இன்று நாம் நம்முடைய நண்பர் அல்லது உறவினர் வீடுகளுக்கு சென்றால் அவர்களை நலம் விசாரிப்பதற்கு முன்னதாக கேட்கப்படும் கேள்வி தான், "உங்கள் WiFi Password என்ன" என்று.. இந்த அளவுக்கு நம்மை இன்றைய தொழிநுட்ப வளர்ச்சி கட்டி போட்டுள்ளது.
இவ்வாறு யாரேனும் உரிமையோடு கேட்டும் போது, பெரும்பாலும் நாம் "உங்கள் போனை தாருங்கள். WiFi-ஐ இணைத்து தருகிறேன்" என்று கூறி, நமது WiFi-ஐ அவர்களோடு பகிர்த்து கொள்வோம். பின்னர் அவர்கள், அவர்களுடைய போனில் இருக்கும் எல்லா ஆப்ளிகேசன்களையும் அப்டேட் செய்வார்கள். அது வேறு கதை...
ஆனால் சில நண்பர், உறவினர்கள் இருக்கிறார்கள்.. நீங்கள் வீட்டில் இல்லாத சமயம் உங்களுக்கு போன் செய்து தான் உங்கள் வீட்டில் இருப்பதாகவும், கொஞ்சம் உங்கள் WiFi Password-ஐ தாருங்கள் என்று கேட்டு, நீங்கள் பாதுகாப்பாக வைத்து இருக்கும் Password-ஐ கேட்டு வாங்கி கொள்வார்கள். அதன் பின்னர் சொல்லவா வேண்டும். நடக்கபோவது என்ன என்று உங்களுக்கே தெரியும்.
இவ்வாறான சந்தர்ப்பம் ஒன்று வரும் போது, உங்கள் Password-ஐ கொடுக்காமல் எப்படி அவர்களுக்கு WiFi- இணைப்பை வழங்க முடியும் என்று பார்ப்போம். இதை செய்ய கீழே குறிப்பிட்டுள்ள QR Code Scan உபாயத்தை பயன்படுத்தலாம். எவ்வாறு என்று விளக்கமாக கூறுகிறேன்.
முதலாவதாக இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
இங்கே உங்கள் WiFi இணைப்பின் தகவல்களை சரியாக வழங்குங்கள். அதாவது உங்கள் WiFi இணைப்பின் சரியான பெயர் அதன் Password மற்றும் நெட்வொர்க் டைப் என்பவற்றை பதிவு செய்யுங்கள்.
QR Code Caption என்று இருக்கும் இடத்தில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

இப்போது மேலே காட்டப்பட்டிருப்பது போல் Generate WiFi QR Code என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது கீழே காட்டப்பட்டிருப்பது போல் உங்கள் WiFi இணைப்பின் விபரங்களானது QR Code மூலம் உருவாக்கப்பட்டுவிட்டது. Download your Android WiFi QR Code என்று இருப்பதை கிளிக் செய்து உருவாக்கப்பட்ட QR Code-ஐ தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கிய QR Code கீழுள்ளவாறு காணப்படும். இதை நீங்கள் ப்ரிண்ட் ஒன்று எடுத்து வீட்டில் எங்காவது வைத்து கொள்ளுங்கள்.
இப்போது யாரவது நீங்கள் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் உங்களது WiFi இணைப்பின் கடவுச்சொல்லை கேட்டால், அவர்களுக்கு நீங்கள் வீட்டில் ப்ரிண்ட் எடுத்து வைத்து இருக்கும் QR Code-ஐ அவர்களின் போன் மூலம் ஸ்கேன் செய்துகொள்ள சொல்லுங்கள். அவர்கள் QR Code-ஐ ஸ்கேன் செய்த அடுத்த நொடி, அவர்களுடைய போன் தானாக உங்கள் வீட்டு WiFi நெட்வொர்க்குடன் இணைந்து கொள்ளும். இவ்வாறு செய்வதால் நீங்கள் உங்களுடைய WiFi கடவுச்சொல்லை யாருடனும் பகிர்த்து கொள்ள தேவையில்லை.
குறிப்பு
QR Code-ஐ ஸ்கேன் செய்ய குறிப்பிட்ட நபரின் ஸ்மார்ட் போனில் QR Code ஸ்கேன் செய்யும் வசதி இருக்க வேண்டும். QR Code ஸ்கேன் செய்யும் செயலிகளை Google Play Store-இற்கு சென்றோ அல்லது இந்த லிங்க் மூலமாகவோ தரவிறக்கி கொள்ளலாம்.