் இமெயில் வருவதுண்டு. இந்த விஷயத்தில் முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எந்தவித லாட்டரியிலும் நாம் கலந்து கொள்ளாமல் பரிசு கிடைக்காது. எனவே இவ்வகை இமெயில்களை யோசிக்காமல் டெலிட் செய்துவிடுங்கள்


சர்வே ஸ்கேம் 


சர்வே ஸ்கேம் என்ற இமெயில்களை அனுப்பி அதில் கலந்து கொண்டு நமது கருத்தை கேட்கும் வகையில் சில இமெயில்கள் வரும். அவற்றிற்கு ஒரு தொகை நமக்கு கிடைக்கும் என்றும் இருக்கும். உலக வெப்பமாகுதல், உலகப்போர் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்த சர்வேயாக பெரும்பாலும் இருக்கும். 

ஆனால் இந்த சர்வே லிங்குகளை நீங்கள் க்ளிக் செய்தால் அது உடனே மால்வேர் இணையதளத்திற்கு அழைத்து செல்லும், அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்துவிடும் அபாயம் ஏற்படும். அதன்பின்னர் ஹேக்கர்கள் உங்கள் கம்ப்யூட்டரை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து உங்களது முக்கிய பரிவர்த்தனைகளின் பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. எனவே சர்வே இமெயில்களை ஓப்பன் செய்ய வேண்டாம்.

வீட்டில் இருந்தே வேலை: 



வீட்டில் இருந்து கொண்டே எளிதாக ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற இமெயில்கள் வருவது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. வேலையை தொடங்கும் முன் சாப்ட்வேர் பெறுவதற்காக அல்லது பயிற்சிக்காக உங்களிடம் இருந்து ஒரு தொகையை பெறவே இந்த இமெயில்கள். இதுபோன்ற மோசடி இமெயில்களில் மாட்டிக்கொள்ளாமல் உடனே டெலிட் செய்துவிடுங்கள். வீட்டில் இருந்தே வேலை என்ற இமெயில்கள் பெரும்பாலும் பொய்யானவையே

ஃபிஷ்ஷிங் இமெயில் 


இந்த வகை இமெயில்கள் சட்டபூர்வமான அமைப்புகளைப் போலவே தோற்றமளிக்கும். ஆனால் உங்கள் பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டுகளை அபகரித்து உங்களைக் கவர்ந்திழுக்கும் ஸ்கேம் என்பதால் இவ்வகை இமெயில்களில் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

நைஜீரியா இமெயில் 




இவ்வகை இமெயில்கள் உங்களது நெருங்கிய நண்பரை போல தகவல் அனுப்புவார்கள். தங்களிடம் ஒரு பெரிய தொகை இருப்பதாகவும், அதை உங்களுடைய வங்கி கணக்குக்கு அனுப்ப உள்ளதாகவும், அதற்கான செலவுத்தொகையாக மட்டும் ஒரு தொகையை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிப்பார்கள். இவ்வகை இமெயில்கள் 419 மோசடி என்று பெயர். பெரும்பாலும் நைஜீரியாவில் இருந்து இவ்வகை இமெயில்கள் வருவதால் இவற்றையெல்லாம் படிக்காமலேயே அழித்துவிடலாம்

குவிஸ் ஸ்கேம்: 


இவ்வகை இமெயில்களில் உங்களுக்கு ஒரு கேள்வி கேட்டு பதிலளிக்குமாறும், அதற்கு உங்களுக்கு ஒரு பரிசுத்தொகை கிடைக்க்கும் என்றும், ஆனால் இதில் கலந்து கொள்வதற்கு ஒரு தொகை வேண்டும் என்றும் கேட்கும். நீங்கள் தொகையை அனுப்பினால் அதோடு அவ்வளவுதான். எனவே இவ்வகை இமெயில்களை தவிர்த்துவிடுவது நல்லது

மறைமுக URL ஸ்கேம்:


 இவ்வகை இமெயில்கள் பெரும்பாலும் டுவிட்டரின் URL போல் இருக்கும். இந்த வகை இமெயில்களை க்ளிக் செய்வதற்கு முன்னர் அதன் புரொஃபலை பார்த்து, அது உண்மையான அக்கவுண்ட் தானா? என்பதை சோதனை செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் அந்த URLல் உள்ளே மறைந்திருக்கும் மால்வேர் உங்கள் கம்ப்யூட்டரை ஹேக் செய்ய வைத்துவிடும்.

