Latest
Loading...
Showing posts with label Apple. Show all posts
Showing posts with label Apple. Show all posts

28 September 2017

நேர்காணலில் ஆப்பிளை பொளந்த பில் கேட்ஸ்; ஐபோன்வாசிகளே கேட்டு மனசு கஷ்டப்படவேணாம்.!

0 Views மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான, உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் ஆண்ட்ராய்டு வாசிகளை குஷிப்படுத்தும் மறுகையில் ஆப்பிள் ஐபோன் பிரியர்களை வெறுப்பேற்றும் ஒரு விடயத்தை பகிர்ந்துள்ளார்.



ஆம். நீங்கள் நினைப்பது சரிதான்."தற்போது தான் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை" பயன்படுத்துவதாக பில் கேட்ஸ் கூறியுள்ளார். மேலும் அந்த ஸ்மார்ட்போனில் தன் அனுபவத்தை அதிகரிக்கும்படியான பல மைக்ரோசாப்ட் பயன்பாடுகள் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.





ஆப்பிள் உற்பத்திகளின் மீது ஆர்வமற்ற நிலை.! 

ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்மட இந்த பில்லியனர் தன்னுடைய சாதகமான விருப்பங்களைப் பற்றி பேசினார். அதில் ஆப்பிள் உற்பத்திகளின் மீது ஆர்வமற்றதாக இருப்பதாலேயே, ஆண்ட்ராய்டு மீதான அன்பை தான் கொண்டுள்ளதாக வெளிப்படையாக கூறினார்.

புறக்கணிப்பை நிகழ்த்த பிரதான காரணம்.! 

ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு இடையே நிகழும் கணினி வியாபாரப்போட்டி தான், பில் கேட்ஸ் ஐபோன் மற்றும் ஐபாட் மீதான புறக்கணிப்பை நிகழ்த்த பிரதான காரணம் என்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஐபோன் வெளியீட்டுக்கு முன்னரே, பில் கேட்ஸ் மொபைல் சாதனங்கள் மூலம் சந்தை கையகப்படுத்தலை கணித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.




பில் கேட்ஸ் மட்டுமல்ல.! 

ஒருமுறை பில் கேட்ஸ்-ன் மனைவி மெலிண்டா கேட்ஸ் "எங்கள் வீட்டில் ஒரு ஆப்பிள் சாதனம் கூட கிடையாது" என்று கூறியதில் இருந்து பில் கேட்ஸ் மட்டுமல்ல, அவரின் குடும்பத்தில் கூட யாருமே ஆப்பிள் கருவிகளை பயன்படுத்துவதில்லை என்பதையும் அறிய முடிகிறது.

சிறந்த மாற்று, விண்டோஸ் அல்ல.! 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை போட்டியாளரான ஆண்ட்ராய்டின் ஸ்மார்ட்போனை பில் கேட்ஸ் பயன்படுத்துகிறார் என்பதை கேட்கும் போது ஆச்சரியமாக இருந்தாலும், மொபைல் உலகில் - ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ்-க்கு ஆண்ட்ராய்டு தான் சிறந்த மாற்று, விண்டோஸ் அல்ல என்பதையும் நாம் இங்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்.


