Latest
Loading...

04 October 2017

வாட்ஸ்ஆப்பில் ஆட்டோமெட்டிக்காக போட்டோக்கள் டவுன்லோட் ஆவதை தடுப்பது எப்படி?

0 Views
உலகெங்கிலும் 1.2 பில்லியன் மக்களால் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்படுகிறது, இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் அளவிற்க்கு அதிகமாக வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்படுகிறது. இது 2009 ஆம் ஆண்டு ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகிய இருவர்களால் இது உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் ஏற்கவே பணி புரிந்தவர்கள். இவர்கள் யாஹூ நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் பேஸ்புக் நிறுவனத்தில் பணி புரிவதற்காக விண்ணப்பித்திருந்தனர். எனினும் அது பேஸ்புக் நிறுவனத்தால் புறக்கணிக்கப்பட்டது.
இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட இருவராலும் உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் சேவையை பேஸ்புக் நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்க வேண்டியிருந்தது. தற்போது வாட்ஸ்ஆப்பில் உள்ள படங்கள், வீடியோக்கள் சேமிப்பதை நிறுத்துவது எப்படி எனப்பார்ப்போம்.

வாட்ஸ்ஆப்:



வைஃபை உடன் இணைக்கப்பட்டிருக்கும்போது வாட்ஸ்ஆப் கேலரியில் தானாகவே போட்டோ மற்றும் வீடியோவை பதிவிறக்கம் செய்துகொள்ளும். மேலும் அந்த வைஃபை செட்டிங்க்ஸ் சென்று படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றை வரமால் மாற்றி அமைக்கலாம்.

செட்டிங்க்ஸ் ;

முதலில் வாட்ஸ்ஆப் செட்டிங்க்ஸ் அமைப்பை தேர்ந்தேடுக்கவேண்டும். தரவு மற்றும் சேமிப்பக பயன்பாட்டில் சில அமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டும்.


ஆட்டோ:

இந்த மெனுவில், மேலே உள்ள மீடியா ஆட்டோ-பதிவிறக்க விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள்.

ஆவணங்கள்:



புகைப்படங்கள், ஆடியோ, வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, நெவர் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

கேமரா ரோல் :

அதன்பின் நீங்கள் கைமுறையாக பதிவிறக்க விரும்பும் போட்டோ மற்றும் வீடியோவை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
ஸ்மார்ட்போன் கேமராவில் ரோல்லின் தோற்றத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தடுக்க மிக எளிமையாக தேர்வுசெய்யலாம், அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது, அமைப்புகள் மெனுவில் செட்டிங்க்ஸ் சென்று கேமரா ரோல் மெனுவைத் திறந்து, அதை ஆப் செய்ய வேண்டும்.

உங்கள் புகைப்படத்தில் உள்ள பெர்சனல் விபரங்களை நீக்குவது எப்படி?

0 Views



இந்த விபரங்கள் ஒரு தேர்ந்த கேமிராவில் தானாகவே ஜிபிஎஸ் மூலம் பதிவு செய்யப்படும். தேதி, நெரம், கேமிராவின் மாடல், ஐஎஸ் ஓ வேகம் மற்றும் போகல் நீளம் ஆகிய விபரங்கள் ஒரு தேர்வு பெற்ற புரபொசனல் கேமிராமேனுக்கு உபயோகப்படும்.
ஆனால் அதே நேரத்தில் இந்த புகைப்படங்கள் பொதுவானவற்றிற்கு பயன்படுத்தும்போது இந்த விபரங்களை நீக்கிவிடுவது நல்லது. இந்த விபரங்களை எப்படி நீக்குவது என்பது குறித்து தற்போது பார்ப்போம்
ஸ்டெப் 1: முதலில் ரைட் க்ளிக் செய்து அதில் உள்ள பிராப்பர்ட்டீஸ் என்பதை செலக்ட் செய்ய வேண்டும்




