Latest
Loading...

25 September 2017

பீதியை கிளப்பும் ப்ளூ வேல் விளையாட்டு. புதிதாக 5000 அட்மின்கள்.

0 Views

தற்போது உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் விளையாட்டு ‘ப்ளூ வேல்’. ரஷ்யாவில் அறிமுகமான இந்த விளையாட்டு உலக நாடுகளில் பல இளைஞர்களின் உயிரை எடுத்துவிட்டது. கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கால் பதித்துள்ள நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ‘ப்ளூ வேல் அட்மின்’ கைது செய்யப்பட்டார்.



இதுகுறித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி 5000க்கும் மேற்பட்டோர் ‘ப்ளூ வேல்’ அட்மினாக செயல்படுகின்றனர் என கூறியுள்ளார்




நிர்ணயிக்கப்பட்ட 50 நாட்களில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதே இதன் இறுதி முடிவு. ஆனால் அவ்வாறு தற்கொலை செய்ய தயங்கியவர்களே இந்த அட்மின்கள். இவர்கள் தற்கொலைக்கு பயந்து கெஞ்சி கூத்தாடி அட்மினாக செயல்படுகிறேன் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.


இந்த தகவல் அனைத்தும், தென்கிழக்கு ரஷ்யாவில் உள்ள கபாராவ்ஸ்க் ராய் என்ற பகுதியில் கைதான 17 வயது பெண் அளித்தாகும். இவர் “death group administrator” என்ற குரூப்பின் மூலம் பலரை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக மாஸ்கோ போலீசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...