27 September 2017

15 வருட வரிச்சலுகை கேட்கிறது ஆப்பிள் நிறுவனம்

0 Views

கடந்த  வருடம் 2016 மே மாதம் நான்கு நாள் பயணமாக  இந்தியா வந்த ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் கூக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது நினைவிருக்கலாம் .  இந்த சந்திப்பின் நோக்கமாக “ Refurbished செய்யப்பட்ட iPhone களை “ இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆப்பிள் தரப்பில் இருத்து முன் வைக்கப்பட்டது .
“Refurbished “   என்பது ஏற்கனவே கடையில் விற்பனை செய்யப்பட்ட பொருளை வாரண்டி பிரச்சனையில் முழுவதுமாக நிறுவனமே   அந்த பொருளை திரும்பப்பெற்றுக் கொண்டு , வாடிக்கையாளாருக்கு புதிய பொருளை கொடுப்பார்கள் . அந்த பழுதான பொருளை மீண்டும் தயாரிப்பு தொழிற்ச்சாலைக்கு அனுப்பி பழுதை சரி செய்து மீண்டும் புதிய பொருள் போன்றே பெட்டியில் போட்டு விற்பார்கள் ,இந்த வகை பொருட்களுக்கு  “Refurbished Products “ என சந்தையில் சொல்வோம் .
உலகம் முழுவதும் இருந்து திரும்பபெறப்பட்ட வாரண்டி பிரச்சனையுள்ள iPhone களை பட்டி டிங்கரிங் பார்த்து இந்தியாவில் குவித்து , புதிய போன் விலைக்கு கொஞ்சம் கம்மியா விற்பனை செய்யும் தில்லாலங்கடி திட்டத்துடன் தான் ஆப்பிள் நிறுவனம் அணுகியது . ஆனால் கசாப்புக் கடையில் தானே தலையைக்  கொடுத்த ஆடு கதையாக ., ஆப்பிள் நிறுவனம் உங்கள் தொழிற்ச்சாலையை இந்தியாவில் தொடங்குங்கள் , நாங்கள் உதவுகிறோம் என நரேந்திர மோடி அந்த சந்திப்பில் சொன்னர் .ஆப்பிள் நிறுவனத்தின் பல அலுவலகங்கள் இந்தியாவில் இருந்தாலும்  , அவர்களின் iPhone தயாரிப்பு தொழிற்ச்சாலையை “Make in India “ திட்டத்தின்  ஒரு பகுதியாக தொடங்கவைப்பதை ஒரு பெருமையான நிகழ்வாகவே பி .ஜெ .பி  அரசு கருதியது .
கடந்த வருடம் 2016 மே மாதம் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்த ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் கூக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது நினைவிருக்கலாம் . இந்த சந்திப்பின் நோக்கமாக “ Refurbished செய்யப்பட்ட iPhone களை “ இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆப்பிள் தரப்பில் இருத்து முன் வைக்கப்பட்டது . “Refurbished “ என்பது ஏற்கனவே கடையில் விற்பனை செய்யப்பட்ட பொருளை வாரண்டி பிரச்சனையில் முழுவதுமாக நிறுவனமே அந்த பொருளை திரும்பப்பெற்றுக் கொண்டு , வாடிக்கையாளாருக்கு புதிய பொருளை கொடுப்பார்கள் . அந்த பழுதான பொருளை மீண்டும் தயாரிப்பு தொழிற்ச்சாலைக்கு அனுப்பி பழுதை சரி செய்து மீண்டும் புதிய பொருள் போன்றே பெட்டியில் போட்டு விற்பார்கள் ,இந்த வகை பொருட்களுக்கு “Refurbished Products “ என சந்தையில் சொல்வோம் . உலகம் முழுவதும் இருந்து திரும்பபெறப்பட்ட வாரண்டி பிரச்சனையுள்ள iPhone களை பட்டி டிங்கரிங் பார்த்து இந்தியாவில் குவித்து , புதிய போன் விலைக்கு கொஞ்சம் கம்மியா விற்பனை செய்யும் தில்லாலங்கடி திட்டத்துடன் தான் ஆப்பிள் நிறுவனம் அணுகியது . ஆனால் கசாப்புக் கடையில் தானே தலையைக் கொடுத்த ஆடு கதையாக ., ஆப்பிள் நிறுவனம் உங்கள் தொழிற்ச்சாலையை இந்தியாவில் தொடங்குங்கள் , நாங்கள் உதவுகிறோம் என நரேந்திர மோடி அந்த சந்திப்பில் சொன்னர் .ஆப்பிள் நிறுவனத்தின் பல அலுவலகங்கள் இந்தியாவில் இருந்தாலும் , அவர்களின் iPhone தயாரிப்பு தொழிற்ச்சாலையை “Make in India “ திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கவைப்பதை ஒரு பெருமையான நிகழ்வாகவே பி .ஜெ .பி அரசு கருதியது . இதை உணர்ந்து கொண்ட ஆப்பிள் நிறுவனம் , நாங்கள் இங்கே தொழிற்ச்சாலை வைக்க எங்களின் நிபந்தனைகளை அரசு ஏற்கவேண்டும் என வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர் .

உதிரி பாகங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் Countervailing Duty (CVD) எனும் கலால் வரியை எங்கள் நிறுவனத்திற்கு மட்டும் 15 வருடங்களுக்கு விதிக்க கூடாது எனும் வைத்துள்ளார்கள் . வரவிருக்கும் GST வரிவிதிப்பு முறையில் இப்படி ஒரு நிறுவனத்திற்கு வரிவிலக்கு கொடுப்பது சாத்தியமில்லை என நிதிச் செயலாளர் காஸ்முக் அதியா தெரிவித்துள்ளார் . இப்படி ஆப்பிளுக்கு சலுகை கொடுத்தால் அதே வகை உற்பத்தியில் இருக்கும் Samsung, Xiomi நிறுவங்களும் இதே சலுகையை எதிர்பார்க்கும் ஆபத்து உள்ளதால் , இந்திய அரசு முடிவெடுக்க முடியாமல் திணறிவருகிறது . குறிப்பாக CVD வரியில் சலுகை கேட்பது , இந்தியாவினுள் இருந்து மூலப்பொருள் , உதவிப்பொருட்களை வாங்கி உற்பத்தி செய்யும் வகையில் இல்லாமல் , வெளிநாட்டில் இருந்து அவற்றை இறக்குமதி செய்து அவற்றை பூட்டி சேர்த்து (Assemble ) விற்கும் வகையிலான தொழிற்ச்சாலையாகவே இது இருக்கும் என நாம் எளிதில் கணிக்கலாம் . மேலும் , எங்கள் நிறுவனத்திற்கு வரும் பொருட்களை சுங்க அதிகாரிகள் ஓவ்வொரு முறையும் சோதனை செய்யவோ, ஆவணங்கள் அனுமதிக்காக காத்திருக்கவோ கூடாது . எப்போது வந்தாலும் சோதிக்காமல் உடனே சுங்க அனுமதி தரவேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம் .

இதை உணர்ந்து கொண்ட ஆப்பிள்   நிறுவனம் , நாங்கள் இங்கே தொழிற்ச்சாலை வைக்க எங்களின் நிபந்தனைகளை அரசு ஏற்கவேண்டும்  என வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர் .