ஸ்டெப் 2: பின்னர் டீடெய்ல்ஸ் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 3:
 இதில் நீங்கள் EXIF மெட்டாடேட்டை என்ற ஃபைலை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதில் உள்ள Remove Properties and Personal information என்பதை க்ளிக் செய்ய வேண்டும்
ஸ்டெப் 4: தற்போது Remove Properties செலக்ட் செய்து அதில் உள்ள ஃபைல்களை தேர்வு செய்ய வேண்டும்
ஸ்டெப் 5: அதில் எந்தெந்த பகுதிகளை நீக்க வேண்டும் அல்லது அனைத்தையும் நீக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள் ப
ஸ்டெப் 6: பின்னர் தேர்வு செய்தவுடன் ஓகே பட்டனை அழுத்தினால் நீங்கள் செலக்ட் செய்த விபரங்கள் மறைந்துவிடும்,

03 October 2017

'உங்கள் முகத்தை காட்டினால் தான் இனி பேஸ்புக் திறக்கும்'

0 Views
Facebook-to-introduce-facial-recognition-for-account



சான் பிரான்சிஸ்கோ :சமூக வலைதளமான பேஸ்புக் பக்கத்தில் கணக்கை தொடங்குவதற்கு முகத்தையே அடையாள அங்கீகாரமாகவும், பாஸ்வேர்டாகவும் பயன்படுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

தற்போது பேஸ்புக் பக்கத்தில் கணக்கு தொடங்க மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண் போன்றவற்றை நடைமுறையில் உள்ளது.   இதேபோல், பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டு விட்டாலோ, பாஸ்வேர்டு மறந்து விட்டாலோ, அதனைத் திரும்பப் பெறுவதற்கு மின்னஞ்சல், கைபேசி எண் போன்றவற்றை அளிக்க வேண்டும்.

இந்நிலையில் பேஸ்புக்கில் கணக்கு துவங்க  முகத்தையே பாஸ்வேர்டாகவும், அடையாள உறுதிச் சான்றாகவும் பயன்படுத்தும் முறையை செயல்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

முறைகேடுகள் நிகழாமல் தடுப்பதற்குரிய தொழில்நுட்ப பாதுகாப்புகளுடன், புதிய நடைமுறை வரும் மே மாதத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.

நைட் முழுக்க போனுக்கு சார்ஜ் போடலாமா என்ற கேள்வி உங்களுக்கும் இருக்கா?... அப்ப இத படிங்க...

0 Views
full-night-charging-right-or-wrong


அப்படி இரவு ழுமுக்க சார்ஜ் போட்டு காலையில் தான் சார்ஜிலிருந்து எடுப்போம். அவ்வாறு இரவு முழுக்க சார்ஜ் போடலாமா?... அப்படியே போட்டாலும் உங்கள் ஸ்மார்ட்போன் என்ன ஆகும்?

பொதுவாக எந்த போனாக இருந்தாலும் பேட்டரி ஓரளவுக்கு மேல் ஹீட் ஆகக்கூடாது. ஆனால் இப்போது வரும் போன்களில் புராசஸர் வேகம் அதிகமாக்குவதால் பேட்டரி அதிகமாக ஹீட் ஆகும் வாய்ப்பு உண்டு.

அதனால் எவ்வளவு நேரம் சார்ஜ் போடுவது  என்ற கேள்விக்கு குறிப்பிட்ட சில போன்களைப் பொருத்துதான் நமக்கு பதில் கிடைக்கும்.
பொதுவாக எந்த போனாக இருந்தாலும் பேட்டரி ஓரளவுக்கு மேல் ஹீட் ஆகக்கூடாது. ஆனால் இப்போது வரும் போன்களில் புராசஸர் வேகம் அதிகமாக்குவதால் பேட்டரி அதிகமாக ஹீட் ஆகும் வாய்ப்பு உண்டு. அதனால் எவ்வளவு நேரம் சார்ஜ் போடுவது என்ற கேள்விக்கு குறிப்பிட்ட சில போன்களைப் பொருத்துதான் நமக்கு பதில் கிடைக்கும். இதை எப்படி தெரிந்துகொள்வது? நீங்கள் ஓய்வாக இருக்கும்பொழுது, போனில் 20 சதவீதத்துக்கும் குறைவாக பேட்டரி இருக்கும்பொழுது சார்ஜில் போட்டுவிட்டு, அது முழுமையாக சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று பாருங்கள். சில போன்கள் 2 மணிநேரம் எடுக்கும். சில போன்கள் 5 மணிநேரம் எடுக்கும். அந்த நேர அளவைப் பொருத்து நீங்கள் இரவில் சார்ஜ் போடுங்கள். இப்போது வரும் சில போன்களில் ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் ஏறியதும் கரண்ட் சப்ளை கட் செய்யப்படும். அப்படிப்பட்ட போன் பயன்படுத்துபவர்கள் இரவு முழுக்க சார்ஜ் போடுவதால் எந்த பிரச்னையும் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். அதுவும் பிரச்னை தான். குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜ் போட்டு எடுத்துவிடுங்கள். அப்போதுதான் உங்கள் போனை அதிகமாக ஹீட் ஆவதிலிருந்து தடுக்க முடியும்.
இதை எப்படி தெரிந்துகொள்வது?

