Latest
Loading...

29 September 2017

லினக்ஸ்-இல் திரைப்படங்களுக்கான சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்வது எப்படி?

0 Views திரைப்படங்களை பார்க்கும் போது சப்-டைட்டிள்கள் இருந்தால் வசனங்களை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இத்துடன் மற்ற மொழி திரைப்படங்களை பார்க்கும் போது சப்-டைட்டிள்கள் அனைத்து வசனங்களையும் புரிந்து கொள்ள வழி செய்யும்.







இணையத்தில் திரைப்படம் பார்ப்பவர்கள், திரைப்படங்களுக்கான சப்-டைட்டிள்களை இணையத்திலேயே டவுன்லோடு செய்ய முடியும். எனினும் சப்-டைட்டிள் ஃபைல்கள் திரைப்படத்துடன் சரியாக சின்க் ஆவதில் பிரச்சனை ஏற்படும். லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்துவோர் திரைப்படங்களுக்கான சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்வது எப்படி?
அனைத்து திரைப்படங்களுக்கும் ஏற்ற சரியான சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்ய பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்த முடியும். அவ்வாறு லினக்ஸ் இயங்குதளத்தில் சீராக இயங்கும் சப்-டைட்டிள் செயலிகள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

சப்டவுன்லோடர்:

இந்த மென்பொருள் opensubtitiles.org பயன்படுத்தி திரைப்படங்களுக்கு கிடைக்கும் சப்-டைட்டிள்களை தேடும். மேலும் திரைப்படங்களின் பெயரை கொண்டு தேடல்களை மேற்கொண்டு சரியான சப்-டைட்டிள்களை பரிந்துரை செய்யும்.

விஎல்சப்:

லினக்ஸ் இயங்குதளத்தில் விஎல்சி மீடியோ பிளேயர் பயன்படுத்தினால் VLSub and Subtitles Finder பிளக் இன் மூலம் சப்-டை்டிள்களை தேடி பயன்பெற முடியும். இந்த பிளக் இன் பயன்படுத்தினால் சப்-டைட்டிள்களை பெறுவது எளிய காரியமாகி விடும்.

சப்லிமினல்:

இணையத்தில் கிடைக்கும் பல்வேறு தளங்களில் தேடல்களை மேற்கொண்டு சப்-டைட்டிள் டவுன்லோடு செய்ய இந்த செயலி கமான்ட் லைன் பயன்படுத்தும். இதனால் சரியான சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்வது மிகவும் எளிமையான காரியமாகிவிடுகிறது.


சப்லினிமினல் டர்மினல் டவுன்லோடு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள கமாண்ட் பயன்படுத்தவும்:
"sudo apt-get install subliminal."
சப்லிமினலை நீங்கள் வைத்துள்ள திரைப்படங்களின் ஃபோல்டரில் வைத்து ரன் செய்ய வேண்டும். கமாண்ட் பயன்படுத்தியதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கமாண்ட் பயன்படுத்தி சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்யலாம்.
"subliminal -1 en movie_name.mp4"
மேலே கொடுக்கப்பட்டுள்ள கமாண்டில் "en" என்ற வார்த்தைக்கு மாற்றாக உங்களுக்கு தேவையான மொழியில் சப்-டைட்டிள் பெற அதற்கான குறியீட்டை வழங்க வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள குறியீடு ஆங்கில மொழியில் சப்-டைட்டிள்களை தேட வழி செய்யும்.
இங்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளும் சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்ய உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

28 September 2017

வாட்ஸ்ஆப்பில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி.?