உதிரி பாகங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் Countervailing Duty (CVD) எனும் கலால் வரியை எங்கள் நிறுவனத்திற்கு மட்டும் 15 வருடங்களுக்கு விதிக்க கூடாது எனும் வைத்துள்ளார்கள் .  வரவிருக்கும் GST வரிவிதிப்பு முறையில் இப்படி ஒரு நிறுவனத்திற்கு வரிவிலக்கு  கொடுப்பது சாத்தியமில்லை என நிதிச் செயலாளர் காஸ்முக் அதியா தெரிவித்துள்ளார் . இப்படி ஆப்பிளுக்கு  சலுகை கொடுத்தால் அதே வகை உற்பத்தியில் இருக்கும் Samsung, Xiomi நிறுவங்களும் இதே சலுகையை எதிர்பார்க்கும் ஆபத்து உள்ளதால் , இந்திய அரசு முடிவெடுக்க முடியாமல் திணறிவருகிறது . குறிப்பாக CVD வரியில் சலுகை கேட்பது , இந்தியாவினுள் இருந்து மூலப்பொருள் , உதவிப்பொருட்களை  வாங்கி உற்பத்தி செய்யும் வகையில் இல்லாமல் , வெளிநாட்டில்  இருந்து அவற்றை இறக்குமதி செய்து அவற்றை பூட்டி சேர்த்து (Assemble )  விற்கும் வகையிலான  தொழிற்ச்சாலையாகவே இது இருக்கும் என நாம் எளிதில் கணிக்கலாம் .
மேலும் , எங்கள் நிறுவனத்திற்கு வரும் பொருட்களை சுங்க அதிகாரிகள் ஓவ்வொரு முறையும் சோதனை செய்யவோ, ஆவணங்கள் அனுமதிக்காக காத்திருக்கவோ கூடாது . எப்போது வந்தாலும் சோதிக்காமல் உடனே சுங்க அனுமதி தரவேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம் .

20 September 2017

உங்கள் ஐபோனில் ஐஓஎஸ் 11-ஐ பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி.?

0 Views ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன, அதன்படி இப்போது ஆப்பிள் சாதனங்களுக்கு  ஐஒஎஸ் 11 அப்டேட் வழங்குகிறது, இந்த ஐஒஎஸ் அப்டேட் பொறுத்தவரை பல மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆப்பிள் போன் பொதுவாக இந்தியாவை விட மற்ற நாடுகளில் தான் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,  மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஐஒஎஸ் அப்டேட்.



செப்டம்பர்-19:

2017 செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் இந்த புதிய ஐஒஎஸ் 11 அப்டேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மக்களிடையே பல
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஆப்பிள்:

ஆப்பிள் ஐபோன் 7,ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6, ஐபோன் எஸ்இ, ஐபோன் 5எஸ்,
12.9-இன்ச் ஐபேட் ப்ரோ(2017), 12.9-இன்ச் ஐபேட் ப்ரோ(2016), 10.5-இன்ச் ஐபேட் ப்ரோ, 9.7-இன்ச் ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர், ஐபேட் (2017),
ஐபேட்(2017), ஐபேட் மினி 4, ஐபேட் மினி 3, ஐபேட் மினி 2, ஐபாட் டச் 6வது தலைமுறை போன்ற சாதனங்களுக்கு இந்த ஐஒஎஸ் அப்டேட்
கிடைக்கும். மேலும் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யும் வழிமுறையை பார்ப்போம்.


வழிமுறை-1:

முதலில் ஐபோன் சாதனங்களில் செட்டிங்ஸ்>ஜெனரல்> சாப்ட்வேர் அப்டேட் தேர்வு செய்து, உங்கள் சாதனம் புதுப்பிப்புகளை சோதித்து, பின்னர் கிடைக்கும் ஐஒஎஸ்-11-ஐ மேம்படுத்துதல் வேண்டும்.

வழிமுறை-2:

ஐஒஎஸ்-11-ஐ தேர்வு செய்து முதலில் டவுன்லோடு செய்ய வேண்டும், அதன்பின்பு உங்களுடைய சாதனங்களில் இன்ஸ்டால் செய்தல் வேண்டும்.


வழிமுறை-3:

மெதுவான இணைய இணைப்பு இருந்தால் சிறிது நேரம் எடுக்கலாம். எனவே இண்டர்நெட் வேகம் சற்று அதிகமாக இருந்தால் நல்லது.

வழிமுறை-4:

ஆப்பிளின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நீங்கள் பார்க்கும்போது ஏற்றுக்கொள்ளவேண்டும்.

வழிமுறை-5:

பின்பு உங்கள் ஆப்பிள் சாதனங்களில் ஐஒஎஸ்-11 பயன்படும்.

iOS 11 அப்டேட் செய்தவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

0 Views

ஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது மொபைல் சாதனங்களுக்கான புதிய இயங்குதள பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது.
பல புதிய அம்சங்களுடன் அறிமுகமாகிய இப் பதிப்பு தொடர்பில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை பயன்படுத்துபவர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

எனினும் iOS 11 எனப்படும் இப் புதிய பதிப்பினால் எதிர்நோக்கப்படும் பிரச்சினை தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது iOS 11 ஆனது 64 Bit இயங்குதளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே 64 Bit அப்பிளிக்கேஷன்களை மட்டுமே இதில் நிறுவி பயன்படுத்த முடியும்.