நீங்கள் ஓய்வாக இருக்கும்பொழுது, போனில் 20 சதவீதத்துக்கும் குறைவாக பேட்டரி இருக்கும்பொழுது சார்ஜில் போட்டுவிட்டு, அது முழுமையாக சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று பாருங்கள். சில போன்கள் 2 மணிநேரம் எடுக்கும். சில போன்கள் 5 மணிநேரம் எடுக்கும். அந்த நேர அளவைப் பொருத்து நீங்கள் இரவில் சார்ஜ் போடுங்கள்.

இப்போது வரும் சில போன்களில் ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் ஏறியதும் கரண்ட் சப்ளை கட் செய்யப்படும். அப்படிப்பட்ட போன் பயன்படுத்துபவர்கள் இரவு முழுக்க சார்ஜ் போடுவதால் எந்த பிரச்னையும் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். அதுவும் பிரச்னை தான்.

குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜ் போட்டு எடுத்துவிடுங்கள். அப்போதுதான் உங்கள் போனை அதிகமாக ஹீட் ஆவதிலிருந்து தடுக்க முடியும்.


வாட்ஸ்அப்ல நீங்க யார்கிட்ட அதிகமா சாட் பண்ணீங்கன்னு தெரிஞ்சிக்கணுமா?... இத க்ளிக் பண்ணுங்க...

0 Views
new-find-chat-memory-facilities-for-whatsapp


ஐபோனில் மட்டுமே இருந்த இந்தப் புதிய வசதி தற்போது ஆண்டிராய்டிலும் அறிமுகமாகி உள்ளது.

எப்படிக் கண்டுபிடிக்கிறது?

வாட்ஸ் அப்பில் 'செட்டிங்ஸ்' பகுதிக்குச் செல்லுங்கள். அங்கே புதிதாக இருக்கும் 'டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ்' பக்கத்தை க்ளிக் செய்யுங்கள் அங்கே எந்த எண்ணின் சாட்டுக்கு எவ்வளவு மெமரி தீர்ந்திருக்கிறது என்பதன் பட்டியலைக் காண முடியும்.

குறிப்பிட்ட சாட்டைக் க்ளிக் செய்து நாம் அனுப்பிய அல்லது நமக்கு வந்த குறுஞ்செய்திகள், தொடர்பு எண்கள், லொகேஷன், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றின் முழுத் தகவலைப் பெற முடியும்.



இந்த புதிய வசதியில் உள்ள 'மேனேஜ் மெசேஜஸ்' என்பதை கிளிக் செய்தால் அதன்மூலம் உங்கள் போனில் உள்ள மெசேஜ்களைத் தேர்ந்தெடுக்கவோ, அழிக்கவோ முடியும்.

அந்த மேனேஜ் மெசேஜ் லிஸ்ட்டைப் பார்த்தாலே நாம் யாருடன் மிக அதிகமாக சாட் செய்து நம்முடைய சாட் மெமரியை காலி செய்திருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த வசதி தற்போதைய v2.17.340 வாட்ஸ்அப் வெர்ஷனில் கிடைக்கிறது.


வைரலாகும் 'ப்ளட் டோனர்' அம்சம் : எப்படி வேலை செய்கிறது, ஆக்டிவேட் செய்வதெப்படி.?