0 Views
வாட்ஸ்ஆப்பில் அழகிய தமிழில் தகவல்கள் பரிமாறக்கொள்ள விரும்புகிறீர்களா.?? அல்லது முகநூல் பக்கத்தில் உங்களின் புரட்சிமிக்க கருத்துக்களை தமிழில் போஸ்ட் செய்ய விரும்புகிறீர்களா.?? அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், டேப்ளெட் அல்லது பிசியில் தமிழ் மொழி பயன்படுத்தி ஒரு மின்னஞ்சலை உருவாக்க வேண்டுமா.? ஆம் என்றால் – நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கின்றீர்கள்.
ஸ்மார்ட்போன் பயன்பாடுகளின் உதவியுடன் நாம் நமது ஸ்மார்ட்போன்களில் பல அம்சங்களை அனுபவிக்க முடியும். அந்த வகையில் உங்களின் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் மொபைல்போனில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதின் மூலம் நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப்பில், பேஸ்புக்கில் தமிழில் டைப் செய்ய முடியும்.

வழிமுறை #01

உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தின் மூலம் கூகுள் இண்டிக் கீபோர்ட் என்ற (Google Indic Keyboard) பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து, நிறுவவும்.



வழிமுறை #02

ஒருமுறை உங்கள் சாதனத்தில் இந்த ஆப் நிறுவப்பட்டதும். அந்த பயன்பாட்டினை உங்கள் ஸ்மார்ட்போன் ஆப் டிராயரில் இருந்து திறக்கவும்.

வழிமுறை #03

இப்போது பயன்பாட்டின் பிரதான திரையில் “எனேபிள் இன் செட்டிங்ஸ்” (Enable in settings) என்ற பொத்தானைத் தட்டவும்.

வழிமுறை #04

இப்போது “கூகுள் எனேபிள் கீபோர்ட்” என்ற ஆப்ஷனை அதன் அருகில் இருக்கும் பெட்டியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இயக்கம் பெற செய்ய முடியும் (சில ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில், செக் பாக்ஸிற்கு பதிலாக ஆஃப் / ஆஃப் பொத்தானை மாற்றாக இருக்கும்)

வழிமுறை #05



பின்னர், அடுத்த திரையில் “செலெக்ட் இன்புட் மெத்தேட்” என்ற பொத்தானைத் தட்டவும். பின்னர் “இங்கிலிஷ் மற்றும் இந்தியன் லேங்குவேஜ்ஸ்” விசைப்பலகை என்பதைத் தேர்வு செய்யவும்.

வழிமுறை #06

அடுத்த கட்டத்தில், கூகுள் அநாமதேய பயன்பாட்டு புள்ளிவிவரங்களை அனுப்ப ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால் டிக் செய்யவும் அல்லது அதை புறக்கணித்து விட்டு இடது புறம் தேய்க்க “அக்செப்ட்” தேர்வுப்பெட்டியை காண்பீர்கள் அதை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை #07

இப்போது, அடிஷனல் லேங்குவேஜ்ஸ் (கூடுதல் மொழிகள்) விருப்பத்தைத் தட்டவும். பின்னார் “தமிழ் & ஆங்கிலம்” என்ற உள்ளீட்டு முறை பொத்தானை இயக்கவும்.


வழிமுறை #08 
இப்போது வாட்ஸ்ஆப்பை திறந்து, நீங்கள் தமிழ் டைப் செய்ய விரும்பும் மெசேஜ் பாக்ஸை தட்டவும். இப்போது திரையில் கூகுள் இன்க் விசைப்பலகை பாப்-அப் ஆவதை காண்பீர்கள். வழிமுறை #09 இப்போது நீங்கள் கீபோர்டின் மேல் பக்கம் “இந்திய மொழிகளின்” பொத்தானை பார்ப்பீர்கள், அதை தட்டவும், இப்போது பாப் அப் விண்டோவில் “தமிழ்” மொழியை தேர்ந்தெடுக்கவும். வழிமுறை #10 இறுதியாக, தமிழில் தட்டச்சு செய்ய ஒலிபெயர்ப்பு அல்லது நேட்டிவ் விசைப்பலகை (transliteration or Native keyboard mode) முறையை தேர்வு செய்ய உங்களால் தமிழில் டைப் செய்ய முடியும். (உடன் நீங்கள் பின்னர் எப்போது வேண்டுமானாலும் விசைப்பலகை அமைப்பை மாற்றலாம்

ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களை சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது எப்படி?

