Latest
Loading...

15 January 2016

Android மற்றும் iPhone-களை வேகமாக்கி கொள்ள உதவுகிறது இந்த அருமையான Application

0 Views
ஸ்மார்ட் போன் பாவிக்கும் அனைவருக்குமே இருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை தான் தங்களுடைய ஸ்மார்ட் போன் மிக மெதுவாக இயங்குவது. நீங்கள் iPhone பாவனையாளராக இருக்கலாம் அல்லது Android பாவனையாளராக இருக்கலாம். கண்டிப்பாக ஒரு முறையேனும் இந்த பிரச்சினையை சந்தித்து இருப்பீர்கள். 

ஸ்மார்ட் போன் வெதுவாக இயங்க காரணம் என்ன?

உங்களது ஸ்மார்ட் போன் பல்வேறு காரணங்களால் மெதுவாக இயங்க வாய்ப்புண்டு. அதாவது உங்களது ஸ்மார்ட் போனில் அதிகளவான செயலிகள் நிறுவப்பட்டிருந்தால் போன் மெதுவாக இயங்க வாய்ப்புள்ளது. அதே போல் RAM பாவணை அதிகமாக இருக்கும் பட்சத்திலும் உங்களது ஸ்மார்ட் போன் மிக மெதுவாக செயல்படும். 

இதுமட்டுமல்லாது இன்னும் பல்வேறு காரணிகள் உங்களுடைய ஸ்மார்ட் போன் வேகம் குறைந்து செயற்படுவதில் தாக்கம் செலுத்துகிறது.

இவ்வாறு எமது ஸ்மார்ட் போன் மிக மெதுவாக இயங்கும் போது, எம்முடைய அடுத்த செயற்பாடு எதாவது ஒரு Speed Boost செயலி ஒன்றை தேடி எமது போனில் நிறுவிக்கொள்வது. குறிப்பிட்ட செயலியின் செயற்பாட்டில் திருப்தி இல்லை என்றால், அதை நீக்கி விட்டு இன்னுமொரு செயலியை நிறுவிக்கொள்வது...


இவ்வாறு செயலிகள் தான் மாறிக்கொண்டே போகுமே தவிர ஸ்மார்ட் போனின் வேகமானது இன்னும் குறைவடைந்து கொண்டே தான் செல்லும். 

இதனால் இன்றைய பதிவில், உங்களது Android மற்றும் iPhone-ன் வேகத்தை அதிகரித்துக்கொள்ள ஒரு வழியை கூறுகிறேன்.

ஏற்கனவே நான் கூறியது போல, அதிகமான செயலிகள் எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் பட்சத்திலேயே, ஸ்மார்ட் போன் மெதுவாக செயற்பட தொடங்குகிறது. அதிகமான செயலிகள் இருப்பது தான் எமது போன் மெதுவாக இயங்க காரணம் என்பதை நாம் உணர்ந்து, தேவையில்லாத செயலிகளை நீக்கிய பின்னரும் ஸ்மார்ட் போனின் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லாததை அவதானித்து இருப்போம். இதுக்கு காரணம், எமது ஸ்மார்ட் போனில் தங்கி இருக்கும் தற்காலிகமான தேவையில்லாத File-கள் தான். அதாவது ஏற்கனவே நாம் பல செயலிகளை எமது ஸ்மார்ட் போனில் நிறுவி பின்னர் தேவையில்லை என்று நீக்கி இருப்போம். ஆனால் நாம் நீக்கிய குறிப்பிட்ட செயலிகள், எமது போனில் இருந்து முழுமையாக நீங்கி இருக்காது. 

உங்களது ஸ்மார்ட் போனை USB கேபிள் மூலம் கணனியுடன் இணைத்து திறந்து பார்த்தால் தெரியும், எவ்வளவு தேவையில்லாத தற்காலிக கோப்புக்கள் மற்றும் ஏற்கனவே நீங்கள் நீக்கிய செயலிகளின் தற்காலிக கோப்புகள் இருப்பதை காணலாம்.

இவ்வாறு நமது கண்ணுக்கு மறைந்து காணப்படும் தற்காலிக File-கள், எமது ஸ்மார்ட் போன் வேகத்தை குறைப்பதில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. இதனால் இந்த வகையான தற்காலிக File-களை நீக்கி விடுவது மிக முக்கியமான ஒரு செயலாகும். 

தற்காலிக File-களை எவ்வாறு இணங்கண்டு நீக்குவது?

தற்காலிக File-களை எவ்வாறு இனங்கண்டு கொள்வது என்பது மிக முக்கியமான ஒரு பிரச்சினை. கண்டிப்பாக ஒவ்வொரு File ஆக தேடி நீக்குவதென்பது முடியாத காரியம். இதை சரி செய்யவே Android மற்றும் iPhone-களுக்கென்று சில மிகச்சிறந்த செயலிகள் காணப்படுகின்றன. இவற்றில் இரண்டு சிறந்த செயலிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இந்த செயலிகள் கண்டிப்பாக உங்கள் ஸ்மார்ட் போனை வேகமாக்கி கொள்ள உதவும்.
  • Ccleaner
  • Master Cleaner
இந்த செயலிகளை App Store மற்றும் Play Store-களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். நான் மேலே குறிப்பிட்டுள்ள எதாவது ஒரு செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் தரவிறக்கி பாவித்து பாருங்கள். கண்டிப்பாக ஸ்மார்ட் போனின் வேகத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.
உதாரணத்திற்கு Ccleaner செயலியை எப்படி பாவித்து உங்கள் ஸ்மார்ட் போனை வேகமாக்கி கொள்வது என்று காட்டுகிறேன்.


உங்கள் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்த Ccleaner செயலியை திறந்து, Analyze என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான். இப்போது குறிப்பிட்ட செயலி உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் எல்லா தேவையில்லாத தற்காலிக கோப்புக்களையும் ஸ்கேன் செய்து உங்கள் கண் முன்னே காட்டும்.

அதன் பின்னர் Clean என்பதை கிளிக் செய்வதன் மூலம் அனைத்து தேவையில்லாத தற்காலிக கோப்புக்களையும் உங்களது ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கி கொள்ளலாம்.

இப்போது ஒரு முறை உங்களது ஸ்மார்ட் போனை ஆப் செய்து விட்டு மறுபடியும் ஒன செய்து உபயோகித்து பாருங்கள். முன்னரிலும் பார்க்க உங்கள் ஸ்மார்ட் போன் வேகமாகி இருப்பது உங்களுக்கே புரியும். 


மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...