கடந்த 1966 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விஞ்ஞான கட்டுக்கதையாக உருவாகிய திரைப்படம்தான் Fantastic Voyage.
இத் திரைப்படத்தில் மிகவும் நுண்ணிய நீர்மூழ்கிக்கப்பல்கள் மனிதனின் உடலில் செலுத்தப்படுவது போன்று காண்பிக்கப்படும்.
மேலும் இவை மூளையில் ஏற்படும் இரத்த உறைவினை சரிசெய்வது போன்றும் காட்சியமைக்கப்பட்டிருக்கும்.
இத் திரைப்படம் வெளியாகி சுமார் ஐந்து தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த தொழில்நுட்பம் சாத்தியமாவது உறுதியாகியுள்ளது.
அதாவது மனிதனின் DNA ஐ பயன்படுத்தி மிக நுண்ணிய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.
இந்த ரோபோக்கள் மனித உடலில் மருந்துகளை பரிமாற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்படவுள்ளன.
ஒவ்வொரு ரோபோக்களும் 53 நியூக்கிளியோரைட்டுக்களைக் கொண்ட தனியான DNA இனால் உருவாக்கப்படவுள்ளது.