0 Views ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு, ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களை சைபர் தாக்குதல்களில் இருந்து தங்களது சாதனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை இங்கு தொகுத்திருக்கிறோம்.




ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோரும் தங்களது சாதனங்களை ரூட் செய்திருப்பர். எனினும் ரூட் செய்யப்பட்ட சாதனங்கள் சைபர் தாக்குதல்களுக்கு மிக எளிமையாக இலக்காகும் என்பது பலரும் அறிந்திராத ஒன்றாகும். அந்த வகையில் ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதுகாக்க சில டிப்ஸ்..






ரூட் அக்சஸ் பயன்பாடு: 



ஆண்ட்ராய்டு சாதனத்தை ரூட் செய்தால் முழுமையான அட்மினிஸ்ட்ரேட்டர் அக்சஸ் கிடைத்திடும், எனினும் இவை தீங்கு விளைவிக்கும் செயலிகளுக்கு ஏதுவாகவும் பயன்படுத்த முடியும். இதனால் சூப்பர்சு (SuperSU) செயலியை இன்ஸ்டால் செய்து ஸ்மார்ட்போனில் ரூட் அளவு அக்சஸ் கோரும் செயலிகளை காட்டிக் கொடுக்கும். இதனால் தீங்க விளைவிக்க நினைக்கும் செயலிகளை அறிந்து கொள்ள முடியும்.




ஆப் பெர்மிஷன்: 


கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பல்வேறு செயலிகள் உங்களது சாதனத்தில் அனுமதி கோரும், அவ்வாறு அனுமதி கோரும் செயலிகள் கோரும் அனுமதியை சரிவர கண்காணிக்க F- Secure App Permission செயலி பயனுள்ளதாக இருக்கும். ஆண்ட்ராய்டு சாதனத்தை பாதுகாக்க இந்த செயலி கட்டாயம் இன்ஸ்டால் செய்ய வேண்டிய ஒன்றாக இருக்கிறது.



ஃபயர்வால் பயன்பாடு: 


ஸ்மார்ட்போனில் நம்பகத்தன்மை அற்ற நெட்வொர்க்களில் பயன்படுத்தும் போது உங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க அனைத்து நெட்வொர்க் பயன்பாடுகளையும் முடக்க முடியும். இதை செய்ய AfWall+ சிறப்பானதாக இருக்கும். இந்த செயலி உங்களது டேட்டா நெட்வொர்க்களை பயன்படுத்தும் செயலிகளின் இயக்கத்தை தடுத்து நிறுத்தும்.






ஆண்டிவைரஸ் செயலி: 


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பதில் ஆண்டிவைரஸ் செயலிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் தலைச்சிறந்த ஆண்டிவைரஸ் செயலிகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை பாதுகாக்கலாம்.



இன்ஸ்டால்: 



ஸ்மார்ட்போனினை ரூட் செய்த பின் அதில் அதிகாரப்பூர்வமற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும். இதனால் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை மட்டும் இன்ஸ்டால் செய்வது ஸ்மார்ட்போனிற்கு பாதுகாப்பாக இருக்கும்.




சிஎம் செக்யூரிட்டி செயலி: 





ஆண்ட்ராய்டு சாதனத்தை வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுாக்கும் பணியினை சிஎம் செக்யூரிட்டி செயலி சிறப்பாக செய்யும். இந்த செயலியை கொண்டு ஸ்மார்ட்போனில் நீங்கள் இன்ஸ்டால் செய்துள்ள தீங்கு விளைவிக்கும் செயலிகளை கண்டறிந்து கொள்ள முடியும். இத்துடன் ஆப் லாக் கொண்டு செயலிகளை மற்றவர்கள் பாதுகாக்காமல் தடுக்க முடியும்.




ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்: 



ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் இன்ஸ்டால் செய்து வைத்தால், ஸ்மார்ட்போன் தொலைந்து போனாலும் அதனை டிராக் செய்வது எளிமையாகி விடும். செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கூகுள் அக்கவுண்ட் உடன் லாக்இன் செய்தால், ஸ்மார்ட்போனினை டிராக் செய்வதோடு, லாக் செய்யவும் முடியும்.



