சில தினங்களுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.
இவற்றுள் iPhone X எனும் கைப்பேசியும் ஒன்றாகும்.
எனினும் இக் கைப்பேசியினை விடவும் iPhone 8 கைப்பேசிகளே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
iPhone X கைப்பேசியானது மக்களை கவர முடியாமல் போனமைக்கு பிரதானமாக நான்கு காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னர் வெளியான ஐபோன்களில் காணப்பட்ட அனேகமான வசதிகள் iPhone X கைப்பேசியில் இல்லை என்பது முதலாவது குறைாகக் கூறப்படுகின்றது.
இரண்டாவதாக விலை உயர்வாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சுங் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த Galaxy Note 8 கைப்பேசியானது iPhone X கைப்பேசியினையும் விட விலை குறைவாக காணப்படுகின்றது.
அடுத்ததாக கைவிரல் அடையாளத்திற்குரிய ஸ்கானர் தரப்படாதமையும் மற்றுமொரு காரணமாக இருக்கின்றது.
இது தவிர iPhone X கைப்பேசியின் வடிவம் ஆனது கவர்ச்சிகரமானதாக இல்லாமையும் கைப்பேசி பிரியர்கள் மத்தியில் வரவேற்பினை பெற தவறிவிட்டதற்கான காரணமாக காணப்படுகின்றது.