Latest
Loading...

14 September 2017

அசத்தும் ஐபோன் X: அசாத்திய சிறப்பம்சங்கள்

0 Views
ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழா சிறப்பு எடிஷன் ஐபோன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.





கலிபோர்னியா:

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் மிக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் X ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஸ்பேஸ்ஷிப் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற்ற முதல் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் வாட்ச் 3, ஆப்பிள் டிவி 4K, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.




எனினும் நேற்றைய நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக ஐபோன் X அமைந்தது. ஆப்பிள் ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள பிரத்தியேக ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்களை கவரும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில், புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஐபோன் X அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஐபோன் டென் என அழைக்கப்படும் ஐபோன் X கிளாஸ், ஸ்டெயின்லெஸ் மற்றும் அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் ஐபோன் X சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் OLED பேனல் கொண்டுள்ளது.



வடிவமைப்பு:

முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போனில் இதுவரை ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படாத உறுதி தன்மை கொண்ட கிளாஸ், சர்ஜிக்கல்-கிரேடு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புறங்களில் கிளாஸ் வழங்கப்பட்டு்ள நிலையில் புதிய ஐபோன் X வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.



டிஸ்ப்ளே:

ஆப்பிள் வரலாற்றில் முதல் முறையாக ஐபோன் சாதனத்தில் OLED பயன்படுத்தப்பட்டுள்ளது. 5.8 இன்ச் அளவு கொண்ட ஸ்கிரீன் மற்றும் OLED வாடிக்கையாளர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்கும். சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே 2436x1125 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளதோடு எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே மற்றும் நிறங்களை அதிக பிரகாசமாக பிரதிபலிக்கிறது. ஸ்கிரீனில் டேப் செய்து, போனினை வேக் செய்ய முடியும். இக்குசன் ட்ரூ டோன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் மற்றும் 3D டச் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

சிப்செட்:

ஐபோன் X ஸ்மார்ட்போன் புதிய A11 பயோனிக் சிப்செட் கொண்டு இயங்குகிறது. இதுவரை வெளியான ஸ்மார்ட்போன் பிராசஸர்களில் அதிக செயல்திறன் கொண்ட பிராசஸர் இது என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த பிராசஸர் ஆப்பிள் GPU உடன் இணைந்து அதிக தரமுள்ள கேமிங் அனுபவத்தை சீராக வழங்க வழி செய்யும். A10 சிப்செட்டை விட புதிய GPU 30 சதவிகிதம் வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கேமரா:

புதிய ஐபோன் X ஸ்மார்ச்போனில் டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா, வைடு ஆங்கிள் கேமராவில் f/1.8 அப்ரேச்சர், டெலிபோட்டோ லென்ஸ் f/2.4 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. கேமராவுடன் குவாட்-எல்இடி ட்ரூ டோன் பிளாஷ் புகைப்படங்களை அதிக தரமுள்ளதாக வழங்கும். டூயல் கேமராக்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளதோடு போர்டிரெயிட் மோட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் புகைப்படங்களில் ஃபில்ட்டர் சேர்க்காமல் லைட் மாற்ற வழி செய்யும்.

கேமராக்களுடன் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அம்சம் மற்றும் மிக நேர்த்தியான மோஷன் டிராக்கிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ஐபோன் X இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபிக்களை எடுக்க ட்ரூடெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு போர்டிரெயிட் மோட் லைட்டிங்கில் செல்ஃபிக்களை எடுக்க முடியும்.



ஃபேஸ் ஐடி:

அதிகம் எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டன் வழங்கப்படவில்லை. ஹோம் ஸ்கிரீன் செல்ல ஸ்மார்ட்போன் திரையில் கீழ் இருந்து மேல்பக்கமாக ஸ்வைப் செய்தால் ஹோம் ஸ்கிரீன் திறக்கும். சிரியுடன் பேச பக்கவாட்டில் உள்ள பட்டனை கிளிக் செய்ய வேண்டும். போனினை அன்லாக் செய்ய போனினை பார்த்தாலே போதுமானது. புதிய ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் கொண்டு ஐபோன் உங்களை அறிந்து கொண்டு அன்லாக் செய்யும்.

ஆப்பிளின் A11 பயோனிக் நியூரல் இன்ஜின் மூலம் இந்த அம்சம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இதன் ட்ரூ டெப்த் கேமரா அமைப்பு IR கேமரா மூலம் IR புகைப்படங்களை எடுக்கும். குறிப்பாக உங்களது முகத்தில் எவ்வாறு சிகை அலங்காரங்களை மாற்றிக் கொண்டாலும், ஐபோன் உங்களை கண்டறிந்து போனினை அன்லாக் செய்யும். புதிய ஃபேஸ் ஐடி ஆப்பிள் பே மற்றும் இதர செயலிகளிலும் வேலை செய்யும். 



அனிமோஜி:

ஐபோன் X ஸ்மார்ட்போனில் உள்ள புதிய எமோஜி அம்சம் அனிமோஜி என அழைக்கப்படுகிறது, இதனை உங்களது முக பாவணைகளை அடிப்படையாக கொண்டு வேலை செய்யும். ட்ரூடெப்த் கேமரா மூலம் முக பாவணைகளை அறிந்துகொண்டு இந்த அம்சம் வேலை செய்கிறது. வாடிக்கையாளர்கள் வழங்கும் முக பாவணைகளை அப்படியே அனிமோஜிக்களாக மாற்றுவதால், இவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

பேட்டரி:

ஐபோன் X ஸ்மார்ட்போனில் முந்தைய ஐபோன் 7-இல் வழங்கப்பட்டதை விட அதிக பேட்டரி வழங்கப்பட்டிருப்பதால், முந்தைய மாடலை விட கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இத்துடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் போன்றே வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏர்பவர் என்ற சாதனத்தை கொண்டு ஒரே சமயத்தில் மூன்று ஆப்பிள் சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய முடியும்.

விலை:

64 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ள ஐபோன் X விலை 999 டாலர்களில் துவங்குகிறது. அகோடபர் 27-ம் தேதி முதல் முன்பதிவு துவங்கும் நிலையில் நவம்பர் 3-ம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன் X 64 ஜிபி ரூ.89,000 என்றும், ஐபோன் X 256 ஜிபி ரூ.1,02,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...