ஆப் லாக்கர்: 


நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் சில சமயங்களில் மற்றவர்கள் பயன்படுத்த நேரிடும். அவ்வாறு மற்றவர்கள் பயன்படுத்தும் போது உங்களது தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் ஆப் லாக்கர் செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலியை கொண்டு வாட்ஸ்அப், மெசஞ்சர், பிரவுசர் மற்றும் கேலரி போன்றவற்றை பாதுகாக்க முடியும்.





பிரீ-இன்ஸ்டால் செயலி: 



ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்த பின் பலரும், போனில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வர். ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகள் ஆண்ட்ராய்டு சீராக இயங்க வழி செய்யும். இதனால் இவ்வாறான செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது ஆண்ட்ராய்டு சீராக இயங்குவதை தடுப்பதாக அமையலாம். இதனால் ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யாமல் இருப்பது நல்லது.





பேக்கப்: 



ஸ்மார்ட்போன்களை பேக்கப் செய்வது அவசியமான ஒன்றாகும். ஸ்மார்ட்போன்களை சீரான இடைவெளியில் பேக்கப் செய்வது உங்களது தகவல்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். இவ்வாறு தகவல்களை பேக்கப் செய்ய டைட்டானியம் பேக்கப் செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தகவல்களை பேக்கப் செய்யும். இதில் அனைத்து செயலிகள், சிஸ்டம் ஆப்ஸ் மற்றும் எக்ஸ்டெர்னல் டேட்டா உள்ளிட்டவற்றை பேக்கப் செய்யும். செயலிகள் இயக்கத்திற்கு எவ்வித கோளாறும் ஏற்படாமல் பேக்கப் செய்யும்.




இஸ்ரோவை பார்த்து மீண்டும் ஒருமுறை நாசா வாய்பிளக்க வேண்டிய தேதி அறிவிப்பு.!

0 Views நிலவை நோக்கியா சந்திரயான் 1 விண்கலத்தின் பயணம் தொடங்கி கிட்டதட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலைப்பாட்டில் இஸ்ரோ அதன் அடுத்த நிலவு சந்திப்பை திட்டமிட்டுள்ளது. ஆம் நீங்கள் நினைப்பது சரி தான் சந்திரயான் 2 விண்கலமானது 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) இரண்டாவது ஆளில்லாத நிலவுப் சார்ந்த ஆய்வு பணிக்காக, இந்தியா மீண்டும் இந்த சந்திரனை நோக்கியா பயணத்தை நிகழ்த்தவுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எம்கே 2 ராக்கெட்டில் சந்திரயான் 2 விண்ணில் நுழையவுள்ளது.




இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்களில் ஒன்றான ஜிஎஸ்எல்வி எம்கே 2, இதுவரை பல வெற்றிகரமான ஏவல்களை நிகழ்த்தியுள்ளதால் சந்திராயன் 2 விண்கலமும் வெற்றிகரமானதாக அமையுமென இஸ்ரோ நம்புகிறது. 

சந்திரயான் 2 ஆனது ஆர்பிட்டர், லாண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் மற்றும் சுமார் 3,250 கிலோ எடையுள்ளதாகவும் இருக்கும். அறிக்கைகள் படி, ஆர்பிட்டர் ஆனது நிலவின் சுற்றுவட்டப் பாதையின் சுழற்சியில் ஏவப்படும் அங்கிருந்து சந்திரனை அடைய வேத்மிய ரோவர் ஆனது செலுத்தப்பட்டு அது சந்திரனில் மென்மையான தரையிறக்கத்தை நிகழ்த்தும்.





