இணையத்தில் காணப்படும் டவுன்லோட் மேனேஜர் மென்பொருட்களுக்கு மத்தியில் IDM ஆனது தனி இடத்தை பிடித்து உள்ளது. நீங்கள் குறிப்பிட்ட ஒரு file-ஐ சாதரணமாக தரவிறக்க எடுக்கும் நேரத்திலும் பார்க்க மிக சொற்ப அளவு நேரமே IDM மூலம் தரவிறக்கும் போது எடுக்கும். இதனாலேயே IDM அனைவர் மத்தியிலும் பிரபல்யம் அடைந்து காணப்படுகிறது.
இன்றைய பதிவில் IDM மென்பொருளால் தரவிறக்கபடும் file-இன் டவுன்லோட் வேகத்தை மேலும் அதிகரித்து கொள்வது எப்படி என்று கூறுகிறேன். இந்த உபாயமானது உங்கள் இணைய வேகம் குறைவாக இருக்கும் நேரத்தில் IDM மூலம் தரவிறக்கும் file-களை வேகமாக தரவிறக்கி கொள்ள உதவும். ஒரு சில சிறிய Settings மாற்றத்தை ஏற்படுத்தும் போது IDM டவுன்லோட் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி கொள்ளலாம் என்பது பலருக்கு தெரியாது.
- IDM-ஐ Open செய்து, கீழுள்ள path-ஐ சென்றடையுங்கள்.
- Download > Option > Internet Download Manager configuration > Connection
- அங்கே Connection Type/Speed tab-ஐ LAN 10 Mbs என்று மாற்றுங்கள்.
- அடுத்து Default max. conn.number என்று இருப்பதை 16 என்று மாற்றுங்கள்.
- அவ்வளவு தான். இப்போது OK எனும் button-ஐ அழுத்துங்கள்.
அடுத்ததாக நீங்கள் Windows Registry மூலம் IDM டவுன்லோட் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும். இதை செய்வதற்கு நான் கீழே குறிப்பிட்டுள்ள செயல்முறைகளை பின்பற்றவும்.
- Windows Start Menu-இற்கு செல்லவும்.
- Run என்று தட்டச்சு செய்யவும்.
- அடுத்து தோன்றும் திரையில் regedit என்று தட்டச்சு செய்து Enter-ஐ அழுத்தவும்.
- இப்போது Windows Registry Editor தோன்றும்
- அதிலே கீழே குறிப்பிட்டுள்ள இடத்தை சென்றடையவும்.
- HKEY_CURRENT_USER > Software > DownloadManager
- அங்கே வலது மூலையில் காணப்படும் பட்டியலில் Connection Speed எனும் string-ஐ தேடிப்பிடியுங்கள்.
- இப்போது Connection Speed-ஐ double click செய்து அதன் value-ஐ Decimal ஆக மாற்றி, அதன் data value-ஐ 100 என்று மாற்றி OK செய்யுங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்கள் IDM டவுன்லோட் வேகம் எந்த வித மென்பொருளின் உதவியுமின்றி இன்னும் அதிகமாக்கபட்டுள்ளது. இனி நீங்கள் IDM ஊடாக ஏதேனும் file-களை டவுன்லோட் செய்யும் போது நீங்கள் கண்டிப்பாக டவுன்லோட் வேகத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.