குழந்தை-சிகிச்சை ஸ்கேம்: 





நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி, அந்த குழந்தையின் சிகிச்சைக்காக ஒரு சிறு தொகையை மட்டும் அனுப்ப சொல்லி இமெயில் வரும். நீங்கள் இரக்க குணமுடையவராக இருந்தால் அந்த தொகையை ஆன்லைன் மூலம் அனுப்புவீர்கள். ஆனால் உங்களது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு உங்கள் அக்கவுண்டில் உள்ள அனைத்து தொகையையும் இழக்கும் நிலை இதனால் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே உஷாராக இருங்கள்.







02 October 2017

ஸ்மார்ட்போன் பேட்டரியை பொறுத்தமட்டில் மீறக்கூடாத 4 விதிகள் உள்ளன, அவைகளென்ன.?

0 Views
4-rules-help-double-your-phone-s-lifespan


எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு, முக்கியமாக உங்கள் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன் பேட்டரிக்கும் ஒரு எல்லை உண்டு. அது மீறப்படும் போது - டமால் டூமீல் தான். பேட்டரியை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத ஒருவர் அது பாழாகிப்போன பின்னரோ வெடிப்பிற்கு உள்ளாகிய பின்னரே வருத்தப்படுவதிலும், ஸ்மார்ட்போன் நிறுவனம் மீது கோபம் கொள்வதிலும் அர்த்தமே இல்லை.
முதலில் உங்கள் கையில் இருப்பது ஒரு கருவி என்பதை உணருங்கள், நீங்கள் நினைக்கும்படி அது நடந்துகொள்ளும், ஆனால் எல்லா நேரங்களில் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதை புரிந்துகொள்வதற்கு ஸ்மார்ட்போன் பேட்டரி பாதுகாப்பு சார்ந்த மீறக்கூடாத 4 விதிகள் உள்ளன. அவைகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவைகளென்ன.?

மீறக்கூடாத விதி #04

தொலைபேசி முழுமையாக (100%) சார்ஜ் ஆகிவிட்ட பின்னர் தொடர்ந்து சார்ஜர் பின் ஸ்மார்ட்போனோடு செருகப்பட்டிருப்பது செய்யக்கூடாத ஒரு விடயமாகும். சார்ஜ் செய்யப்படும் சாதனமானது ஏற்கனவே 100% சார்ஜ் ஆகிவிட்டதை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உடனே அன்பிளக் செய்யவும். பேட்டரி வாழ்நாளை மிக வேகமாக கரைக்கும் காரியங்களில் மிகவும் மோசமானது இதுதான்.

மீறக்கூடாத விதி #03

ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். உங்கள் தொலைபேசி 100% என்ற அளவு வரை சார்ஜ் ஆகியிருக்க வேண்டுமென்ற தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போன் எப்போதுமே 100% பேட்டரி கொண்டிருக்க வேண்டியதில்லை. ஸ்மார்ட்போனை எப்போதுமே அதன் முழு கொள்ளளவில் வைத்திருப்பது பேட்டரியை மிகவும் சேதப்படுத்தும்.
4-rules-help-double-your-phone-s-lifespan



மீறக்கூடாத விதி #02

உங்கள் தொலைபேசியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சார்ஜ் செய்ய மறக்காதீர்கள். முடிந்த வரை போதுமான அளவு சார்ஜ் செய்துவிட்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்துங்கள் இல்லையெனில் சார்ஜ் தேவை என்ற நோட்டிபிக்கேஷன் வரும் முன்பே சார்ஜருடன் கனெக்ட் ஆகிவிடுங்கள். பேட்டரி தீரும் கடைசி நொடிவரைக்கும் காத்திருந்து மொபைல் பயன்பாடு நிகழ்த்துவது தவறு.