ஆனால் முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட 32 Bit அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்த முடியாது.

இதன் காரணமாக iOS 11 இயங்குதள பதிப்பினை அப்டேட் செய்தவர்கள் பல அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்த முடியாது தவித்து வருகின்றனர்.
இவ்வாறான சில அப்பிளிக்கேஷன்களை வீடியோவில் காணலாம்.


14 September 2017

அசத்தும் ஐபோன் X: அசாத்திய சிறப்பம்சங்கள்

0 Views ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழா சிறப்பு எடிஷன் ஐபோன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.





கலிபோர்னியா:

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் மிக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் X ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஸ்பேஸ்ஷிப் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற்ற முதல் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் வாட்ச் 3, ஆப்பிள் டிவி 4K, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.




எனினும் நேற்றைய நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக ஐபோன் X அமைந்தது. ஆப்பிள் ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள பிரத்தியேக ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்களை கவரும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில், புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஐபோன் X அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஐபோன் டென் என அழைக்கப்படும் ஐபோன் X கிளாஸ், ஸ்டெயின்லெஸ் மற்றும் அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் ஐபோன் X சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் OLED பேனல் கொண்டுள்ளது.



வடிவமைப்பு:

முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போனில் இதுவரை ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படாத உறுதி தன்மை கொண்ட கிளாஸ், சர்ஜிக்கல்-கிரேடு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புறங்களில் கிளாஸ் வழங்கப்பட்டு்ள நிலையில் புதிய ஐபோன் X வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.



டிஸ்ப்ளே:

ஆப்பிள் வரலாற்றில் முதல் முறையாக ஐபோன் சாதனத்தில் OLED பயன்படுத்தப்பட்டுள்ளது. 5.8 இன்ச் அளவு கொண்ட ஸ்கிரீன் மற்றும் OLED வாடிக்கையாளர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்கும். சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே 2436x1125 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளதோடு எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே மற்றும் நிறங்களை அதிக பிரகாசமாக பிரதிபலிக்கிறது. ஸ்கிரீனில் டேப் செய்து, போனினை வேக் செய்ய முடியும். இக்குசன் ட்ரூ டோன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் மற்றும் 3D டச் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

சிப்செட்:

ஐபோன் X ஸ்மார்ட்போன் புதிய A11 பயோனிக் சிப்செட் கொண்டு இயங்குகிறது. இதுவரை வெளியான ஸ்மார்ட்போன் பிராசஸர்களில் அதிக செயல்திறன் கொண்ட பிராசஸர் இது என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த பிராசஸர் ஆப்பிள் GPU உடன் இணைந்து அதிக தரமுள்ள கேமிங் அனுபவத்தை சீராக வழங்க வழி செய்யும். A10 சிப்செட்டை விட புதிய GPU 30 சதவிகிதம் வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கேமரா:

புதிய ஐபோன் X ஸ்மார்ச்போனில் டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா, வைடு ஆங்கிள் கேமராவில் f/1.8 அப்ரேச்சர், டெலிபோட்டோ லென்ஸ் f/2.4 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. கேமராவுடன் குவாட்-எல்இடி ட்ரூ டோன் பிளாஷ் புகைப்படங்களை அதிக தரமுள்ளதாக வழங்கும். டூயல் கேமராக்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளதோடு போர்டிரெயிட் மோட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் புகைப்படங்களில் ஃபில்ட்டர் சேர்க்காமல் லைட் மாற்ற வழி செய்யும்.

கேமராக்களுடன் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அம்சம் மற்றும் மிக நேர்த்தியான மோஷன் டிராக்கிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ஐபோன் X இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபிக்களை எடுக்க ட்ரூடெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு போர்டிரெயிட் மோட் லைட்டிங்கில் செல்ஃபிக்களை எடுக்க முடியும்.



ஃபேஸ் ஐடி:

அதிகம் எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டன் வழங்கப்படவில்லை. ஹோம் ஸ்கிரீன் செல்ல ஸ்மார்ட்போன் திரையில் கீழ் இருந்து மேல்பக்கமாக ஸ்வைப் செய்தால் ஹோம் ஸ்கிரீன் திறக்கும். சிரியுடன் பேச பக்கவாட்டில் உள்ள பட்டனை கிளிக் செய்ய வேண்டும். போனினை அன்லாக் செய்ய போனினை பார்த்தாலே போதுமானது. புதிய ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் கொண்டு ஐபோன் உங்களை அறிந்து கொண்டு அன்லாக் செய்யும்.

ஆப்பிளின் A11 பயோனிக் நியூரல் இன்ஜின் மூலம் இந்த அம்சம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இதன் ட்ரூ டெப்த் கேமரா அமைப்பு IR கேமரா மூலம் IR புகைப்படங்களை எடுக்கும். குறிப்பாக உங்களது முகத்தில் எவ்வாறு சிகை அலங்காரங்களை மாற்றிக் கொண்டாலும், ஐபோன் உங்களை கண்டறிந்து போனினை அன்லாக் செய்யும். புதிய ஃபேஸ் ஐடி ஆப்பிள் பே மற்றும் இதர செயலிகளிலும் வேலை செய்யும். 



