Latest
Loading...

15 January 2016

நீங்கள் அடிக்கடி Public Free WiFi உபயோகிப்பவரா? அதில் இருக்கும் ஆபத்தையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

0 Views
இணையத்தின் உபயோகமானது இன்று அனைவரின் வாழ்விலும் முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது. எங்கு பார்த்தாலும்,எதில் பார்த்தாலும் இன்டர்நெட் தனது பங்கை செலுத்த மறக்கவில்லை. இப்படி இன்டர்நெட் மோகம் பறந்துகிடக்கும் இந்த காலகட்டத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று தான் Free WiFi.

ஷாப்பிங் மால் முதல் பெட்டி கடை வரை எங்கு பார்த்தாலும் Free WiFi என்று ஆகி விட்டது. இன்டர்நெட் இலவசமாக கிடைக்கிறது என்றால் யார் தான் வேண்டாம் என்பார்கள் அல்லவா? ஆனால் இந்த Free WiFi-யில் இருக்கும் ஆபத்து தெரியாமலேயே அனைவரும் Free WiFi-யை நோக்கி ஓடுகின்றார்கள்.

சுருக்கமாக சொன்னால், நீங்கள் ஏதாவது Free WiFi நெட்வொர்க் உடன் இணைந்து இருக்கும் பட்சத்தில், உங்கள் Device-இல் இருக்கும் அனைத்து தகவல்களையும் திருட முடியும்.

ஆச்சிரியமாக உள்ளதா? ஆம் நண்பர்களே.. நீங்கள் Free WiFi-யில் இணையும் போது பல வகையான ஆபத்துக்கள் உங்களை சூழ்ந்தது கொள்கிறது.

எல்லா Free WiFi நெட்வொர்கும் ஆபத்து என்று சொல்ல வரவில்லை. ஆபத்தான Free WiFi நெட்வொர்க்குகலுடன் இணைய வேண்டாம் என்றே கூறுகிறேன்.

Free WiFi-யில் நீங்கள் இணைந்து இருக்கும் போது பல வகையில் தரவு திருட்டு நடக்க வாய்ப்புண்டு.

Free WiFi-யில் எவ்வாறு உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்?

டேட்டா ஸ்னூபிங்

டேட்டா ஸ்னூபிங் ஆனது நெட்வொர்க் டிராபிக் Encrypt செய்யப்படாத Free WiFi இணைப்புக்களில் அதிகமாக நடக்க வாய்ப்புண்டு. அதாவது, எந்த வித பாதுகாப்பு வரம்புகளும் இன்றி ஏதாவது ஒரு Public WiFi நெட்வொர்க் காணப்படுமேயானால், பெரும்பாலும் அது டேட்டா ஸ்னூபிங் நோக்கிலேயே உருவாக்கப்பட்டு இருக்கும். இவ்வாறான Free WiFi நெட்வொர்க் உடன் உங்கள் போனோ அல்லது மடிக்கனணியோ இணையும் பட்சத்தில், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புண்டு. இதனால் இவ்வாறான Encrypt செய்யப்படாத WiFi நெட்வொர்க்குடன் உங்கள் Device-ஐ இணைக்க வேண்டாம்.

தனிப்பட்ட தகவல் சேகரிப்பு

குறிப்பிட்ட ஒரு Free WiFi நெட்வொர்க் உடன் உங்கள் Device-ஐ இணைக்க முனையும் பட்சத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியோ, தொலைபேசி இலக்கமோ அல்லது ஏதாவது உங்கள் தனிப்பட்ட தகவலோ கேட்கப்பட்டால், அவ்வாறான நெட்வொர்க்குடன் இணைவதை தவிர்த்து கொள்ளுங்கள். இவ்வாறு, நீங்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்கி Free WiFi உடன் இணையும் போது, சேகரிக்கப்பட்ட உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எந்த விதத்தில் வேண்டுமானாலும் உபயோகிக்கப்படலாம்.

அதாவது சேகரிக்கப்பட்ட தவல்களை வியாபாரத்துக்கான விளம்பர நடவடிக்கைகளுக்காக கூட பயன்படுத்தப்படலாம். இதானால் Free WiFi உடன் இணைந்து கொள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்கள் கேட்கபட்டால், அவ்வாறான WiFi நேத்வோர்க்குகளுன் இணைவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

Free WiFi உடன் இணையும் போது உங்கள் தரவுகளை எப்படி பாதுகாத்து கொள்வது?

நீங்கள் அடிக்கடி Public Free WiFi உடன் இணைந்து கொள்பவரா? அப்படியாயின் இனி உங்கள் லேப்டாப்-ஐ அல்லது ஸ்மார்ட் போனை Free WiFi நெட்வொர்க்குகலுடன் இணைக்கும் போது எப்போதும் "Public WiFi " என்ற Option-ஐ மட்டுமே Select செய்யுங்கள்.

சாதரணமாக புதிய இன்டர்நெட் நெட்வொர்க்குடன் உங்கள் கணணி இணையும் போது எந்த வகையான நெட்வொர்க் Type உடன் இணைய வேண்டும் என்று கேட்டு ஒரு Option வரும். இதில் நீங்கள் Public நெட்வொர்க் எனும் Option-ஐ தேர்ந்து எடுக்கும் பட்ச்சத்தில், உங்கள் கணனியில் உள்ள தகவல்களை யாரும் திருட முடியாது.

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...