0 Views இரத்த தான முகாம்கள், இரத்த வங்கிகள் மற்றும் அதனை தேடும் நபர்கள் ஆகியோர்களை ஒன்றிணைக்கும் புதிய அம்சத்தை பேஸ்புக் உருவாக்கியுள்ளது. இந்த அம்சமானது, இந்திய 'ப்ராடெக்ட் டெவலப்பர்' ஆன ஹேமா புடரஜூ உடன் இணைந்து உருவாக்கம் பெற்றுள்ளதாக பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இதனால் என்ன பயன்.?

 இந்த அம்சத்துடன் இணைந்து ஒரு 'ப்ளட் டோனர்' ஆகுவது எப்படி.?





குறிப்பிட்ட தொடர்புகள் அல்லது வலையமைப்பிற்கு வெளியே உள்ள நபர்களிடம் இரத்தம் பெறவதும் அல்லது இரத்தம் கொடுப்பதும் எவவ்ளவு கடினமான காரியமென்பதை நம்மில் பெரும்பாலானோர்கள் அறிவோம். அதனை மனதிற்கொண்டு உருவாக்கம் பெற்ற மிக எளிமையான 'டூல்' தான் இந்த அம்சம்.

மிகவும் வைரலாகி வரும் 'ப்ளட் டோனர் இலாப நோக்கற்ற நிறுவனங்கள், இரத்த வங்கிகள் மற்றும் இரத்தம் வழங்குபவர்கள்/வாங்குபவர்கள் ஆகியோர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வந்துள்ள இந்த 'ப்ளட் டோனர்' அம்சத்தின் கீழ் இயங்கும் ஒரு நபருக்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ இரத்தம் தேவைப்பட்டால் அருகாமையில் உள்ளவர்களுக்கு ஒரு அறிவிப்பு கிடைக்கப்பெறும். குறிப்பிட்ட வகை இரத்தத்தை பெற விரும்புபவர்கள், இரத்தம் வழங்க தயாராக உள்ள சாத்தியமான நபர்களுடனும் தொடர்பு கொள்ளவும் இந்த அம்சம் உதவுகிறது.


வழிமுறை #01 



இந்திய பேஸ்புக் பயனர்களின் மத்தியில் மிகவும் வைரலாகி வரும் இந்த 'ப்ளட் டோனர்' அம்சத்தை நீங்களும் ஆக்டிவேட் செய்ய விரும்பினால். கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பபற்றவும். முதலில், பேஸ்புக் நியூஸ் ஃபீட்டில் அவ்வப்போது காட்சிப்படும் 'ப்ளட் டோனர் ' அம்சத்தை பார்த்தால், அதை கிளிக் செய்து உள்நுழையவும்.
வழிமுறை #02 

அதன்பின்னர், நீங்கள் எந்த இரத்த வகை இரத்தம் கொண்டவர்கள் என்பதை தேர்வு செய்யவும். அதனை தொடர்ந்து, நீங்கள் முன் எப்போதும் இரத்தம் வழங்கியது உண்டா.? என்ற கேள்வி உட்பட சில கணக்கெடுப்பு சார்ந்த கேள்விகள் உங்களிடம் கேட்கப்படும்.

வழிமுறை #03 


இப்போது, உங்களுக்கான 'ப்ளட் டோனர்' வலைப்பின்னல் அம்சம் திறக்கப்படும். நீங்கள் இந்த செய்தியை பரப்ப விரும்பினால், உங்கள் சுயவிவரப் பக்கத்தில் இதனை வெளிப்படுத்தலாம் அதாவது ஸ்டேட்டஸ் போல பகிர்ந்து கொள்ளலாம்.


நோட்டிபிக்கேஷன் கிடைக்கும் 

ஏதேனும் இரத்தம் தேவை என்ற கோரிக்கை உருவாக்கப்பட்டால், தேவையான இரத்த வகை கொண்ட 'ப்ளட் டோனர்'களுக்கு "குறிப்பிட்ட" நோட்டிபிக்கேஷன் கிடைக்கும். அவர்கள் பதிலளிக்க விரும்பினால், அவர்கள் நேரடியாக கோரிக்கையின் வாயிலாக அல்லது வாட்ஸ்ஆப், மெஸஞ்சர் அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்பு கொள்ளலாம்.
ப்ரொபைலில் 'இரத்த தானம்' பதிவு இணைப்பு 

