0 Views
ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி
வருகின்றன, அதன்படி இப்போது ஆப்பிள் சாதனங்களுக்கு ஐஒஎஸ் 11 அப்டேட்
வழங்குகிறது, இந்த ஐஒஎஸ் அப்டேட் பொறுத்தவரை பல மக்களுக்கு மிகவும் உதவியாக
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் போன் பொதுவாக இந்தியாவை விட மற்ற நாடுகளில் தான் அதிக மக்கள்
பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் பல்வேறு
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஐஒஎஸ் அப்டேட்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMTj0uutqV315nVNtp92CHsYePXpgB5NRokjVO67lWDJOKzvpCJvzMVDe10hTUPLoxL-8ac71Zc83MVxtKYtvmAAuP6CJrPzqyiOZp1kptw2RZb9jZcIWZ8Snrcka8pKEsbJvLE-uzWA_U/s1600/19-1505812603-08-1496917113-drag-.jpg)
செப்டம்பர்-19:
2017 செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் இந்த புதிய ஐஒஎஸ் 11 அப்டேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மக்களிடையே பல
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஆப்பிள்:
ஆப்பிள் ஐபோன் 7,ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6, ஐபோன் எஸ்இ, ஐபோன் 5எஸ்,
12.9-இன்ச் ஐபேட் ப்ரோ(2017), 12.9-இன்ச் ஐபேட் ப்ரோ(2016), 10.5-இன்ச் ஐபேட் ப்ரோ, 9.7-இன்ச் ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர், ஐபேட் (2017),
ஐபேட்(2017), ஐபேட் மினி 4, ஐபேட் மினி 3, ஐபேட் மினி 2, ஐபாட் டச் 6வது தலைமுறை போன்ற சாதனங்களுக்கு இந்த ஐஒஎஸ் அப்டேட்
கிடைக்கும். மேலும் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யும் வழிமுறையை பார்ப்போம்.
வழிமுறை-1:
முதலில் ஐபோன்
சாதனங்களில் செட்டிங்ஸ்>ஜெனரல்> சாப்ட்வேர் அப்டேட் தேர்வு செய்து,
உங்கள் சாதனம் புதுப்பிப்புகளை சோதித்து, பின்னர் கிடைக்கும் ஐஒஎஸ்-11-ஐ
மேம்படுத்துதல் வேண்டும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilHhzINly-E7J1jsbRSMpzpjCQU1hwWT9r0xD_vibxXy9B5ZGjJCCFaDPC_o57PKU9BxC9WMj3w5blKtai1QxR3Np1E3NHnua8FuTJa1DMSLkSG3AKM5SlHAl33hracb-1gh9lCBGuSYhW/s1600/19-1505812619-ios11-27-1498548709.jpg)
வழிமுறை-2:
ஐஒஎஸ்-11-ஐ தேர்வு செய்து முதலில் டவுன்லோடு செய்ய வேண்டும், அதன்பின்பு உங்களுடைய சாதனங்களில் இன்ஸ்டால் செய்தல் வேண்டும்.
வழிமுறை-3:
மெதுவான இணைய இணைப்பு இருந்தால் சிறிது நேரம் எடுக்கலாம். எனவே இண்டர்நெட் வேகம் சற்று அதிகமாக இருந்தால் நல்லது.
வழிமுறை-4:
ஆப்பிளின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நீங்கள் பார்க்கும்போது ஏற்றுக்கொள்ளவேண்டும்.
வழிமுறை-5:
பின்பு உங்கள் ஆப்பிள் சாதனங்களில் ஐஒஎஸ்-11 பயன்படும்.