மீறக்கூடாத விதி #01

ஓவர்ஹீட்டிங் ஆவதை அதாவது கருவி மிகவும் சூடாகுவதை கட்டாயம் தவிர்க்கவும். பேட்டரிகள் மிகவும் வெப்ப உணர்திறன் கொண்டவைகளாகும். ஒருவேளை சார்ஜ் செய்த பிறகும் கூட, உங்கள் கேஜெட்கள் சூடாகினால் அதன் கேஸ்களை கழற்றிவிட்டு அதை சார்ஜ் செய்யுங்கள். மறுபுறம், நீங்கள் உங்கள் கருவியையோ சூரிய ஒளியின் கீழ் வைத்திருக்கவில்லை என்பது உறுதி செய்துகொள்ளுங்கள்.
Thanks for your Visiting..Keep it up.. :) :)

எதுவித Software-ம் இன்றி Internet வேகத்தை கிட்டத்தட்ட 30%-ற்கும் மேல் அதிகரிப்பது எப்படி?

0 Views

இணையம் உபயோகிக்கும் அனைவருக்கே உள்ள பொதுவான பிரச்சினை, இணைய வேகம். சில இடங்களில் நீங்கள், உங்கள் இணைய வழங்குனரிடம் இருந்து சிறப்பான வேகத்தை பெற்று கொள்ள முடியுமாக இருந்தாலும், பல இடங்களில் டவர் சரியாக கிடைக்காத காரணத்தால் இன்டர்நெட் வேகம் மிக மந்தமாகவே உள்ளது.



இப்படியான சந்தர்ப்பங்களில் உங்கள் கணனியில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இன்டர்நெட் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.


உங்கள் கணனியில் Start Menu-இற்கு சென்று அங்கே Run என்று Type செய்து Enter-ஐ அழுத்தவும்.

தோன்றும் window-வில் gpedit.msc என்று Type செய்து Enter-ஐ அழுத்தவும்.


அடுத்து தோன்றும் Window-வில் கீழ் குறிப்பிட்டுள்ள Path-ஐ சென்றடையவும்.

Computer configuration > Administrative templates >  network > QoS Packet Scheduler


அங்கே வலது பக்கத்தில் காணப்படும் Limit Reservable Bandwidth எனும் Option-ஐ Double Click செய்யவும்.



அடுத்து திறக்கப்படும் Window-வில் Enable எனும் Option-ஐ Click செய்து Bandwidth Limit-ஐ 0 என்று வைத்து OK Button-ஐ Click செய்யுங்கள்.



அவ்வளவு தான். இப்போது நீங்கள் இணையத்தை உபயோகிக்கும் போது கண்டிப்பாக இணைய வேகத்தில் மாற்றத்தை உணர்வீர்கள். இந்த சிறிய Settings மாற்றமானது உங்கள் கணனியில் இருக்கும் இணைய வேக கட்டுபாட்டை மாற்றி, இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது.

27 September 2017

இணைய அச்சுறுத்தல்களில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள சில டிப்ஸ்

0 Views உலகில் மூன்றில் இருவர் தினசரி வாழ்வில் இணையம் பயன்படுத்தி வருகின்றனர். இணையம் எனும் எல்லையற்ற உலகில் பல்வேறு நன்மைகளும், தீமைகளும் அரங்கேறி வருகின்றன. ஹேக்கிங், தீவிரவாதம் முதல் வாடிக்கையாளர்களின் தரவுகளை திருடி விளம்பரம் செய்வது என நாம் கற்பனையிலும் நினைக்காதவற்றை செய்து வருகின்றனர்.



வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்கள் விரும்பி பயன்படுத்தும் செயலிகள் மூலம் பறித்து கொண்டு அவர்களின் விருப்பத்தை விவரமாக தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்கியோ அல்லது பல்வேறு இதர தகவல்களை கொண்டு அவர்களை மிரட்டும் சம்பவங்கள் அரங்கேறலாம். இவ்வாறு இணைய உலகின் அச்சுறுத்தலில் சிக்காமல் தப்பிக்க சில வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.




தேடுப்பொறி (சர்ச்இன்ஜின்): கூகுள் போன்ற தேடுப்பொறிகள் வாடிக்கையாளர்கள் தேடும் குறியீட்டு வார்த்தைகளை தொடர்ந்து டிராக் செய்யும். இதனால் இணையத்தில் உங்களது தனியுரிமைக்கே இடம் கிடையாது. எனினும் உங்களது தனியுரிமையை காக்கும் வகையில், பிரவுசிங் தகவல்களை டிராக் செய்யாத தேடுப்பொறிகளை பயன்படுத்தலாம். இவை உங்களது தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்




மொபைல் விளம்பரங்கள்: ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த பல்வேறு ஆண்ட்ராய்டு செயலிகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு செயலியும் வாடிக்கையாளர் தகவல்களை வெவ்வேறு விதமாக பயன்படுத்தும். செயலிகளில் இடம்பெற்றிருக்கும் விளம்பரங்கள் உங்களது தகவல்களை பதிவிட கட்டாயப்படுத்தும். இவ்வாறு வாடிக்கையாளர்கள் பதிவிடும் தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு இவை விற்பனை செய்யும். இதனால் தகவல்களை பதிவிடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது.




லொகேஷன் டிராக்கிங்: பல்வேறு செயலிகளும், வலைத்தளங்களும் உங்களது முகவரிகளை தெரிந்து கொண்டு அதற்கேற்ப விளம்பரங்களை பதிவிடும். இது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவே. இதனால் லொகேஷன் டிராக்கிங் டிசேபிள் செய்தோ அல்லது விபிஎன் பயன்படுத்தியோ உங்களது லொகேஷனை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.




குக்கீஸ்: உங்களது இணைய பயன்பாடு குக்கீஸ்களாக சேமித்து வைக்கப்பட்டு, அவை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் விளம்பரங்களை அதற்கேற்ப வழங்க முடியும். இதனால் யாரேனும் உங்களது குக்கீஸ்களை திருடினால் அவற்றை கொண்டு தீங்கு விளைவிக்க முடியும். இதனால் சீரான இடைவெளியில் உங்களது குக்கீஸ்களை அழித்து விடுவது நல்லது.

25 September 2017

உங்கள் மொபைல் போன் மூலம் இரகசிய கேமரா இருப்பதை கண்டறிவது எப்படி?

0 Views

how to find the hidden camera? உங்கள் மொபைல் போன் மூலம் இரகசிய கேமரா இருப்பதை கண்டறிவது எப்படி ? App Download Link :- http://quainator.com/DA6
Thanks For Visiting..Share To all. :) :)

22 September 2017

ஆண்ட்ராய்டு போனில் இண்டர்னல் ஸ்டோரேஜை காப்பாற்றி கொள்ள 10 சிறந்த வழிகள்

0 Views
ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் பலர் தங்கள் போனில் உள்ள மெமரியை தேவையில்லாத சில விஷயங்களுக்காக செலவு செய்திருப்பார்கள். புகைப்படங்கள், வீடியோக்கள், பாடல்கள், ஃபைல்கள், செயலிகள் என பலவிதங்களில் போனில் சேமித்து வைப்பதால் ஸ்டோரேஜ் மிக வேகமாக காலியாகி அதனால் போன் மெதுவாக இயங்குவது அல்லது ஹேங் ஆவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.


இந்த பிரச்சனை தீர நீங்கள் ரெகுலராக சில விஷயங்களை கடைபிடிக்கலாம். அவை என்னென்ன என்று பார்ப்போமா!