வரவிருக்கும் நாட்களில் பயனர்களின் சுயவிவரப் பக்கத்தில் 'இரத்த தானம்' பதிவு இணைப்பை பேஸ்புக் நிறுவனம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


8 வகை ஸ்கேம் இமெயில்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

0 Views இன்றைய டெக்னாலஜி உலகில் இமெயில் பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. இந்த நிலையில் ஸ்கேம் என்று சொல்லக்கூடிய மோசடி இமெயில் குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த ஸ்கேம் இமெயில் நமக்கு பல தொல்லைகள் தரும் என்பதால் இப்படிப்பட்ட இமெயில்களின் வகைகள் குறித்து தற்போது பார்ப்போம்.

spam mail




லாட்டரி ஸ்கேம் லாட்டரி என்ற பெயரில் ஸ்கேம் இமெயில் பலருக்கு வந்திருக்கும். உங்களுக்கு மிகப்பெரிய தொகை லாட்டரி பரிசு கிடைத்திருப்பதாகவும், அந்த தொகையை பெற சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்றும் இமெயில் வருவதுண்டு. இந்த விஷயத்தில் முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எந்தவித லாட்டரியிலும் நாம் கலந்து கொள்ளாமல் பரிசு கிடைக்காது. எனவே இவ்வகை இமெயில்களை யோசிக்காமல் டெலிட் செய்துவிடுங்கள்


சர்வே ஸ்கேம் 


சர்வே ஸ்கேம் என்ற இமெயில்களை அனுப்பி அதில் கலந்து கொண்டு நமது கருத்தை கேட்கும் வகையில் சில இமெயில்கள் வரும். அவற்றிற்கு ஒரு தொகை நமக்கு கிடைக்கும் என்றும் இருக்கும். உலக வெப்பமாகுதல், உலகப்போர் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்த சர்வேயாக பெரும்பாலும் இருக்கும். 

ஆனால் இந்த சர்வே லிங்குகளை நீங்கள் க்ளிக் செய்தால் அது உடனே மால்வேர் இணையதளத்திற்கு அழைத்து செல்லும், அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்துவிடும் அபாயம் ஏற்படும். அதன்பின்னர் ஹேக்கர்கள் உங்கள் கம்ப்யூட்டரை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து உங்களது முக்கிய பரிவர்த்தனைகளின் பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. எனவே சர்வே இமெயில்களை ஓப்பன் செய்ய வேண்டாம்.

வீட்டில் இருந்தே வேலை: 



வீட்டில் இருந்து கொண்டே எளிதாக ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற இமெயில்கள் வருவது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. வேலையை தொடங்கும் முன் சாப்ட்வேர் பெறுவதற்காக அல்லது பயிற்சிக்காக உங்களிடம் இருந்து ஒரு தொகையை பெறவே இந்த இமெயில்கள். இதுபோன்ற மோசடி இமெயில்களில் மாட்டிக்கொள்ளாமல் உடனே டெலிட் செய்துவிடுங்கள். வீட்டில் இருந்தே வேலை என்ற இமெயில்கள் பெரும்பாலும் பொய்யானவையே

ஃபிஷ்ஷிங் இமெயில் 


இந்த வகை இமெயில்கள் சட்டபூர்வமான அமைப்புகளைப் போலவே தோற்றமளிக்கும். ஆனால் உங்கள் பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டுகளை அபகரித்து உங்களைக் கவர்ந்திழுக்கும் ஸ்கேம் என்பதால் இவ்வகை இமெயில்களில் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

நைஜீரியா இமெயில் 




இவ்வகை இமெயில்கள் உங்களது நெருங்கிய நண்பரை போல தகவல் அனுப்புவார்கள். தங்களிடம் ஒரு பெரிய தொகை இருப்பதாகவும், அதை உங்களுடைய வங்கி கணக்குக்கு அனுப்ப உள்ளதாகவும், அதற்கான செலவுத்தொகையாக மட்டும் ஒரு தொகையை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிப்பார்கள். இவ்வகை இமெயில்கள் 419 மோசடி என்று பெயர். பெரும்பாலும் நைஜீரியாவில் இருந்து இவ்வகை இமெயில்கள் வருவதால் இவற்றையெல்லாம் படிக்காமலேயே அழித்துவிடலாம்