இந்தியாவின் இந்த இரண்டாவது சந்திர கிரகண பயணமானது, இஸ்ரோவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான சந்திரயான் 1- ன் ஒரு மேம்பட்ட பதிப்பாகும். சந்திராயன் 1 மூலம் நிலவில் கால் வைக்க நான்காவது நாடாக இந்தியா ஆனது என்பதும் இந்த மேம்பட்ட சந்திராயன் 2 பதிப்பின் மூலம் இஸ்ரோ நிச்சயமாக மற்றொரு விண்வெளி ஆய்வு சார்ந்த மைல்கல்லை எட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் தலைச்சிறந்த ரேசிங் கேம்கள்

0 Views ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு இருக்கிறது. அனைவருக்கும் ஏற்ற பட்ஜெட்களில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது.



அந்த வகையில் அனைவரும் விரும்பக்கூடிய அம்சமாக கேமிங் இருக்கிறது. ஒவ்வொருத்தர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனிற்கு ஏற்ப பல்வேறு கேம்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கிறது. அவ்வாறு கேமிங் விளையாடுவோருக்கு ஏற்ற தொகுப்பு இது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் தலைச்சிறந்த ரேசிங் கேம்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.





நீட் ஃபார் ஸ்பீடு (Need For Speed No Limits) 


கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் தலைச்சிறந்த கேமாக நீட் ஃபார் ஸ்பீடு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இதன் கிராஃபிக்ஸ் இருக்கிறது. அதிவேகமாக இயங்கும் இந்த கேம் சீரான அனுபவத்தை வழங்குவதோடு விளையாட பல்வேறு ஆப்ஷன்களையும் வழங்குகிறது.


ஆஸ்ஃபால்ட் 8 ஏர்போர்ன் (Asphalt 8 airborne) 


ஆஸ்ஃபால்ட் சீரிஸ் கேம்களில் இந்த கேம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. சீரான கிராஃபிக்ஸ் மற்றும் கேம்பிளே கொண்டுள்ளதால் இந்த கேம் அதிக டவுன்லோடுகளை பெற காரணமாக இருக்கிறது. எந்நேரமும் ரேசிங் கேம் விளையாடுவோருக்கு ஏற்ற டிஸ்ப்ளே கொண்டிருப்தோடு கேம்பிளே சீராகவும் வேகமாகவும் இருக்கிறது.


காலின் மெக்ரே ரேல்லி (Colin McRae Rally) 



தலைச்சிறந்த ஆஃப்ரோடு ரேசிங் கேம் என்றால் முதலிடம் பிடிப்பது இந்த கேம் தான் எனலாம். முதலில் கணினிகளில் மட்டும் வெளியிடப்பட்ட காலின் மெக்ரே ரேல்லி அதன் பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வெளியிடப்பட்டது. சீரான ஹேன்ட்லிங் மற்றும் வேகத்தை கட்டுப்படுத்தும் வசதிகள் இந்த கேம் விளையாடுவோரை கவரும் முக்கிய அம்சங்களாக இருக்கிறது.




ஜிடி ரேசிங் 2 (GT Racing 2) 



பிரபல கேம் தயாரிப்பு நிறுவனமான கேம்லாஃப்ட் தயாரித்து வெளியிட்ட இந்த கேம் ஒவ்வொரு லெவல் முடித்து ஒவ்வொரு காரினை அன்லாக் செய்யும் படி தயாரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த கேமினை ஆன்லைனில் விளையாடும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.


ரேஜிங் தன்டர் ஃப்ரீ ( Raging Thunder free) 


ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் விளையாட தலைச்சிறந்த கேமாக இது இருக்கிறது. துல்லியமான முப்பறிமான வசதிகள் மற்றும் சீரான கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை விளையாடும் போது சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.



டிராக் ரேசிங் (Drag Racing) 



விளையாடுவோரை அடிமைப்படுத்தும் அளவு சிறப்பான ஆண்ட்ராய்டு கேமாக இது இருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் டிராக் ரேசிங் கேமில் 50க்கும் அதிகமான சான்றளிக்கப்பட்ட கார்கள் உள்ளன.




ரியல் ரேசிங் 3 (Real Racing 3) 


பிரபல கேம் தயாரிப்பு நிறுவனமான எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த கேம் சிறப்பான கிராஃபிக்ஸ் மற்றும் அதிசிறந்த ரேசிங் அனுபவம் வழங்குகிறது. இதில் கார்கள் நிஜ தோற்றம் கொண்டிருப்பது விளையாடுவோருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும்.




