இன்று நாம் பாவிக்கும் கணணி அல்லது மடிக்கணணிகளானது சாதாரணமாக 2-4 GB அளவு கொண்டதாக காணப்படுகிறது. இருந்த போதிலும் பல்வேறு வகையான மென்பொருட்களை எமது கணனியில் ஒரே நேரத்தில் உபயோகிக்கும் போது, எம்முடைய கணனியின் வேகத்தில் மாற்றத்தை அவதானிக்க கூடியதாய் இருக்கும்.
இதற்கு மிக முக்கியமான காரணம் தான் உங்கள் கணனியில் இருக்கும் Ram-ன் அளவு. ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை கணனியில் செய்யும் போது அல்லது எதாவது வீடியோ கேம்ஸ்களை விளையாடும் போது Ram பாவணை அளவானது அதிகளவாக இருக்கும். இதன் காரணமாகவே கணனியில் வேகம் குறைகிறது.
ஆகவே கணனியின் வேகத்தை கூட்டி கொள்ள இருக்கும் ஒரே வழி உங்கள் கணனியில் இருக்கும் Ram-ன் அளவை அதிகரிப்பது தான். ஆனால் புதிய ஒரு Ram-ஐ நீங்கள் கடையில் சென்று வாங்க போனால் அதன் விலை மிக அதிகமாக இருக்கும். எனவே இந்த பதிவில் உங்களிடமிருக்கும் பெண் டிரைவ் ஒன்றை எப்படி Ram ஆக உபயோகிப்பது என்று கூறுகிறேன்.
உங்களிடமிருக்கும் பெண் டிரைவ்-ஐ இரண்டு வழிகளில், கணனியின் ராம் ஆக உபயோகிக்கலாம். எப்படி என்று பார்போம்.
இப்போது கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தை சென்றடையுங்கள்.
My computer-ஐ Right click செய்து properties > Advanced System Settings > Advanced > Settings
உங்களிடமிருக்கும் பெண் டிரைவ்-ஐ இரண்டு வழிகளில், கணனியின் ராம் ஆக உபயோகிக்கலாம். எப்படி என்று பார்போம்.
Virtual Ram மூலம் பெண் டிரைவ்-ஐ Ram ஆக உபயோகிப்பது
உங்கள் பெண் டிரைவ்-ஐ கணனியில் இணையுங்கள்.இப்போது கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தை சென்றடையுங்கள்.
My computer-ஐ Right click செய்து properties > Advanced System Settings > Advanced > Settings
அடுத்து தோன்றும் முகப்பில் Advanced-ஐ கிளிக் செய்யுங்கள்.
அங்கே Virtual Memory-இல் Change என்பதை கிளிக் செய்யுங்கள்.
கீழே காட்டப்பட்டிருப்பது போல் Automatically manage... எனும் டிக்கை எடுத்து விடுங்கள்.
அடுத்து அங்கே உங்களது பெண் டிரைவ்-ஐ தேர்தெடுத்து Custom size என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்கள் பெண் டிரைவ்-இன் அளவிளலிடுந்து எந்த அளவு MB-ஐ Ram ஆக உபயோகிக்க நினைக்கிறீர்களே, அந்த அளவை Custom size-இனுள் டைப் செய்யுங்கள்.
இறுதியாக OK என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்கள் கணணியை ஒரு முறை Restart செய்து விட்டு உபயோகிக்க தொடங்குங்கள். கண்டிப்பாக கணனியின் வேகத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.
ReadyBoost மூலம் பெண் டிரைவ்-ஐ Ram ஆக உபயோகிப்பது
உங்கள் பெண் டிரைவ்-ஐ கணனியில் இணையுங்கள்.
My Computer சென்று பெண் டிரைவ்-ஐ Right Click செய்து Properties செல்லுங்கள்.
அங்கே ReadyBoost என்று இருப்பதை கிளிக் செய்து, Use this device என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்கள் பெண் டிரைவ்-இலிருந்து எவ்வளவு MB-ஐ Ram ஆக உபயோகிக்க நினைக்கிறீர்களோ அந்த அளவை கொடுத்து OK செய்யுங்கள்.
குறிப்புகள்.
உங்கள் பெண் டிரைவ்-இல் இருக்கும் அளவில் குறைந்தது 500 MB ஆவது இலவசமாக வைத்து கணனிக்கான Ram-ஐ உருவாக்குங்கள்.
Virtual Memory மூலம் உருவாக்கப்பட்ட Ram-ஐ நீக்க வேண்டுமென்றால் உங்கள் பெண் டிரைவ்-ஐ தேர்ந்தெடுத்து Custom size இல் கொடுக்கப்பட்ட அளவை 0 என்று மாற்றுங்கள்.
ReadyBoost மூலம் உங்கள் பெண் டிரைவ் இல் உருவாக்கப்பட்ட Ram-ஐ பெண் டிரைவ்-இலிருந்து நீக்க வேண்டுமென்றால், பெண் டிரைவ்-ஐ திறந்து ReadyBoost என்று காணப்படும் File-ஐ நீக்கி விடுங்கள்.
மேலே குறிப்பிட்ட முறைகளில் நீங்கள், உங்கள் கணனிக்கான Ram அளவை அதிகரித்தாலும், உண்மையான Ram ஒன்றை மாற்றினால் கிடைக்கும் வேகம் கிடைக்காது. இருந்தபோதிலும் முன்னரிலும் பார்க்க கணனியின் வேகம் அதிகரிக்கப்பட்டு, உங்களின் அன்றாட கணணி வேலைகளை இலகுவாக செய்து முடிக்க இந்த உபாயம் உதவும்.