அனிமோஜி:

ஐபோன் X ஸ்மார்ட்போனில் உள்ள புதிய எமோஜி அம்சம் அனிமோஜி என அழைக்கப்படுகிறது, இதனை உங்களது முக பாவணைகளை அடிப்படையாக கொண்டு வேலை செய்யும். ட்ரூடெப்த் கேமரா மூலம் முக பாவணைகளை அறிந்துகொண்டு இந்த அம்சம் வேலை செய்கிறது. வாடிக்கையாளர்கள் வழங்கும் முக பாவணைகளை அப்படியே அனிமோஜிக்களாக மாற்றுவதால், இவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

பேட்டரி:

ஐபோன் X ஸ்மார்ட்போனில் முந்தைய ஐபோன் 7-இல் வழங்கப்பட்டதை விட அதிக பேட்டரி வழங்கப்பட்டிருப்பதால், முந்தைய மாடலை விட கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இத்துடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் போன்றே வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏர்பவர் என்ற சாதனத்தை கொண்டு ஒரே சமயத்தில் மூன்று ஆப்பிள் சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய முடியும்.

விலை:

64 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ள ஐபோன் X விலை 999 டாலர்களில் துவங்குகிறது. அகோடபர் 27-ம் தேதி முதல் முன்பதிவு துவங்கும் நிலையில் நவம்பர் 3-ம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன் X 64 ஜிபி ரூ.89,000 என்றும், ஐபோன் X 256 ஜிபி ரூ.1,02,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

உங்களின் மொபைலின் IMEI நம்பரை வைத்து திருடிய மொபைலை மீட்க !!

0 Views


உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.

இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI-International Mobile Equipment Identity) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்
உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.
உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதற்கு cop@vsnl.net  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
மின்னஞ்சலில் முக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள் :
  • பெயர்(NAME)
  • முகவரி(ADDRESS)
  • போன் என்ன மாடல்(MOBILE PHONE MODEL)
  • அந்த போனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர்(MOBILE PHONE COMPANY)
  • கடைசியாக போன்செய்த எண்(LAST DIALED NUMBER)
  • உங்கள் மின்னஞ்சல் முகவரி(EMAIL ADDRESS)
  • எந்த தேதியில் தொலைந்து(LOST ON DATE)
  • போனின் அடையாள எண் (IMEI)
ஆகிய தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம்.

Police Department -ன் திறன் வாய்ந்த GPRS and INTERNET இணைந்த வலுவானதொரு கட்டமைப்பின்(Strong Structure) மூலம் உங்கள் போனை யாராவது பயன்படுத்தும் பட்சத்தில் அந்நபர் இருக்கும் இடம், மற்றும் பயன்படுத்தும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். உங்களுக்கும் இதுப் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துவார்கள்.

அதனால் நண்பர்களே முதலில் உங்களுடைய மொபைல் போனில் IMEI எண்ணை மறக்காமல் உங்கள் டயரி போன்ற ஏதாவதொன்றில் *#06# என்பதைக் கொடுத்து தோன்றும் எண்ணைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் விலையுயர்ந்தCostly Mobile Phone தொலைந்துபோனால் காவல்துறை உதவியுடன் மீண்டும் பெற அது வழிவகுக்கும்.

15 January 2016

உங்கள் ஸ்மார்ட் போனில் Photo Locker Apps-களை பாவிக்கிறீர்களா? அதில் இருக்கும் ஆபத்துக்கள் என்ன?

0 Views ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் அனைவருமே பொதுவாக இன்ஸ்டால் செய்து வைத்திருக்கும் ஒரு செயலி தான் இந்த Photo Lockers. Android போன் பாவிப்பவர்கள் Google Play Store-இற்கு சென்று பார்த்தால் தெரியும், எவ்வளவு போட்டோ லாக்கர் செயலிகள் குவிந்து கிடக்கிறது என்று. அதே போல் iPhone பாவனையாளர்களுக்கும் பல்வேறு வகையான புகைப்படங்களை மறைத்து வைக்க கூடிய செயலிகள் App Store-இல் குவிந்து கிடக்கிறது.

சாதரணமாக இந்த வகையான செயலிகள் தேவைப்படுவது, நமது தனிப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் அல்லது வேறு எதாவது File-களை பிறர் பார்வையில் இருந்து மறைத்து வைப்பதற்காகவே ஆகும். 

ஆனால் போடோக்களை மறைப்பதாக நினைத்து இந்த செயலிகளை நமது ஸ்மார்ட் போனில் நிறுவி, நமக்கு நாமே ஆபத்தை தேடி கொள்கிறோம்.



எப்படி என்று ஒரு சில உதாரணங்களோடு சொல்கிறேன்.


நாம் போடோக்களை மறைப்பதட்கென்று குறிப்பிட்ட ஒரு போட்டோ லாக்கர் செயலியை போனில் நிறுவி இருப்போம். ஆனால் அந்த செயலி உண்மையாகவே உங்களது போடோக்களை மறைக்கிறதா அல்லது அது எப்படி செயல்படுகிறது என்று எம்மில் எத்தனை பேர் தேடி பார்த்திருக்கிறோம்?

நாம் ஒரு போட்டோ லாக்கர் செயலியை நிறுவிய அடுத்த நொடியே, பொதுவாக அனைத்து போட்டோ லாக் செயளிகலுமே, "Allow access to photos" என்று கேட்கும். இதை நாம் Allow செய்த இடத்திலிருந்தே ஆபத்தும் தொடங்கி விடுகிறது. 