குவிஸ் ஸ்கேம்: 


இவ்வகை இமெயில்களில் உங்களுக்கு ஒரு கேள்வி கேட்டு பதிலளிக்குமாறும், அதற்கு உங்களுக்கு ஒரு பரிசுத்தொகை கிடைக்க்கும் என்றும், ஆனால் இதில் கலந்து கொள்வதற்கு ஒரு தொகை வேண்டும் என்றும் கேட்கும். நீங்கள் தொகையை அனுப்பினால் அதோடு அவ்வளவுதான். எனவே இவ்வகை இமெயில்களை தவிர்த்துவிடுவது நல்லது

மறைமுக URL ஸ்கேம்:


 இவ்வகை இமெயில்கள் பெரும்பாலும் டுவிட்டரின் URL போல் இருக்கும். இந்த வகை இமெயில்களை க்ளிக் செய்வதற்கு முன்னர் அதன் புரொஃபலை பார்த்து, அது உண்மையான அக்கவுண்ட் தானா? என்பதை சோதனை செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் அந்த URLல் உள்ளே மறைந்திருக்கும் மால்வேர் உங்கள் கம்ப்யூட்டரை ஹேக் செய்ய வைத்துவிடும்.

குழந்தை-சிகிச்சை ஸ்கேம்: 





நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி, அந்த குழந்தையின் சிகிச்சைக்காக ஒரு சிறு தொகையை மட்டும் அனுப்ப சொல்லி இமெயில் வரும். நீங்கள் இரக்க குணமுடையவராக இருந்தால் அந்த தொகையை ஆன்லைன் மூலம் அனுப்புவீர்கள். ஆனால் உங்களது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு உங்கள் அக்கவுண்டில் உள்ள அனைத்து தொகையையும் இழக்கும் நிலை இதனால் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே உஷாராக இருங்கள்.







02 October 2017

ஸ்மார்ட்போனில் எந்தவித சாப்ட்வேர் உதவி இல்லாமல் யூடியூப் வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி?

0 Views
how-download-videos-using-magic-in-tamil


தற்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போனில் யூடியூப் வீடியோவை எளிமையாக பார்க்கின்றனர். மேலும் ஸ்மார்ட்போனில் யூடியூப் வீடியோவை டவுன்லோடு செய்வதற்க்கு பல சாப்ட்வேர் உதவிகள் தேவைப்படுகிறது, ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது.
எந்தவித சாப்ட்வேர் உதவி இல்லாமல் யூடியூப் வீடியோவை மிக எளிமையான வழிமுறையில் டவுன்செய்ய பல வழிமுறை உள்ளது, குறிப்பாக குறைந்த நேரத்தில் மிக அருமையாக யூடியூப் வீடியோவை டவுன்லோடு செய்யமுடியும். பின்வரும் வழிமுறைகளில் யூடியூப் வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி எனப் பார்ப்போம்.

வழிமுறை-1:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இணையத்தின் வழியாக யூடியூப் பகுதிக்கு செல்ல வேண்டும்.

வழிமுறை-2:

அதன்பின் யூடியூப் பகுதியில் உங்களுக்கு தேவையான வீடியோவை தேர்வுசெய்ய வேண்டும்.
how-download-videos-using-magic-in-tamil



வழிமுறை-3:

அடுத்து நீங்கள் தேர்ந்தேடுத்த யூடியூப் வீடியோவின் 'யுஆர்எல்'-ஐ குறித்துவைத்துக்கொள்ளவேண்டும்.

வழிமுறை-4:

நீங்கள் தேர்ந்தேடுத்த யூடியூப் 'யுஆர்எல்' பொறுத்தமட்டில் 'யூடியூப் என்ற ஆங்கில சொற்களுக்கு இடையே மேஜிக் என ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும்'

வழிமுறை-5:

மேஜிக் என்று டைப் செய்தவுடன் அடுத்து உங்கள் யூடியூப் வீடியோ டவுன்லோடு செய்ய தயார் நிலையில்இருக்கும்.

வழிமுறை-6:

அடுத்து டவுன்லோடு என்ற பொத்தானை அழுத்தவும். மிக விரைவில் உங்கள் வீடியோவை டவுன்லோட் ஆகும்.

