Latest
Loading...

02 October 2017

எதுவித Software-ம் இன்றி Internet வேகத்தை கிட்டத்தட்ட 30%-ற்கும் மேல் அதிகரிப்பது எப்படி?

0 Views

இணையம் உபயோகிக்கும் அனைவருக்கே உள்ள பொதுவான பிரச்சினை, இணைய வேகம். சில இடங்களில் நீங்கள், உங்கள் இணைய வழங்குனரிடம் இருந்து சிறப்பான வேகத்தை பெற்று கொள்ள முடியுமாக இருந்தாலும், பல இடங்களில் டவர் சரியாக கிடைக்காத காரணத்தால் இன்டர்நெட் வேகம் மிக மந்தமாகவே உள்ளது.



இப்படியான சந்தர்ப்பங்களில் உங்கள் கணனியில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இன்டர்நெட் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.


உங்கள் கணனியில் Start Menu-இற்கு சென்று அங்கே Run என்று Type செய்து Enter-ஐ அழுத்தவும்.

தோன்றும் window-வில் gpedit.msc என்று Type செய்து Enter-ஐ அழுத்தவும்.


அடுத்து தோன்றும் Window-வில் கீழ் குறிப்பிட்டுள்ள Path-ஐ சென்றடையவும்.

Computer configuration > Administrative templates >  network > QoS Packet Scheduler


அங்கே வலது பக்கத்தில் காணப்படும் Limit Reservable Bandwidth எனும் Option-ஐ Double Click செய்யவும்.



அடுத்து திறக்கப்படும் Window-வில் Enable எனும் Option-ஐ Click செய்து Bandwidth Limit-ஐ 0 என்று வைத்து OK Button-ஐ Click செய்யுங்கள்.



அவ்வளவு தான். இப்போது நீங்கள் இணையத்தை உபயோகிக்கும் போது கண்டிப்பாக இணைய வேகத்தில் மாற்றத்தை உணர்வீர்கள். இந்த சிறிய Settings மாற்றமானது உங்கள் கணனியில் இருக்கும் இணைய வேக கட்டுபாட்டை மாற்றி, இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது.

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...