உங்கள் தனிப்பட்ட போட்டோ அவர்களுடைய Server-ல்..

 ஒரு சில போட்டோ லாக்கர் செயலிகள், குறிப்பிட்ட உங்கள் போட்டோவை மறைக்க வேண்டுமென்றால், குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு அந்த போட்டோவை Copy செய்யுமாறு பரிந்துரைக்கும். பெரும்பாலும் நீங்கள் உங்கள் தனிப்பட்ட அந்த போட்டோவை Copy செய்யும் இடம், அவர்களுடைய Server ஆகவே இருக்கும். எந்த நம்பிக்கையில் உங்களுடைய போட்டோவை எங்கோ இருக்கும் ஒரு Server-இல் Copy செய்து வைக்கிறீர்கள்? 
இது எப்படி என்றால், உங்களுடைய தனிப்பட்ட போட்டோவை உங்களது கல்லூரி கணணியிலோ அல்லது வேறு எதாவது பொதுவான கணணி ஒன்றிலோ Copy செய்து வைப்பதற்கு ஒப்பானது. யோசித்து பாருங்கள். இது எவ்வளவு பெரிய ஆபத்தான செயல்.

போட்டோ லாக்கர் Directory ஹேக்

அடுத்து ஒரு சில போட்டோ லாக்கர் செயலிகள் குறிப்பிட்ட ஒரு போட்டோவை குறிப்பிட்ட Directory-இலிருந்து மட்டுமே மறைக்கிறது. இவ்வாறு மறைக்கப்பட்ட போடோக்களை File Explorer-இல் சென்று பார்க்கும் போது, குறிப்பிட்ட செயலியால் மறைக்கப்பட்ட அந்த போட்டோ File Explorer-இல் பார்க்க கூடியதாய் இருக்கும்.

அதே போல் இன்னும் சில போட்டோ லாக்கர் செயலிகளின் Directory File-ஐ Rename செய்வதன் மூலம், மறைக்கப்பட்ட அனைத்து போடோக்களையும் பார்க்க கூடியதாய் இருக்கிறது. அதாவது உங்கள் போனை கணனியில் இணைத்து குறிப்பிட்ட போட்டோ லாக்கர் செயலியை திறந்து அதன் Directory File-ஐ வேறு ஒரு பெயருக்கு Rename செய்தாலே போதும். நீங்கள் உங்கள் போடோவிட்கு போட்ட பாதுகாப்பு வேலி உடைக்கப்பட்டு விடும்.

போட்டோ லாக்கர் ட்ரக்கிங்

அடுத்ததாக குறிப்பிட்ட ஒரு போட்டோ லாக்கர் செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்து உங்கள் தனிப்பட்ட போடோக்களை மறைத்து வைத்து இருப்பீர்கள். ஆனால் ஒவ்வொரு முறை அந்த செயலியை திறக்கும் போதும், விளம்பரங்கள் தோன்றுவதை அவதானித்து இருப்பீர்கள்.

உதாரணமாக மறைக்கப்பட்ட குறிப்பிட்ட போட்டோ ஆபாசமானது என்றால், உங்கள் திரையில் தோன்றும் அந்த விளம்பரமும் ஆபாசமானதாய் இருக்கும். இங்கு உண்மையிலே என்ன நடக்கிறது என்றால், குறிப்பிட்ட அந்த போட்டோ லாக்கர் செயலி, உங்கள் போட்டோ எந்த வகையான போட்டோ என்று சரியாக இணங்கண்டு கொள்கிறது. இதை குறிப்பிட்ட அந்த போட்டோ லாக்கர் செயலியில் காணப்படும் bot/ cookies ட்ரக்கிங் மூலம் உங்கள் போட்டோ எந்த வகையான போட்டோ என்று இனம்கண்டு கொள்கிறது.
இவ்வாறு மறைக்கப்பட்ட போட்டோ எந்த வகையானது என்று தெரிந்து கொள்ள முடிந்த அந்த குறிப்பிட்ட போட்டோ லாக்கர் செயலில் இருந்து உங்கள் போட்டோ திருட்டு போக எவ்வளவு நேரம் ஆகும்?

குறிப்பு 

இவ்வாறான பல்வேறு வகையான பாதுகாப்பு ஓட்டைகளை கொண்டுள்ளது தான் இந்த போட்டோ லாக்கர் செயலிகள். இதனால் உங்கள் தனிப்பட்ட போடோக்களை மறைத்து வைக்கிறோம் என்று ஆபத்தை விலை குடுத்து வாங்காதீர்கள்.

குறிப்பிட்ட ஒரு போட்டோ லாக்கர் செயலியை உபயோகிக்க முன், அதை பற்றிய பாவனையாளர் கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள். இதை நீங்கள் App Store-லோ அல்லது Play Store-லோ குறிப்பிட்ட செயலியை தரவிறக்க முன் வாசித்து தெரிந்து கொள்ளலாம். 

அத்தோடு குறிப்பிட்ட செயலி நம்பிக்கைக்குரிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதா, எத்தனை பேர் இந்த செயலியை உபயோகிக்கிறார்கள் என்பதையும் கருத்திட்கொள்ளுங்கள்.