ஆண்ட்ராய்டின் ஸ்டோரேஜ் டூல்ஸை பயன்படுத்துங்கள் 

இந்த டூல்ஸ் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள எவை எவை எவ்வளவு ஸ்டோரேஜ்களை எடுத்து கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த டூல்ஸ் அதை நீங்கள் விளக்கமாக தெரிந்து கொள்ள உதவும். அதன் பின்னர் அதிக ஸ்டோரேஜ் எடுத்து கொண்டவைகள் உண்மையிலேயே உங்களுக்கு தேவைதானா? என்பதை முடிவு செய்தால் உங்களது இண்டர்னல் ஸ்டோரேஜ் காப்பாற்றப்படும்


புகைப்படங்களை தரம் குறையாமல் கம்ப்ரஸ் செய்யுங்கள்; 

கேமிரா செல்போன் வந்த பின்னர் நாம் ஒவ்வொருவரும் கேமிராமேனாகி விட்டோம். பார்ப்பதை எல்லாம் புகைப்படம் எடுக்க வேண்டும், செல்பி எடுக்க வேண்டும் என்ற வழக்கம் தானாகவே வந்துவிட்டது. இந்த நிலையில் நாம் எடுத்த புகைப்படங்கள் 1MB இல் இருந்து 5MB வரை இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அதிக ஸ்டோரேஜ் காலியாகிவிடும். எனவே சைஸ் குறையாமல், தரம் குறையாமல் கம்ப்ரஸ் செய்ய டூல்ஸ் உள்ளது. அதன் மூலம் கம்ப்ரஸ் செய்தால் ஸ்டோரேஜ் மிச்சமாகும்


போனில் இருந்து கிளவுட் ஸ்டோரேஜுக்கு மாற்றுங்கள் 

ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜை மிச்சப்படுத்த இதுவொரு எளிய வழி. நீங்கள் உங்கள் போனில் வைத்திருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் கொண்ட பைல்கலை அப்படியே கிளவுட் ஸ்டோரேஜுக்கு மாற்றிவிடுங்கள். தேவைப்படும்போது கிளவுட் ஸ்டோரேஜில் இருந்து எடுத்து பார்த்து கொள்ளலாம். கூகுள் பிளஸ் மூலம் இதை மிக எளிதாக செய்யலாம். அதேபோல் டிராப் பாக்ஸில் உங்கள் போனில் உள்ள புகைப்படம் உள்ளிட்ட பைல்களை பாதுகாத்து வைத்து கொள்ளலாம்,. இதன்மூலம் போன் ஸ்டோரேஜ் அதிகளவு மிச்சப்படும்


கேச்சி, ஜங்க் பைல்களை சுத்தம் செய்யுங்கள் 

ஆண்ட்ராய்ட் போனில் அடிக்கடி ஜங்க் ஃபைல்கள் மற்றும் கேச்சி ஃபைல்கள் அதிகரித்து கொண்டே இருக்கும். எனவே இந்த ஃபைல்களை ரெகுலராக சுத்தம் செய்து கொண்டே வந்தால் ஸ்டோரேஜ் காலியாவதில் இருந்து தப்பிக்கலாம். C கிளினர் மூலம் ஜங்க் மற்று கேச்சி ஃபைல்களை எளிதில் டெலிட் செய்துவிடலாம். போனில் உள்ள தேவையில்லாத இந்த பைல்களை மொத்தமாகவோ, பகுதி பகுதியாகவோ க்ளின் செய்யும் வசதி இதில் உள்ளது.

தேவையில்லாத மீடியா ஃபைல்களை டெலிட் செய்துவிடுங்கள் 

 ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ் அப்-ஐ அதிகம் பயன்படுத்துவதால் அதில் பகிரப்படும் ஃபைல்களும் அதிகமாக இருக்கும். ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்பினாலோ அல்லது பெற்று கொண்டாலோ அவை நம்முடைய போன் மெமரியில் இணைந்திருக்கும். இவற்றை அவ்வப்போது கவனித்து தேவையில்லாத ஃபைல்களை டெலிட் செய்துவிட்டால் போன் மெமரி காப்பாற்றப்படும்


செயலிகளை SD கார்டுக்கு மாற்றுங்கள் 

 நாம் டவுன்லோடு ஆகும் ஒவ்வொரு செயலியும் நம்முடைய போன் ஸ்டோரேஜை அதிகளவு கிரகித்து கொள்ளும். எனவே டவுன்லோடு செய்து முடித்ததும், அதை போன் மெமரியில் இருந்து SD மெமரிக்கு மாற்றிவிட்டால் போன் மெமரி அப்படியே இருக்கும்.

