இவ்வாறு அனைவரையுமே தன்பால் கவர்திருக்கும் இந்த கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆனது பெரும்பாலும் பணம் செலுத்தியே பெற்று கொள்ள வேண்டியதாய் உள்ளது.
இதனால் இன்றைய பதிவில் பொதுவாக அனைத்து கம்ப்யூட்டர் கேம்ஸ்களையும் இலவசமாக வழங்கக்கூடிய ஒரு அருமையான தளத்தை அறிமுகம் செய்கிறேன்.
நீங்கள் கூகுளிற்கு சென்று என்று Ocean of Games தட்டச்சு செய்தால் முதலாவதாக வரும் தளம் Ocean of Games டாட் காம். இந்த தளத்திற்கு நீங்கள் சென்று பார்த்தல் உங்களுக்கே புரியும். பேருக்கு ஏற்றாப்போலையே உண்மையாகவே கம்ப்யூட்டர் கேம்ஸ்-இன் சமுத்திரம் தான் இது.
கம்ப்யூட்டர் கேம்ஸ்ற்கு பெயர் போன அனைத்து விதமான கேம்ஸ்-களையும் இங்கு நீங்கள் இலவசமாக பெற்று கொள்ளலாம்.
இந்த தளத்தில் காணப்படும் சிறப்பம்சம் என்னவென்றால், பொதுவாக இந்த தளத்தில் காணப்படும் 90%-மான கம்ப்யூட்டர் கேம்ஸ்கள் எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் உங்கள் கணணியிலோ, அல்லது மடிக்கனணியிலோ வேலை செய்யும்.
அதுமட்டுமல்லாது குறிப்பிட்ட ஒரு கம்ப்யூட்டர் கேம் உங்கள் கணனியுடன் எதுவித பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்யுமா இல்லையா என்று தெரிந்துகொள்ளும் விதமாக, குறிப்பிட்ட கேம்-இற்கு தேவையான System Requirements தகவல்களையும் வழங்குகிறது.
இதனால் இந்த தளத்தில் காணப்படும் குறிப்பிட்ட கேம் ஆனது உங்கள் கணனியில் சரியாக வேலை செய்யுமா என்று Download செய்வதற்கு முன்னரே தெரிந்து கொள்ளலாம்.
அத்தோடு குறிப்பிட்ட ஒரு கேம்-ஐ ஒரு கணனியில் எப்படி நிறுவிக்கொள்வது, அதற்கு தேவையான மற்றைய மென்பொருட்கள் என்னென்ன என்று மிகத்தெளிவாக கூறியுள்ள அதே வேலை, குறிப்பிட்ட கேம்-ஐ எப்படி கணனியில் நிறுவிக்கொள்வது என்ற காணொளி தொகுப்பையும் வழங்குகிறது இந்த தளம்.
நீங்கள் கம்ப்யூட்டர் கேம்ஸ்களில் ஆர்வம் உள்ளவராயின் கண்டிப்பாக இந்த தளத்தில் காணப்படும் அனைத்து கேம்ஸ்களும் உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை எழுதி முடித்துள்ளேன்.