Android மற்றும் iPhone-களை வேகமாக்கி கொள்ள உதவுகிறது இந்த அருமையான Application

0 Views ஸ்மார்ட் போன் பாவிக்கும் அனைவருக்குமே இருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை தான் தங்களுடைய ஸ்மார்ட் போன் மிக மெதுவாக இயங்குவது. நீங்கள் iPhone பாவனையாளராக இருக்கலாம் அல்லது Android பாவனையாளராக இருக்கலாம். கண்டிப்பாக ஒரு முறையேனும் இந்த பிரச்சினையை சந்தித்து இருப்பீர்கள். 

ஸ்மார்ட் போன் வெதுவாக இயங்க காரணம் என்ன?

உங்களது ஸ்மார்ட் போன் பல்வேறு காரணங்களால் மெதுவாக இயங்க வாய்ப்புண்டு. அதாவது உங்களது ஸ்மார்ட் போனில் அதிகளவான செயலிகள் நிறுவப்பட்டிருந்தால் போன் மெதுவாக இயங்க வாய்ப்புள்ளது. அதே போல் RAM பாவணை அதிகமாக இருக்கும் பட்சத்திலும் உங்களது ஸ்மார்ட் போன் மிக மெதுவாக செயல்படும். 

இதுமட்டுமல்லாது இன்னும் பல்வேறு காரணிகள் உங்களுடைய ஸ்மார்ட் போன் வேகம் குறைந்து செயற்படுவதில் தாக்கம் செலுத்துகிறது.

இவ்வாறு எமது ஸ்மார்ட் போன் மிக மெதுவாக இயங்கும் போது, எம்முடைய அடுத்த செயற்பாடு எதாவது ஒரு Speed Boost செயலி ஒன்றை தேடி எமது போனில் நிறுவிக்கொள்வது. குறிப்பிட்ட செயலியின் செயற்பாட்டில் திருப்தி இல்லை என்றால், அதை நீக்கி விட்டு இன்னுமொரு செயலியை நிறுவிக்கொள்வது...


இவ்வாறு செயலிகள் தான் மாறிக்கொண்டே போகுமே தவிர ஸ்மார்ட் போனின் வேகமானது இன்னும் குறைவடைந்து கொண்டே தான் செல்லும். 

இதனால் இன்றைய பதிவில், உங்களது Android மற்றும் iPhone-ன் வேகத்தை அதிகரித்துக்கொள்ள ஒரு வழியை கூறுகிறேன்.

ஏற்கனவே நான் கூறியது போல, அதிகமான செயலிகள் எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் பட்சத்திலேயே, ஸ்மார்ட் போன் மெதுவாக செயற்பட தொடங்குகிறது. அதிகமான செயலிகள் இருப்பது தான் எமது போன் மெதுவாக இயங்க காரணம் என்பதை நாம் உணர்ந்து, தேவையில்லாத செயலிகளை நீக்கிய பின்னரும் ஸ்மார்ட் போனின் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லாததை அவதானித்து இருப்போம். இதுக்கு காரணம், எமது ஸ்மார்ட் போனில் தங்கி இருக்கும் தற்காலிகமான தேவையில்லாத File-கள் தான். அதாவது ஏற்கனவே நாம் பல செயலிகளை எமது ஸ்மார்ட் போனில் நிறுவி பின்னர் தேவையில்லை என்று நீக்கி இருப்போம். ஆனால் நாம் நீக்கிய குறிப்பிட்ட செயலிகள், எமது போனில் இருந்து முழுமையாக நீங்கி இருக்காது. 

உங்களது ஸ்மார்ட் போனை USB கேபிள் மூலம் கணனியுடன் இணைத்து திறந்து பார்த்தால் தெரியும், எவ்வளவு தேவையில்லாத தற்காலிக கோப்புக்கள் மற்றும் ஏற்கனவே நீங்கள் நீக்கிய செயலிகளின் தற்காலிக கோப்புகள் இருப்பதை காணலாம்.

இவ்வாறு நமது கண்ணுக்கு மறைந்து காணப்படும் தற்காலிக File-கள், எமது ஸ்மார்ட் போன் வேகத்தை குறைப்பதில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. இதனால் இந்த வகையான தற்காலிக File-களை நீக்கி விடுவது மிக முக்கியமான ஒரு செயலாகும். 

தற்காலிக File-களை எவ்வாறு இணங்கண்டு நீக்குவது?

தற்காலிக File-களை எவ்வாறு இனங்கண்டு கொள்வது என்பது மிக முக்கியமான ஒரு பிரச்சினை. கண்டிப்பாக ஒவ்வொரு File ஆக தேடி நீக்குவதென்பது முடியாத காரியம். இதை சரி செய்யவே Android மற்றும் iPhone-களுக்கென்று சில மிகச்சிறந்த செயலிகள் காணப்படுகின்றன. இவற்றில் இரண்டு சிறந்த செயலிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இந்த செயலிகள் கண்டிப்பாக உங்கள் ஸ்மார்ட் போனை வேகமாக்கி கொள்ள உதவும்.
  • Ccleaner
  • Master Cleaner
இந்த செயலிகளை App Store மற்றும் Play Store-களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். நான் மேலே குறிப்பிட்டுள்ள எதாவது ஒரு செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் தரவிறக்கி பாவித்து பாருங்கள். கண்டிப்பாக ஸ்மார்ட் போனின் வேகத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.
உதாரணத்திற்கு Ccleaner செயலியை எப்படி பாவித்து உங்கள் ஸ்மார்ட் போனை வேகமாக்கி கொள்வது என்று காட்டுகிறேன்.


