WhatsApp ஆனது பொதுவாக அனைவராலும் விரும்பி பாவிக்கப்படும் Application என்பதால் இன்று WhatsApp-ல் இருக்கும் ஒரு பாதுகாப்பு குறைபாட்டை உங்கள் கண் முன்னே கொண்டு வருகிறேன். பாதுகாப்பு குறைபாடு என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது பயனர்களின் நன்மைக்காகவே. இருந்த போதும் இந்த வசதியை எப்படி சிலர் முறைகேடாக பயன்படுத்தி உங்கள் WhatsApp-இல் உள்ள அனைத்து தகவல்களையும் திருட முடியும் என்று பார்ப்போம்.
WhatsApp நிறுவனமானது புதிதாக WhatsApp Web எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். WhatsApp Web என்பது உங்கள் WhatsApp கணக்கை கணனியில் இருந்து உபயோகிப்பதாகும்.
உதாரணமாக உங்கள் நண்பரின் WhatsApp தகவல்களை நீங்கள் எப்படி பார்க்கலாம் தெளிவு படுத்துகிறேன்.
இங்கே கிளிக் செய்து WhatsApp Web தளத்திற்கு செல்லுங்கள்.
உங்கள் நண்பரின் ஸ்மார்ட் போனை ஒரு நிமிடம் கேட்டு வாங்குங்கள்.
இப்போது அந்த ஸ்மார்ட் போனில் WhatsApp Application-ஐ ஓபன் செய்து அங்கே 3 வட்டங்களாக காணப்படும் Icon-ஐ கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்கள் ஸ்மார்ட் போனின் Back Camera Open ஆகி QR Code-ஐ Scan செய்யுமாறு உங்களுக்கு பரிந்துரைக்கும்.
இப்போது நீங்கள் ஏற்கனவே உங்கள் கணனியில் திறந்து வைத்துள்ள WhatsApp Web தளத்திற்கு சென்று அங்கே காணப்படும் QR Code-ஐ உங்கள் நண்பரில் ஸ்மார்ட் போன் மூலம் Scan செய்யுங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்கள் நண்பரின் அனைத்து WhatsApp Chat Conversations-ஐயும் நீங்கள் Chrome Browser-ல் WhatsApp Web மூலம் பார்வையிடலாம்.
குறிப்புகள்
WhatsApp Web ஆனது Google Chrome Web Browser-இல் மட்டுமே சரியாக வேலை செய்யும். அதனால் நீங்கள் கண்டிப்பாக Chrome Browser தான் பாவிக்க வேண்டும்.
Google Chrome Browser-இல் QR Code Scan செய்யும் பொது "keep me sing-in " எனும் Option-ஐ Select செய்வதால், ஒவ்வொரு முறையும் உங்கள் நண்பரின் ஸ்மார்ட் போனை எடுத்து QR Code-ஐ Scan செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.
உங்களிடம் கணணி இல்லை என்றால், உங்கள் ஸ்மார்ட் போனில் கூட இதை செய்யலாம். எப்படி என்றால், உங்கள் ஸ்மார்ட் போனில் Google Chrome Web Browser -ஐ Install செய்யுங்கள். பின், WhatsApp Web தளத்திற்கு உங்கள் போனில் இருக்கும் Chrome Web Browser மூலம் சென்று, உங்கள் நண்பரின் WhatsApp QR Code-ஐ Scan செய்து கொள்ளலாம். ஆனால், உங்கள் ஸ்மார்ட் போனில் Install செய்யப்பட்டிருக்கும் Google Chrome Web Browser-ல் Desktop View Enable செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் QR Code Scan செய்யும் Option, WhatsApp Web-இல் காணப்படமாட்டது.
உங்கள் நண்பரின் WhatsApp கணக்கை நீங்கள் WhatsApp Web மூலம் உபயோகிக்கும் போது, உங்கள் நண்பருக்கு எந்த விதமான Alert-ம் செல்லாது. ஆனால் உங்கள் நண்பர் அவருடைய ஸ்மார்ட் போனில் WhatsApp-இற்கு சென்று WhatsApp Web எனும் Option-ஐ பரிசீலனை செய்தால் அங்கே தன்னுடைய WhatsApp கணக்கு எங்கோ WhatsApp Web-இல் இணைந்து இருப்பது தெரியவரும். இவ்வாறு தெரியவரும் பட்சத்தில், Login ஆகி இருக்கும் WhatsApp Web-ஐ Logout செய்யும் வசதி அவருக்கு உண்டு. ஆனால் யார் Login செய்து இருக்கிறார்கள் என்று தெரியவராது.
உங்கள் நண்பர் தன்னுடைய ஸ்மார்ட் போன் மூலம் WhatsApp-இல் Online இருந்தால் மட்டுமே உங்களுக்கு WhatsApp Web மூலம் Login செய்யலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

என்ன நண்பர்களே..! இப்படியும் திருட்டு நடக்கலாம். அதனால் உஷாராக இருங்கள்..