இணையத்தின் பல சேவைகள் நம் சிந்தனையை திசை திருப்பும் விசயங்களாகவே உள்ளன. கவனம் சிதறாமல் ஒரு செயலை இணைய உதவியுடன் செய்வது வர வர மிகக் கடினமாகவே இருக்கிறது.
Facebook , Twitter ,Google plus, Email ஆகியவற்றை ஒரு நாளில் இவ்வளவு நேரம் தான் பயன்படுத்த வேண்டும் என நம்மில் பலராலும் நேர நிர்ணயம் செய்ய இயலவில்லை.
கணினி முன் தவம் இருப்பதை விட்டு பல புதிய விசயங்களை நிகழுலகில் கற்கும் போது நம் மூளைக்குள் பல புதிய நியுரான் இணைப்புகள் ஏற்படுமாம்.