Latest
Loading...

29 September 2017

வீட்டில் உள்ள வைபை நெட்வொர்க்கை பாதுகாப்பது எப்படி?

0 Views
தற்போதைய டெக்னாலஜி உலகில் மால்வேர் தாக்குதல் செய்பவர்கள் மற்றும் ஹேக்கர்கள் பெருகி வரும் நிலையில் அலுவலக பணிகளை வீட்டின் நெட்வொர்க்கில் இருந்து செய்வது அவர்கள் நம்மை ஹேக் செய்ய எளிதாக அமைந்துவிடுகிறது.



எனவே அலுவலக பணிகளை வீட்டின் நெட்வொர்க்கில் இருந்து பணிபுரிபவர்கள் ஒருசில பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.





பெயரை மாற்றுங்கள்: ஹேக்கர்களை சமாளிக்க முதலில் அனைவரும் செய்ய வேண்டியது வைஃபையின் பெயரை மாற்றுவது. வைபையில் உள்ள பெயரை மாற்றிவிட்டால் ஹெக்கர்களுக்கு அது ஒரு சவாலாக இருக்கும். ஹேக்கர்களுக்கு வைபை நிறுவனம் கொடுக்கும் பெயர்களை ஊகிப்பது மிக எளிது. எனவே பெயரை மாற்ற வேண்டியது முதல் வேலை







வலிமையான பாஸ்வேர்டு: வைபை ரூட்டர் வாங்கும்போது அதில் ஏற்கனவே ஒரு பாஸ்வேர்டு இருக்கும். அந்த பாஸ்வேர்டை கத்துக்குட்டி ஹேக்கர்கள் கூட மிக எளிதில் ஊகித்து விடுவார்கள். எனவே ரூட்டர்களில் உள்ள பாஸ்வேர்டை கடினமானதாக மாற்றுங்கள். 20 டிஜிட்டில் எண்கள், எழுத்துக்கள், அடையாள குறியீடுகள் ஆகியவற்றை கலந்து பாஸ்வேர்டு உருவாக்குங்கள்,



நெட்வொர்க் என்கிரிப்ஷனை எனேபிள் செய்யுங்கள் என்கிரிப்ஷன் என்பது வைபைக்கு சம்பந்தப்பட்டவர்களை மட்டும் அனுமதிப்பது. இந்த வசதியை எனேபிள் செய்து கொண்டால் பெயர் தெரியாத மர்ம நபர்கள் நெட்வொர்க்கில் நுழைய முடியாது. இந்த என்கிரிப்ஷனில் பல வகை உண்டு. WEP, WPA or WPA2 ஆகிய வகைகளில் WEP என்பது பழைய வகை. இதை தவிர்ப்பது நல்லது. WPA2 லேட்டஸ்ட் வகை, இதனை உபயோகித்தால் பாதுகாப்பு அதிகம்



ரூட்டரை எங்கே வைக்க வேண்டும் தெரியுமா? வைபை ரூட்டரை வைக்க வேண்டிய இடம் மிக முக்கியம். ஒரு வீட்டின் நடு அறையில் வயர்லெஸ் ரூட்டரை வைப்பது பாதுகாப்பானது. வீட்டின் நடுவில்தான் நெட்வொர்க் சிக்னல் சீராக ஏற்ற இறக்கமின்றி கிடைக்கும். அதிக சிக்னல் அல்லது குறைவான சிக்னல் கிடைக்கும் பாதுகாப்பற்றது



ரிமோட் ஆக்சஸை டிஸேபிள் செய்ய வேண்டும் பெரும்பாலான வைபை நிறுவனங்கள் ரிமோட் சிஸ்டத்தை அனுமதிக்கும்படிதான் வைத்திருப்பார்கள். ஆனால் இது ஹேக்கர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் மிக எளிதாக உள்ளே நுழைய வழிவகுத்துவிடும். எனவே இந்த ரிமோட் சிஸ்டத்தை டிஸேபிள் செய்து வைக்க வேண்டியது மிக முக்கியம். இதை டிஸேபிள் செய்துவிட்டால் யாராலும் உங்களுடைய வைபையை பயன்படுத்த முடியாது. இதை செய்வதற்கு ரிமோட் ஆக்சஸ் அல்லது ரிமோட் அட்மின் சென்று டிஸேபிள் செய்யலாம்.

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...