Latest
Loading...

15 January 2016

எந்தவித Software-உம் இன்றி IDM Download வேகத்தை அதிகரித்து எப்படி?

0 Views
நம் அனைவர் மத்தியிலும் மிகப்பிரபல்யமான ஒரு மென்பொருளே, Internet Download Manager. IDM ஆனது, இன்டர்நெட்டில் இருக்கும் பல்வேறு வகையான வீடியோ, ஆடியோ மற்றும் பல வகையான file-களை தரவிறக்கி கொள்ள உதவுகிறது.

இணையத்தில் காணப்படும் டவுன்லோட் மேனேஜர் மென்பொருட்களுக்கு மத்தியில் IDM ஆனது தனி இடத்தை பிடித்து உள்ளது. நீங்கள் குறிப்பிட்ட ஒரு file-ஐ சாதரணமாக தரவிறக்க எடுக்கும் நேரத்திலும் பார்க்க மிக சொற்ப அளவு நேரமே IDM மூலம் தரவிறக்கும் போது எடுக்கும். இதனாலேயே IDM அனைவர் மத்தியிலும் பிரபல்யம் அடைந்து காணப்படுகிறது.

இன்றைய பதிவில் IDM மென்பொருளால் தரவிறக்கபடும் file-இன் டவுன்லோட் வேகத்தை மேலும் அதிகரித்து கொள்வது எப்படி என்று கூறுகிறேன். இந்த உபாயமானது உங்கள் இணைய வேகம் குறைவாக இருக்கும் நேரத்தில் IDM மூலம் தரவிறக்கும் file-களை வேகமாக தரவிறக்கி கொள்ள உதவும். ஒரு சில சிறிய Settings மாற்றத்தை ஏற்படுத்தும் போது IDM டவுன்லோட் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி கொள்ளலாம் என்பது பலருக்கு தெரியாது.


எனவே கீழே குறிப்பிடப்பட்டிருப்பது போல் உங்கள் IDM Settings-ஐ மாற்றி கொள்வதன் மூலம் IDM மென்பொருளின் உச்சகட்ட டவுன்லோட் வேகத்தை பெற்றுக்கொள்ள கூடியதாய் இருக்கும்.

  • IDM-ஐ Open செய்து, கீழுள்ள path-ஐ சென்றடையுங்கள்.
  • Download > Option > Internet Download Manager configuration > Connection
  • அங்கே Connection Type/Speed tab-ஐ LAN 10 Mbs என்று மாற்றுங்கள். 
  • அடுத்து Default max. conn.number என்று இருப்பதை 16 என்று மாற்றுங்கள்.

  • அவ்வளவு தான். இப்போது OK எனும் button-ஐ அழுத்துங்கள்.

அடுத்ததாக நீங்கள் Windows Registry மூலம் IDM டவுன்லோட் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும். இதை செய்வதற்கு நான் கீழே குறிப்பிட்டுள்ள செயல்முறைகளை பின்பற்றவும்.

  • Windows Start Menu-இற்கு செல்லவும்.
  • Run என்று தட்டச்சு செய்யவும்.
  • அடுத்து தோன்றும் திரையில் regedit என்று தட்டச்சு செய்து Enter-ஐ அழுத்தவும்.
  • இப்போது Windows Registry Editor தோன்றும்
  • அதிலே கீழே குறிப்பிட்டுள்ள இடத்தை சென்றடையவும்.
  • HKEY_CURRENT_USER > Software > DownloadManager
  • அங்கே வலது மூலையில் காணப்படும் பட்டியலில் Connection Speed எனும் string-ஐ தேடிப்பிடியுங்கள்.
  • இப்போது Connection Speed-ஐ double click செய்து அதன் value-ஐ Decimal ஆக மாற்றி, அதன் data value-ஐ 100 என்று மாற்றி OK செய்யுங்கள்.


அவ்வளவு தான். இப்போது உங்கள் IDM டவுன்லோட் வேகம் எந்த வித மென்பொருளின் உதவியுமின்றி இன்னும் அதிகமாக்கபட்டுள்ளது. இனி நீங்கள் IDM ஊடாக ஏதேனும் file-களை டவுன்லோட் செய்யும் போது நீங்கள் கண்டிப்பாக டவுன்லோட் வேகத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...