வழிமுறை-7:

அதன்பின் உங்கள் ஸ்மார்ட்போன் கேலரி பகுதியில் சென்று பார்த்தால் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோ இருக்கும்.

உங்களுக்கு இந்த பேட்டர்ன் லாக் இரகசியம் தெரியுமா.? (ஆண்ட்ராய்டு)

0 Views
how-show-owner-info-on-android-phone-lock-screen-in-tamil



இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போனின் உதவி மிகவும் அதிமாக உள்ளது, நீங்கள் சாலையில் செல்லும் போது விபத்து விபத்து ஏற்பட கூடிய சூழ்நிலையில் உங்கள் ஸ்மார்ட்போன் தவறி கீழே விழும், அந்த சமயத்தில் நீங்கள் மயக்கத்தில் இருப்பீர்கள், அப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டர்ன் லாக் செட்டிங் போடப்பட்டு வைத்திருந்தால், உங்கள் வீட்டிற்க்கும் மற்றும் உறவினர்களுக்கும் தகவல் கொடுப்பது மிகவும் சிறமம்.
அது போன்ற சமையத்தில் பேட்டர்ன் லாக் செட்டிங் அமைத்திருந்தாலும் சில வழிகளில் உங்கள் நெருங்கிய உறவினர்களின் மொபைல் எண்ணை உங்களது டிஸ்பிளேவுக்கு கொண்டுவர முடியும். அதன் மூலம் மிக எளிமையாக தகவல் கொடுக்க முடியும் அதற்க்கு சில வழிமுறைகள் உள்ளன, பின்வரும் ஸ்லைடர்களில் அந்த வழிமுறைகளை பார்க்கலாம்.

வழிமுறை-1:

முதலில் உங்கள்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் செட்டிங் உள்ளே நுழையவேண்டும்.

வழிமுறை-2:

அதன்பின் லாக் ஸ்கீரின் என்ற அமைப்பை தேர்ந்தேடுத்து உழ்நுழைய வேண்டும்.

வழிமுறை-3:



பின்பு ஸ்கீரின் லாக் அமைப்பை பயன்படுத்தி குறிப்பிட்ட வடிவில் உங்களது பேட்டர்ன் லாக் அமைத்துக்கொள்ளமுடியும்.

வழிமுறை-4:

அதன்பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓனர் இன்ஃபோ என்ற அமைப்பை தேர்ந்தேடுக்கவும், அதில்உங்களுடைய நெருங்கிய உறவினர்களின் பெயர் மற்றும் மொபைல் எண்களை பதிவு செய்யவேண்டும்.

வழிமுறை-5:

நீங்கள் பதிவு செய்த அந்த பெயர் மற்றும் மொபைல் எண்கள் உங்களுடைய டிஸ்பிளேவுக்கு வரும்.

ஸ்மார்ட்போன் பேட்டரியை பொறுத்தமட்டில் மீறக்கூடாத 4 விதிகள் உள்ளன, அவைகளென்ன.?

0 Views
4-rules-help-double-your-phone-s-lifespan


எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு, முக்கியமாக உங்கள் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன் பேட்டரிக்கும் ஒரு எல்லை உண்டு. அது மீறப்படும் போது - டமால் டூமீல் தான். பேட்டரியை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத ஒருவர் அது பாழாகிப்போன பின்னரோ வெடிப்பிற்கு உள்ளாகிய பின்னரே வருத்தப்படுவதிலும், ஸ்மார்ட்போன் நிறுவனம் மீது கோபம் கொள்வதிலும் அர்த்தமே இல்லை.
முதலில் உங்கள் கையில் இருப்பது ஒரு கருவி என்பதை உணருங்கள், நீங்கள் நினைக்கும்படி அது நடந்துகொள்ளும், ஆனால் எல்லா நேரங்களில் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதை புரிந்துகொள்வதற்கு ஸ்மார்ட்போன் பேட்டரி பாதுகாப்பு சார்ந்த மீறக்கூடாத 4 விதிகள் உள்ளன. அவைகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவைகளென்ன.?