பயன்படுத்தாத செயலிகளை அன் - இன்ஸ்டால் செய்துவிடவும் 

  ஒரு ஆர்வத்தில் பல செயலிகளை நாம் டவுன்லோடு செய்துவிடுவோம். ஆனால் அதன் பின்னர் நாம் அவற்றை உபயோகிப்பதே இல்லை. அல்லது எப்போதாவது உபயோகிப்போம். இவ்வாறான செயலிகளை தேடி கண்டுபிடித்து அன் - இன்ஸ்டால் செய்துவிடுங்கள். இதனால் தேவையில்லாமல் அடைத்து கொண்டிருக்கும் போன் மெமரி தப்பிக்கும்.


முன்கூட்டியே பதிவாகி இருக்கும் செயலிகளையும் அன் -இன்ஸ்டால் செய்யுங்கள் 

 நாம் போன் வாங்கும்போதே ஒருசில செயலிகள் அதில் இருக்கும். அந்த செயலிகள் நமக்கு பெரும்பாலும் தேவைப்படாததாகவே இருக்கும். எனவே அதை அன் -இன்ஸ்டால் செய்தால் நமக்கு நிறைய ஸ்டோரேஜ் மிச்சப்படும். ஒருசில செயலிகளை அன் -இன்ஸ்டால் செய்ய அனுமதிக்காது. இருப்பினும் அதற்குரிய வழிமுறையை தேடி அன் -இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது.

ஸ்க்ரீன் ஷாட்டுக்களை தேடிப்பிடித்து அழியுங்கள் 

ஆண்ட்ராய்டு போனில் ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது மிக எளிதான ஒன்று. நாம் அவ்வப்போது தேவைக்கேற்ப ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது வழக்கமான ஒன்றே. ஆனால் அதன் தேவை முடிந்ததும் டெலிட் செய்துவிடுவது நல்லது. ஏனெனில் ஒரு சின்ன ஸ்க்ரீன் ஷாட் அதிக மெமரியை எடுத்து கொள்ளும்.

லாக்ஸ் ஃபோல்டர்: 

இந்த போல்டர்கள் பொதுவாக போனின் இண்டர்னல் ஸ்டோரேஜை அதிக அளவு சாப்பிடும் தன்மை உடையது. எனவே லாக் போல்டர்கள் உங்கள் போனில் இருக்கின்றதா என்பதை சரிபார்த்து இருந்தால் அதை உடனே டெலிட் செய்யுங்கள். இதனால் உங்கள் போனின் ஏராளமான மெமரி மிச்சப்படும்.

Thanks for Your Visiting..Keep it up .. :) :)

20 September 2017

ப்ளூ வேல் சேலன்ஞ் கேமை விளையாடுபவர்களை கண்டுபிடிப்பது எப்படி.?

0 Views ப்ளூ வேல் சேலன்ஞ் கேமை தடுக்க ஒரே வழி - அதன் கொடூரமான 50 டாஸ்க்குகளையும், நாம் அனைவரும் அறிந்துவைத்துக் கொள்வது மட்டும் தான். வேறு உடனடி தீர்வுகளை இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஆக, பின்வரும் 50 டாஸ்குகளில் எதாவது ஒன்றை, யாரேனும் செய்து பார்த்தாலோ அல்லது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வண்ணம் நடந்து கொண்டாலோ - உடனே உஷாராகி கொள்ளுங்கள். மனநிலையோடு விளையாடும் ப்ளூ வேல் கேமில் சிக்கி தவிக்கும் ஒவ்வொரு நபருக்கும் உங்களின் உதவி நிச்சயம் தேவை.


