இதில் இணைத்துள்ள பலர் தமது தனிப்பட்ட விடயங்களை நம்பிக்கைகுரியவர்களுடன் பகிர்த்து கொள்வது, தமது புகைப்படத்தை மற்ற நண்பர்களும் பகிர்த்து கொள்வது என்று பல வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளது Facebook நிறுவனம். Facebook பிரபல்யமடைந்த அதே சமயம் அதன் மீதான எதிர் தாக்குதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்வது எப்படி?
- உங்கள் Facebook account-ல் Settings எனும் option-ஐ click செய்யவும்.
- அங்கே Security எனும் option-ஐ click செய்யவும்
- அதிலே Where You're Logged In எனும் option-ல், உங்கள் Facebook கணக்கு இறுதியாக எங்கிருந்தெல்லாம் Login செய்யபட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- IP Address-ஐ பரிசீலனை செய்வதம் மூலம் உங்கள் Facebook கணக்கு எந்த இடத்தில் இருந்து Login செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- சந்தேகத்திட்கிடமான Logins ஏதும் காணப்பட்டால் உடனடியாக End Activity எனும் option-ஐ தெரிவு செய்துவிட்டு பின்னர் உங்கள் Facebook கணக்கின் Password-ஐ மாற்றி கொள்வது சிறந்தது.