சாதரணமாக இந்த வகையான செயலிகள் தேவைப்படுவது, நமது தனிப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் அல்லது வேறு எதாவது File-களை பிறர் பார்வையில் இருந்து மறைத்து வைப்பதற்காகவே ஆகும்.
ஆனால் போடோக்களை மறைப்பதாக நினைத்து இந்த செயலிகளை நமது ஸ்மார்ட் போனில் நிறுவி, நமக்கு நாமே ஆபத்தை தேடி கொள்கிறோம்.
எப்படி என்று ஒரு சில உதாரணங்களோடு சொல்கிறேன்.
நாம் போடோக்களை மறைப்பதட்கென்று குறிப்பிட்ட ஒரு போட்டோ லாக்கர் செயலியை போனில் நிறுவி இருப்போம். ஆனால் அந்த செயலி உண்மையாகவே உங்களது போடோக்களை மறைக்கிறதா அல்லது அது எப்படி செயல்படுகிறது என்று எம்மில் எத்தனை பேர் தேடி பார்த்திருக்கிறோம்?
நாம் ஒரு போட்டோ லாக்கர் செயலியை நிறுவிய அடுத்த நொடியே, பொதுவாக அனைத்து போட்டோ லாக் செயளிகலுமே, "Allow access to photos" என்று கேட்கும். இதை நாம் Allow செய்த இடத்திலிருந்தே ஆபத்தும் தொடங்கி விடுகிறது.
உங்கள் தனிப்பட்ட போட்டோ அவர்களுடைய Server-ல்..
ஒரு சில போட்டோ லாக்கர் செயலிகள், குறிப்பிட்ட உங்கள் போட்டோவை மறைக்க வேண்டுமென்றால், குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு அந்த போட்டோவை Copy செய்யுமாறு பரிந்துரைக்கும். பெரும்பாலும் நீங்கள் உங்கள் தனிப்பட்ட அந்த போட்டோவை Copy செய்யும் இடம், அவர்களுடைய Server ஆகவே இருக்கும். எந்த நம்பிக்கையில் உங்களுடைய போட்டோவை எங்கோ இருக்கும் ஒரு Server-இல் Copy செய்து வைக்கிறீர்கள்?
இது எப்படி என்றால், உங்களுடைய தனிப்பட்ட போட்டோவை உங்களது கல்லூரி கணணியிலோ அல்லது வேறு எதாவது பொதுவான கணணி ஒன்றிலோ Copy செய்து வைப்பதற்கு ஒப்பானது. யோசித்து பாருங்கள். இது எவ்வளவு பெரிய ஆபத்தான செயல்.
போட்டோ லாக்கர் Directory ஹேக்
அடுத்து ஒரு சில போட்டோ லாக்கர் செயலிகள் குறிப்பிட்ட ஒரு போட்டோவை குறிப்பிட்ட Directory-இலிருந்து மட்டுமே மறைக்கிறது. இவ்வாறு மறைக்கப்பட்ட போடோக்களை File Explorer-இல் சென்று பார்க்கும் போது, குறிப்பிட்ட செயலியால் மறைக்கப்பட்ட அந்த போட்டோ File Explorer-இல் பார்க்க கூடியதாய் இருக்கும்.
அதே போல் இன்னும் சில போட்டோ லாக்கர் செயலிகளின் Directory File-ஐ Rename செய்வதன் மூலம், மறைக்கப்பட்ட அனைத்து போடோக்களையும் பார்க்க கூடியதாய் இருக்கிறது. அதாவது உங்கள் போனை கணனியில் இணைத்து குறிப்பிட்ட போட்டோ லாக்கர் செயலியை திறந்து அதன் Directory File-ஐ வேறு ஒரு பெயருக்கு Rename செய்தாலே போதும். நீங்கள் உங்கள் போடோவிட்கு போட்ட பாதுகாப்பு வேலி உடைக்கப்பட்டு விடும்.
குறிப்பு
இவ்வாறான பல்வேறு வகையான பாதுகாப்பு ஓட்டைகளை கொண்டுள்ளது தான் இந்த போட்டோ லாக்கர் செயலிகள். இதனால் உங்கள் தனிப்பட்ட போடோக்களை மறைத்து வைக்கிறோம் என்று ஆபத்தை விலை குடுத்து வாங்காதீர்கள்.
குறிப்பிட்ட ஒரு போட்டோ லாக்கர் செயலியை உபயோகிக்க முன், அதை பற்றிய பாவனையாளர் கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள். இதை நீங்கள் App Store-லோ அல்லது Play Store-லோ குறிப்பிட்ட செயலியை தரவிறக்க முன் வாசித்து தெரிந்து கொள்ளலாம்.
அத்தோடு குறிப்பிட்ட செயலி நம்பிக்கைக்குரிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதா, எத்தனை பேர் இந்த செயலியை உபயோகிக்கிறார்கள் என்பதையும் கருத்திட்கொள்ளுங்கள்.
போட்டோ லாக்கர் ட்ரக்கிங்
அடுத்ததாக குறிப்பிட்ட ஒரு போட்டோ லாக்கர் செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்து உங்கள் தனிப்பட்ட போடோக்களை மறைத்து வைத்து இருப்பீர்கள். ஆனால் ஒவ்வொரு முறை அந்த செயலியை திறக்கும் போதும், விளம்பரங்கள் தோன்றுவதை அவதானித்து இருப்பீர்கள்.
உதாரணமாக மறைக்கப்பட்ட குறிப்பிட்ட போட்டோ ஆபாசமானது என்றால், உங்கள் திரையில் தோன்றும் அந்த விளம்பரமும் ஆபாசமானதாய் இருக்கும். இங்கு உண்மையிலே என்ன நடக்கிறது என்றால், குறிப்பிட்ட அந்த போட்டோ லாக்கர் செயலி, உங்கள் போட்டோ எந்த வகையான போட்டோ என்று சரியாக இணங்கண்டு கொள்கிறது. இதை குறிப்பிட்ட அந்த போட்டோ லாக்கர் செயலியில் காணப்படும் bot/ cookies ட்ரக்கிங் மூலம் உங்கள் போட்டோ எந்த வகையான போட்டோ என்று இனம்கண்டு கொள்கிறது.
இவ்வாறு மறைக்கப்பட்ட போட்டோ எந்த வகையானது என்று தெரிந்து கொள்ள முடிந்த அந்த குறிப்பிட்ட போட்டோ லாக்கர் செயலில் இருந்து உங்கள் போட்டோ திருட்டு போக எவ்வளவு நேரம் ஆகும்?
குறிப்பு
இவ்வாறான பல்வேறு வகையான பாதுகாப்பு ஓட்டைகளை கொண்டுள்ளது தான் இந்த போட்டோ லாக்கர் செயலிகள். இதனால் உங்கள் தனிப்பட்ட போடோக்களை மறைத்து வைக்கிறோம் என்று ஆபத்தை விலை குடுத்து வாங்காதீர்கள்.
குறிப்பிட்ட ஒரு போட்டோ லாக்கர் செயலியை உபயோகிக்க முன், அதை பற்றிய பாவனையாளர் கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள். இதை நீங்கள் App Store-லோ அல்லது Play Store-லோ குறிப்பிட்ட செயலியை தரவிறக்க முன் வாசித்து தெரிந்து கொள்ளலாம்.
அத்தோடு குறிப்பிட்ட செயலி நம்பிக்கைக்குரிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதா, எத்தனை பேர் இந்த செயலியை உபயோகிக்கிறார்கள் என்பதையும் கருத்திட்கொள்ளுங்கள்.