ஹில் கிளைம் ரேசிங் (Hill Climb Racing) 


பிளே ஸ்டோரில் கிடைக்கும் கேம்களில் சிறப்பான கேமாக இருப்பதோடு, விளையாடுவோரை மகிழ்விக்கும் அம்சங்களும் நிறைந்த கேமாக இருக்கிறது. விளையாடுவோரின் இயற்பியல் பொது அறிவை சோதிக்கும் வகையில் செல்லும் இந்த கேம் அதிக மகிழ்ச்சியளிக்கும் கேமாகவும் இருக்கும்.


டிராஃபிக் ரேசர் (Traffic Racer) 



இந்த கேம் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் ரேசிங் செய்வதை போன்று அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேம் நகரம், பாலைவனம், பனி மற்றும் நகரத்தில் இரவு நேரம் போன்ற இடங்களில் ரேசிங் செய்யும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.


கார்ஸ் (Cars) 



இந்த கேமில் உள்ள கார்களில் நைட்ரோ சார்ஜ் செய்யப்பட்டிருப்பதால் அதிவேகமாக ரேசிங் செய்ய முடியும். இத்துடன் ஓட்டுநர் தனக்கு ஏற்ப 3D ரேடியேட்டரை உருவாக்கி கொள்ள முடியும். கேம்லாஃப்ட் தயாரித்த கேம்களில் மிகவும் பிரபலமான கேமாக இது இருக்கிறது.





பீச் பகி பிளிட்ஸ் (Beach Buggy Blitz) 



பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள நகரத்தை கார் கொண்டு அழிப்பதே இந்த கேமின் நோக்கமாக உள்ளது. கடற்கரை, ரகசிய குகை என பல்வேறு சுவாரஸ்ய பகுதிகளில் பயணிப்பதோடு கார் அனுபவம் சேர்த்து கேமிங் அனுபவத்தை சிறப்பானதாக மாற்றுகிறது.


ஆங்ரி பேர்ட்ஸ் கோ (Angry Birds Go) 


வழக்கமான ஆங்ரி பேர்டு கேம் என இதனை நினைக்காதீர்கள் இது நிஜமான ரேசிங் கேம் ஆகும். கரடுமுரடான சாலைகளில் வெற்றிக்காக எதையும் செய்யும் ஓட்டுநர்களுடன் மோதுவதை போன்று இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.


நீட் ஃபார் ஸ்பீடு மோஸ்ட் வான்ட்டெட் (Need for Speed™ Most Wanted) 



ஸ்ட்ரீட் ரேசர்களுடன் போட்டியிடும் போது போலீசார் வழிமறித்தால் அங்கிருந்து எவேட் செய்வதை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் பல்வேறு விலை உயர்ந்த கார்கள் ஒவ்வொரு லெவலில் கிடைக்கும். மேலும் கார்கள் அனைத்தும் நிஜ அனுபவத்தை வழங்கும்.


டெத் ரேலி (Death Rally) 



மிகவும் திகிலான கேமாக இருக்கும் டெத் ரேலியில் கார்களை அப்கிரேடு செய்யும் வசதி, ஆயுதங்கள் கொண்டு எதிரிகளை வீழ்த்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டில் கிடைக்கும் கேம்களில் மிகவும் சுவாரஸ்யமான கேமாகவும் இது இருக்கிறது.


சிஎஸ்ஆர் ரேசிங் (CSR Racing) 



நகர சாலைகளில் டிராக் ரேஸ் செய்வதை போல் இந்த கேம் அமைக்கப்பட்டுள்ளது. 100க்கும் அதிகமான லைசன்ஸ் பெற்ற வாகனங்கள் மற்றும் தலைச்சிறந்த கிராஃபிக்ஸ், கேம்பிளே கொண்டுள்ள சிஎஸ்ஆர் ரேசிங் மிகவும் சுவாரஸ்ய கேம்களில் ஒன்றாக இருக்கிறது.