உங்கள் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்த Ccleaner செயலியை திறந்து, Analyze என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான். இப்போது குறிப்பிட்ட செயலி உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் எல்லா தேவையில்லாத தற்காலிக கோப்புக்களையும் ஸ்கேன் செய்து உங்கள் கண் முன்னே காட்டும்.

அதன் பின்னர் Clean என்பதை கிளிக் செய்வதன் மூலம் அனைத்து தேவையில்லாத தற்காலிக கோப்புக்களையும் உங்களது ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கி கொள்ளலாம்.

இப்போது ஒரு முறை உங்களது ஸ்மார்ட் போனை ஆப் செய்து விட்டு மறுபடியும் ஒன செய்து உபயோகித்து பாருங்கள். முன்னரிலும் பார்க்க உங்கள் ஸ்மார்ட் போன் வேகமாகி இருப்பது உங்களுக்கே புரியும். 


24 December 2015

Apple Iphone Codes

0 Views

*3001#12345# and tap Call. Enter field mode
Field mode reveals many of the inner settings of your iphone
specially up-to-date network and cell information

*#06# Displays IMEI. No need to tap call
IMEI is the unique identifier for your cell phone hardware
together with your SIM information it identifies you to the
provider network

*777# and tap Call. Account balance for prepaid iPhone

*225# and tap Call. Bill Balance. (Postpaid only)

*646#
 and tap Call. Check minutes. (Postpaid only)
These three are pretty self explanatory

*#21# and tap call. Setting interrogation for call forwards.
Discover the settings for your call forwarding. You'll see whether
you have voice, data, fax, sms, sync, async, packet access, and
pad access call forwarding enabled or disabled.

*#30# and tap Call. Calling line presentation check.
This displays whether you have enabled or disabled the presentation
of the calling line, presumably the number of the party placing the call.

*&76#
 and tap Call. Check whether the connected line presentation is enabled or not.
State whether the connected line presentation is enabled or disabled. Presumably similiar to the calling line presentation.

*#43# and tap Call. Determine if call waiting is enabled
Displays call waiting status for voice, data, fax, sms, sync data, async data,
packet access and pad access. Each item is either enabled or disabled.

*#61# and tap Call. Check the number for unanswered calls.
Sho the number for voice call forwarding when a call is answered. Also show
the options for data, fax, sms, sync, async, packet access and pad access

*#62#
 and tap Call. Check the number for call forwarding if no service is available.
Just like the previous, except for no-service rather than no-answer situations.

*#67# 
and tap Call. Check the number for call forwarding when the iPhone is busy.
And again, but for when the iPhone is busy.

*#33# and tap Call. Check for call control bars 


*#06# Displays your IMEI on your iPhone.
*3001#12345#* To get your access to the field test mode of iPhone.
*#30# Thus, you can check whether the caller identification (Clip-function) in the iPhone is active.

*#43# Call Waiting Status
*43# Activate a waiting
#43# Deactivate waiting

Change PIN1: **04* old PIN * new PIN * new PIN #
Change PIN2: **042*old PIN * new PIN * new PIN #

*#746025625#
 SIM Clock Stop Mode
Whether your SIM card the SIM Clock Stop mode supported, you can find out with this code. The iPhone will then idle at the SIM card, ie no calls, etc., all activities on the SIM card. This has a positive effect on power consumption and prolongs battery life.

*3370# 
EFR mode
Enhanced Full Rate improves voice quality, but slightly reduced battery life.
#3370# ERF OFF mode

*4720# 
Half Rate (HFR) on
Opposite of ERA.
#4720# Half Rate (HFR) off

*21# Call divert a
#21# Call divert from
**21* destination number # number programmed
###21 deletes the call transfer is complete.

*#21# Call Forwarding Overview

**61* destination number ** (Time 5 to 30 seconds) # divert after 5 to 30 seconds to ring
*61# Activate divert
#61# Call divert Disabled
##61# Deletes Diversion
*#61# Call divert status

**62* destination number # redirection in unattainability
*62# Turning
#62# Off
##62# Clear
*#62# Status

**67* destination number # for Divert if busy
*67# Turning
#67# Off
##67# Clear
*#67# Status

*31# phone number is transmitted
#31# phone number is not transmitted


*#5005*86# Are you the code, it displays the current mailbox settings.
*5005*86*# xxxxx Combox mail button on the available
(xxxxx = mailbox number)

*646# minutes consumption control

*135# Display Own Phone Number

*33* barring code Outgoing calls to block the lock code to inquire about her please contact your network operator.
*#33 Unlock
*#33# Status


*331* barring code # Outgoing calls abroad to block the lock code to inquire about her please contact your network operator.
#331* barring code # lift blockade
*#331# status

*#5005*7672# SMS- center check
Current number of the SMS Center (SMSC) to find out. Each SMSC according to variable cost

*5005*7672*xxxxxxx # SMS Center reactivate
(xxxxxxx = SMS center number)

keep visiting 

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...