ப்ளூ வேல் கேமின் கொடூரமான 50 டாஸ்க்குகளை அறிந்து கொள்வதால், அதை ப்ளூ வேல் கேம் விளையாடுவதற்கான ஒரு ஊக்குவிப்பாகவோ அல்லது மறைமுகமான தூண்டுதலாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம்.

முக்கியமாக ப்ளூ வேல் சேலன்ஞ் செய்யச்சொல்லும் கொடூரமான 50 டாஸ்க்குகள் மீது சுவாரசியம் கொள்ள வேண்டாம் - ஒரு 10 முதல் 15 டாஸ்க்குகள் வரை செய்து பார்ப்போம், பின்னர் கைவிட்டுவிடுவோமென்ற முட்டாள்த்தனமான முடிவுக்கும் வர வேண்டாம்.

உயிரோடு விளையாடும் ஒரு கேமிற்கு எதிராக நாம் செயல்படவுள்ளோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை ப்ளூ வேல் மீதான ஆர்வம் கிளம்பினால் கட்டுரை படிப்பதை கைவிடவும்.


அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து

டாஸ்க் 01 : ஒரு ரேஸர் கொண்டு கையில் "f57" என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

டாஸ்க் 02 : அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து, கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை பார்க்க வேண்டும்.


திமிங்கிலத்தை வரைந்து

டாஸ்க் 03 : ஒரு ரேஸர் கொண்டு நரம்புகளோடு சேர்த்து மணிக்கட்டை வெட்டிக்கொள்ள வேண்டும், ஆனால் மிகவும் ஆழமாக வெட்டிக்கொள்ள கூடாது.வெறும் 3 வெட்டுக்கள் நிகழ்த்தி அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

டாஸ்க் 04 : காகிதத்தில் ஒரு திமிங்கிலத்தை வரைந்து, அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்

தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள வேண்டும்

டாஸ்க் 05 : நீங்கள் ஒரு திமிங்கிலமாக மாற தயாராக இருந்தால், காலின் மீது "YES" என்று வெட்ட வேண்டும். இல்லையென்றால் - கைப்பகுதியில் பல முறை வெட்டிக்கொள்ள வேண்டும் (அதாவது தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள வேண்டும்)

டாஸ்க் 06 : சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு டாஸ்க்.

ஸ்டேட்டஸ் டைப் செய்ய வேண்டும்.

டாஸ்க் 07 : கையில் "f57" என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

டாஸ்க் 08 :
ஒரு ரஷியன் ஆன்லைன் சமூக ஊடக மற்றும் சமூக வலைப்பின்னல் சேவையான கொண்டெக்ட் (VKontakte) அக்கவுண்டில் "#i_am_whale" என்று ஸ்டேட்டஸ் டைப் செய்ய வேண்டும்.

வீட்டுக்கூரைக்கு மேலே ஏற வேண்டும்

டாஸ்க் 09 : பயத்தை நீங்கள் கடக்க வேண்டும்.

டாஸ்க் 10 : அதிகாலை 4:20 மணிக்கு எழுந்து ஒரு வீட்டுக்கூரைக்கு மேலே ஏற வேண்டும் (மிக உயரமான கூரையாக இருக்க வேண்டும்).

சைக்கடெலிக்,பயமுறுத்தும் வீடியோ

டாஸ்க் 11: ஒரு ரேஸர் கொண்டு கையில் திமிங்கலம் ஒன்றை செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

டாஸ்க் 12: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை நாள் முழுவதும் பார்க்க வேண்டும்.


 உதட்டை வெட்டிக்கொள்ள வேண்டும் 
டாஸ்க் 13: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் இசையை கேட்க வேண்டும்.

டாஸ்க் 14: உதட்டை வெட்டிக்கொள்ள வேண்டும்.