ஹாரிசன் சேஸ் வொர்ல்டு டூர் (Horizon Chase – World Tour) 


ரெட்ரோ கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற கேமாக இது இருக்கும். அதிவேகமாகவும், சிறப்பான கேம் பிளே கொண்ட ரேசிங் கேம் என்பதை தான்டி 80 மற்றும் 90களில் பிரபலமாக இருந்த பல்வேறு ரேசிங் கேம்களை தழுவி இது உருவாகியுள்ளது.

ரேசிங் ஃபீவர் (Racing Fever) 


இந்த கேமில் உங்களுக்கு பிடித்த காரினை தேர்வு செய்து ரேசிங் செய்யலாம். ஒவ்வொரு ரேசிலும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுவதோடு, நண்பர்கள் மற்றும் கேமில் உள்ள மற்றவர்களுடன் போட்டி போட்டு விளையாட முடியும்.


ஆஸ்ஃபால்ட் எக்ஸ்ட்ரீம் :ரேல்லி ரேசிங் (Asphalt Xtreme: Rally Racing)



 ஆஸ்ஃபால்ட் சீரிஸ் கேம்களில் புதுவரவு கேமாக இருக்கும் இந்த கேம் பல்வேறு நிலைகளை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் டிரிஃப்ட் மற்றும் போட்டியாளர்களை காற்றில் பறந்து கடக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது.


நைட்ரோ நேஷன் ஆன்லைன் (Nitro Nation Online) 


மிகவும் அழகிய டிராக் ரேசிங் கேம்களில் இதுவும் ஒன்று எனலாம். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் சீராக வேலை செய்யும் இந்த கேமில் 100க்கும் அதிகமான கார்களை தேர்வு செய்யும் வசதியும், இவற்றில் பெரும்பாலான கார்கள் விலை உயர்ந்த மாடல்களாக இருக்கிறது.




ரியல் ரேசிங் 2 (Real Racing 2) 


ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் மிகவும் பிரபலமான கேம்களில் இதுவும் ஒன்று. எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ் தயாரித்த இந்த கேம் 15 அழகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இதன் கிராஃபிக்ஸ் கேமிற்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.




மினி மோட்டார் ரேசிங் (Mini Motor Racing) 



அனைவருக்கும் பிடித்த ரிமோட் கண்ட்ரோல் கார் ஷோடவுன் போன்ற இந்த கேமில் நைட்ரோ பூஸ்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நண்பர்களுக்கு எதிராக மல்டி பிளேயர் மோட் இடம்பெற்றுள்ளது. இந்த அம்சம் கொண்டு வைபை, ப்ளூடூத் அல்லது ஆன்லைனில் நண்பர்களுடன் விளையாட முடியும்.


டேபிள் டாப் ரேசிங் (Table Top Racing) 



பல்வேறு விருதுகளை வென்றுள்ள டேபிள் டாப் ரேசிங் விப்அவுட் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. கன்சோல் அளவு கிராஃபிக்ஸ் வழங்கும் இந்த கேம் தலைச்சிறந்த கேம்பிளே மற்றும் ஒட்டுமொத்தமாக சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.


ரீவோல்ட் கிளாசிக் (RE-VOLT Classic) 


ஆண்ட்ராய்டில் அதிவேகமான கேம்பிளே மற்றும் தலைச்சிறந்த கிராஃபிக்ஸ் கொண்டுள்ளது. பல்வேறு டிராக் மற்றும் 40க்கும் அதிகமான கார்களை இந்த கேம் கொண்டுள்ளது.


கிரேசி டாக்சி (Crazy Taxi) 

நகரங்களில் ரேசிங் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கேம் விளையாடுவோருக்கு தலைச்சிறந்த அனுபவத்தை வழங்கும். இத்துடன் போக்குவரத்து நெரிசலில் ரேசிங் செய்யும் படி கேம் செல்வதோடு தலைச்சிறந்த கிராஃபிக்ஸ் மற்றும் கேம்பிளே உள்ளிட்டவை கொண்டுள்ளது.




மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...