Latest
Loading...

15 January 2016

உங்கள் Smart Phone-ன் Camera மூலம் கணித கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கலாம் வாங்க..

0 Views
இந்த பதிவில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

பொதுவாக பெரும்பாலானோருக்கு கணிதம் என்றாலே பிடிக்காது. கணக்கு நேருக்கு மாறாக கேட்கப்பட்டிருப்பதும் விடை தெரியாமல் நாம் தடுமாறுவதும் என்ற சந்தர்ப்பத்தை நம் வாழ்வில் ஒரு முறையேனும் சந்தித்து இருப்போம்.

கணிதம் என்றாலே குழப்பம் தான் என்று அதை விட்டு ஒரு அடி தள்ளி நிற்பவர்கள் எம்மில் பலர். இதனால் இன்றைய பதிவில் கணிதம் சம்மந்தமான ஒரு தொழிநுட்ப வளர்ச்சி படியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

பொதுவாக இன்று எம்மில் பலர் ஸ்மார்ட் போன் வைத்து இருக்கிறோம். இவ்வாறு நாம் வைத்து இருக்கும் ஸ்மார்ட் போன் மூலம் கணித கேள்விகளுக்கு சரியான விடையை கண்டு பிடிக்கலாம்.


தொழிநுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு முன்னேறி விட்டது என்பதற்கு இதுவும் ஒரு நல்ல உதாரணம் அல்லவா?

சரி.. எப்படி உங்கள் ஸ்மார்ட் போனை உபயோகித்து கணித கோட்பாடுகளுக்கு விடை கண்டு பிடிப்பது என்று விளக்கமாக கூறுகிறேன்.

பெரும்பாலான கணித கோட்பாடுகளை தீர்ப்பதட்கென்று உருவாக்கப்பட்ட செயலி தான் இந்த PhotoMath.

இந்த செயலியை Google Play Store-இல் இருந்து அல்லது App Store-இல் இருந்து உங்கள் ஸ்மார்ட் போனிற்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.

PhotoMath Android-க்கான செயலி
PhotoMath iPhone-க்கான செயலி

தரவிறக்கிய செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி கொள்ளுங்கள்.

அடுத்து இந்த செயலியை Open செய்யுங்கள்.

இப்போது முதலாவதாக இந்த செயலியை ஆரம்பிக்கும் போது, இந்த செயலியை எவ்வாறு உபயோகிப்பது என்ற விளக்கங்கள் உங்களது ஸ்மார்ட் போன் திரையில் தோன்றும். அதை ஒவ்வொன்றாக படித்து இந்த செயலியை எப்படி சரியான முறையில் உபயோகித்து உங்களது கணித சம்மந்தமான கேள்விகளுக்கு விடை பெற்றுக்கொள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எவ்வாறு உபயோகிப்பது என்ற விளக்கங்களை பார்த்த பின்னர், இந்த செயலி உங்களை நேரடியாக அதன் மெயின் பேஜ்-இற்கு கொண்டு செல்லும்.

அங்கே உங்களது ஸ்மார்ட் போனின் கேமரா தானாக திறக்கப்பட்டு தீர்க்க வேண்டிய கணிதத்தை ஸ்கேன் செய்யுமாறு கேட்கும். 


இப்போது ஒரு காகிதத்திலோ அல்லது கரும்பலகையிலே எழுதி காணப்படும் கணித கேள்வியை உங்களது ஸ்மார்ட் போனின் கேமரா மூலம் ஸ்கேன் செய்யுங்கள். ஒரு சில வினாடிகள் இந்த செயலியானது உங்களது கணித கேள்வியை ஸ்கேன் செய்து சரியான விடையை உங்களுக்கு கூறும்.

குறிப்புகள்

இந்த செயலி மூலம் ஸ்கேன் செய்யப்படும் கணித கேள்விகள் தெளிவானதாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்ச்சத்திலேயே இந்த செயலியால் சரியான கணித கேள்வியை புரிந்து கொள்ள முடியும்.

இந்த செயலியானது உங்களது கேள்விக்கான சரியான விடையை வழங்காத பட்சத்தில் அது குறித்தான கருத்தை அல்லது கேள்வியை feedback ஆக உங்களுக்கு அனுப்ப முடியும்.

உங்களுடைய ஸ்மார்ட் கேமரா கணித கேள்வியை சரியாக ஸ்கேன் செய்யாத பட்சத்திலும், இந்த செயலியால் சரியான விடையை தர முடியாது என்பதையும் கருத்திட்கொள்ளுங்கள்.

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...