கையை குத்திக்கொள்ள வேண்டும்

டாஸ்க் 15 : பல முறை ஒரு ஊசி கொண்டு கையை குத்திக்கொள்ள வேண்டும்.

டாஸ்க் 16 : அவர்களுக்கு அவரே வலியை ஏற்படுத்தி, நோய்வாய்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பாலத்தின் மீதேறி

டாஸ்க் 17 : கண்டுபிடிக்க முடிந்த மிகவும் உயரமான கூரையின் மீது ஏற வேண்டும், சில நேரம் விளிம்பில் நிற்க வேண்டும்.

டாஸ்க் 18 : ஒரு பாலத்தின் மீதேறி அதன் விளிம்பில் நிற்க வேண்டும்.


விளையாடுபவர் நம்பகமானவரா

டாஸ்க் 19 : ஒரு கிரேன் மீது ஏற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஏறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

டாஸ்க் 20 : விளையாடுபவர் நம்பகமானவரா எனக் கண்காணிப்பாளர் கேட்டறிவார்.


கண்காணிப்பாளருடன் பேச வேண்டும்

டாஸ்க் 21 : ஸ்கைப் உதவியுடன் மற்றொரு திமிங்கலத்துடன், அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன் பேச வேண்டும்.

டாஸ்க் 22 : ஒரு கூரை மீதேறி, அதன் விளிம்பில் உட்கார்ந்து கால்களை தொங்க விட வேண்டும்.


இரகசிமான டாஸ்க்

டாஸ்க் 23 : மற்றொரு சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு டாஸ்க்.

டாஸ்க் 24 : இரகசிமான டாஸ்க்.


மரணிக்க வேண்டுமென்ற தேதி

டாஸ்க் 25 : திமிங்கலத்துடன் (அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன்) சந்திப்பு நிகழ்த்த வேண்டும்.

டாஸ்க் 26 : எப்போது மரணிக்க வேண்டுமென்ற தேதியைக் கண்காணிப்பாளர் சொல்வார், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தண்டவாளங்கள் உள்ள பகுதி

டாஸ்க் 27 : அதிகாலை 4:20 மணிக்கு விழித்து அருகாமையில் கண்டுபிடிக்க முடிந்த தண்டவாளங்கள் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்.

டாஸ்க் 28 : ஒரு நாள் முழுவதும் யாருடனும் பேசக்கூடாது.

ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:20 மணிக்கு

டாஸ்க் 29 : "நான் ஒரு திமிங்கிலம்" என்ற சபதமெடுக்க வேண்டும்.

டாஸ்க் 30-49 : ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:20 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். கண்காணிப்பாளர் அனுப்பும் திகில் வீடியோக்கள் மற்றும் இசையை கேட்க வேண்டும், நாள் ஒன்றிற்கு ஒரு வெட்டை உடலில் நிகழ்த்த வேண்டும் மற்றும் ஒரு "திமிங்கலத்துடன்" பேச வேண்டும்.

குதித்து மரணிக்க வேண்டும்

டாஸ்க் 50 : ஒரு உயரமான கட்டிடத்தின் மேலே ஏறி அங்கிருந்து குதித்து மரணிக்க வேண்டும்.

இந்த 50 டாஸ்குகளில் எதாவது ஒன்றை, குறிப்பாக ஒருவர் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் எழுவதை கண்டால் அல்லது உடலில் காயங்கள் ஏற்படுத்திக் கொள்வதை அறிந்தால் அல்லது ஒருவர் தன்னை மிகவும் தனிமை படுத்திக்கொள்வதாய் உணர்ந்தால் உஷாராகி கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தை சேர்ந்த அந்த நபரோ அல்ல உங்களின் நண்பரோ ப்ளூ வேல் கேமின் பிடியில் சிக்கியுள்ளார் என்பதை கண்டறிந்து கொள்ளுங்கள், அவரையும், அவரின் உயிரையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.

Share and Tell Your Friends..Thanks For Your Visting.. :) :)

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...