இணையம் வழியாக பணப் பரிவர்த்தனை செய்வது இரண்டு வகைப்படும்.
1 .வணிக நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது.
2. தனி நபர்களுக்கு பணம் செலுத்துவது.
இந்த சேவைகளை paypal, PayPal, Square Cash போன்ற நிறுவனங்கள் செய்து வருகின்றன.
Pypal மூலமாகவே தனிநபர்களுக்கு பணம் அனுப்புவது பல வருடங்களாக எளிதாக நடைபெற்று வருகிறது.அமெரிக்க பங்குச் சந்தையில் பொது நிறுவனமாக பட்டியலிடப்பட்டு இலாபம் சம்பாரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது முகநூல் நிறுவனம் , கோடிக் கணக்கான தனது பயனர்களின் இிணைய உலவுதல் நடவடிக்கை களை வியாபார நிறுவனங்கள் விளம்பரங்கள் பிரசுரிக்கக் கொடுத்து பணம் சம்பாரித்து வருகிறது.
முகநூல் நிறுவனம் நினைத்திருந்தால் WhatsAPP போன்ற மென்பொருளை ஒரே வாரத்தில் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் பல கோடிபேர் பயன்படுத்தும் WhatsApp மென் பொருளை பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு வாங்கி, இலவச சேவையாக இருந்த Whats APP ஐ கட்டண சேவையாக மாற்றியுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரிபவர்களு க்கு இது அதிக பயனளிக்கும். தங்கள் கைகுள்ளேயே வங்கி இருப்பதுமக்களுக்கு அதிக நேரமிச்சத்தை கொடுக்கும்.Paypal நிறுவனத்தில் கணக்கு தொடங்குவது போன்றவை சிக்கலாக
இருப்பதால் நமது TechTamil தளத்தில் ஒரு விளக்கக் கட்டுரை கூட நான்
எழுதியிருந்தேன். இனி எவரும் தங்களின் Credit Card, DebitCardகளை முகநூல்
கணக்குடன் சேர்த்து முகநூல் நண்பர்களுக்கு தனிச் செய்தியில் புகைபடம்
அனுப்புவதுபோல பணம் அனுப்பும் வசதியை உருவாக்கி சோதித்து வருகிறது.
ஆரம்ப நிலையில் உள்ள இந்த வசதி விரைவில் அமெரிக்கா , ஐரொப்பா என படிப்படியாக அறிமுகப்படுத்தப்படலாம்.
இதேபோல மற்ற சமூகவலைதளங்களும், வீசாட், வைபர், டென்சேட்
போன்ற மேசேஜர்களும் இந்த பணபரிமாற்ற துறையில் முதலீடு
செய்யதயாராகிக்கொண்டு இருக்கிறார்கள்.பேஸ்புக் தன்னை மின் வணிகத்து றையில் (e.commerce) இணைக்க Buy button தயாரிக்கும் பணியில் தீவிரமாக இயங்கி கொண்டு இருக் கிறது.
ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையிலும் paypal 3.5% சதம் வரை கட்டணமாக
வசூலிக்கிறது. 1% அல்லது அதற்க்கும் குறைவான கட்டணத்துடன் முகநூல் பண சேவை
அறிமுகப்படுத்தப்படலாம்.