![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoBkjzhvS_sC4TCO0Y2F-kN3zST0TiTtDAWrOGOWJ5IWWmIonVfWbAAolzxM172kSOjeIGYiSwpTob96mg_Q2cybTPvE8K34r5VcahYg6S43N9dalE1OhhUzrFWwQ0nLMHa8781FNPMWRN/s640/how-to-download-movie-subtitles-on-linux-25-1506333490.jpg)
இணையத்தில் திரைப்படம் பார்ப்பவர்கள், திரைப்படங்களுக்கான சப்-டைட்டிள்களை இணையத்திலேயே டவுன்லோடு செய்ய முடியும். எனினும் சப்-டைட்டிள் ஃபைல்கள் திரைப்படத்துடன் சரியாக சின்க் ஆவதில் பிரச்சனை ஏற்படும். லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்துவோர் திரைப்படங்களுக்கான சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்வது எப்படி?
அனைத்து திரைப்படங்களுக்கும் ஏற்ற சரியான சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்ய பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்த முடியும். அவ்வாறு லினக்ஸ் இயங்குதளத்தில் சீராக இயங்கும் சப்-டைட்டிள் செயலிகள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
சப்டவுன்லோடர்:
இந்த மென்பொருள் opensubtitiles.org பயன்படுத்தி திரைப்படங்களுக்கு கிடைக்கும் சப்-டைட்டிள்களை தேடும். மேலும் திரைப்படங்களின் பெயரை கொண்டு தேடல்களை மேற்கொண்டு சரியான சப்-டைட்டிள்களை பரிந்துரை செய்யும்.
விஎல்சப்:
லினக்ஸ் இயங்குதளத்தில் விஎல்சி மீடியோ பிளேயர் பயன்படுத்தினால் VLSub and Subtitles Finder பிளக் இன் மூலம் சப்-டை்டிள்களை தேடி பயன்பெற முடியும். இந்த பிளக் இன் பயன்படுத்தினால் சப்-டைட்டிள்களை பெறுவது எளிய காரியமாகி விடும்.
சப்லிமினல்:
இணையத்தில் கிடைக்கும் பல்வேறு தளங்களில் தேடல்களை மேற்கொண்டு சப்-டைட்டிள் டவுன்லோடு செய்ய இந்த செயலி கமான்ட் லைன் பயன்படுத்தும். இதனால் சரியான சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்வது மிகவும் எளிமையான காரியமாகிவிடுகிறது.
சப்லினிமினல் டர்மினல் டவுன்லோடு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள கமாண்ட் பயன்படுத்தவும்:
"sudo apt-get install subliminal."
சப்லிமினலை நீங்கள் வைத்துள்ள திரைப்படங்களின் ஃபோல்டரில் வைத்து ரன் செய்ய வேண்டும். கமாண்ட் பயன்படுத்தியதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கமாண்ட் பயன்படுத்தி சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்யலாம்.
"subliminal -1 en movie_name.mp4"
மேலே கொடுக்கப்பட்டுள்ள கமாண்டில் "en" என்ற வார்த்தைக்கு மாற்றாக உங்களுக்கு தேவையான மொழியில் சப்-டைட்டிள் பெற அதற்கான குறியீட்டை வழங்க வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள குறியீடு ஆங்கில மொழியில் சப்-டைட்டிள்களை தேட வழி செய்யும்.
இங்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளும் சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்ய உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.