மீறக்கூடாத விதி #04

தொலைபேசி முழுமையாக (100%) சார்ஜ் ஆகிவிட்ட பின்னர் தொடர்ந்து சார்ஜர் பின் ஸ்மார்ட்போனோடு செருகப்பட்டிருப்பது செய்யக்கூடாத ஒரு விடயமாகும். சார்ஜ் செய்யப்படும் சாதனமானது ஏற்கனவே 100% சார்ஜ் ஆகிவிட்டதை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உடனே அன்பிளக் செய்யவும். பேட்டரி வாழ்நாளை மிக வேகமாக கரைக்கும் காரியங்களில் மிகவும் மோசமானது இதுதான்.

மீறக்கூடாத விதி #03

ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். உங்கள் தொலைபேசி 100% என்ற அளவு வரை சார்ஜ் ஆகியிருக்க வேண்டுமென்ற தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போன் எப்போதுமே 100% பேட்டரி கொண்டிருக்க வேண்டியதில்லை. ஸ்மார்ட்போனை எப்போதுமே அதன் முழு கொள்ளளவில் வைத்திருப்பது பேட்டரியை மிகவும் சேதப்படுத்தும்.
4-rules-help-double-your-phone-s-lifespan



மீறக்கூடாத விதி #02

உங்கள் தொலைபேசியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சார்ஜ் செய்ய மறக்காதீர்கள். முடிந்த வரை போதுமான அளவு சார்ஜ் செய்துவிட்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்துங்கள் இல்லையெனில் சார்ஜ் தேவை என்ற நோட்டிபிக்கேஷன் வரும் முன்பே சார்ஜருடன் கனெக்ட் ஆகிவிடுங்கள். பேட்டரி தீரும் கடைசி நொடிவரைக்கும் காத்திருந்து மொபைல் பயன்பாடு நிகழ்த்துவது தவறு.

மீறக்கூடாத விதி #01

ஓவர்ஹீட்டிங் ஆவதை அதாவது கருவி மிகவும் சூடாகுவதை கட்டாயம் தவிர்க்கவும். பேட்டரிகள் மிகவும் வெப்ப உணர்திறன் கொண்டவைகளாகும். ஒருவேளை சார்ஜ் செய்த பிறகும் கூட, உங்கள் கேஜெட்கள் சூடாகினால் அதன் கேஸ்களை கழற்றிவிட்டு அதை சார்ஜ் செய்யுங்கள். மறுபுறம், நீங்கள் உங்கள் கருவியையோ சூரிய ஒளியின் கீழ் வைத்திருக்கவில்லை என்பது உறுதி செய்துகொள்ளுங்கள்.
Thanks for your Visiting..Keep it up.. :) :)

எதுவித Software-ம் இன்றி Internet வேகத்தை கிட்டத்தட்ட 30%-ற்கும் மேல் அதிகரிப்பது எப்படி?

0 Views

இணையம் உபயோகிக்கும் அனைவருக்கே உள்ள பொதுவான பிரச்சினை, இணைய வேகம். சில இடங்களில் நீங்கள், உங்கள் இணைய வழங்குனரிடம் இருந்து சிறப்பான வேகத்தை பெற்று கொள்ள முடியுமாக இருந்தாலும், பல இடங்களில் டவர் சரியாக கிடைக்காத காரணத்தால் இன்டர்நெட் வேகம் மிக மந்தமாகவே உள்ளது.



இப்படியான சந்தர்ப்பங்களில் உங்கள் கணனியில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இன்டர்நெட் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும்.


உங்கள் கணனியில் Start Menu-இற்கு சென்று அங்கே Run என்று Type செய்து Enter-ஐ அழுத்தவும்.

தோன்றும் window-வில் gpedit.msc என்று Type செய்து Enter-ஐ அழுத்தவும்.


அடுத்து தோன்றும் Window-வில் கீழ் குறிப்பிட்டுள்ள Path-ஐ சென்றடையவும்.

Computer configuration > Administrative templates >  network > QoS Packet Scheduler


அங்கே வலது பக்கத்தில் காணப்படும் Limit Reservable Bandwidth எனும் Option-ஐ Double Click செய்யவும்.



அடுத்து திறக்கப்படும் Window-வில் Enable எனும் Option-ஐ Click செய்து Bandwidth Limit-ஐ 0 என்று வைத்து OK Button-ஐ Click செய்யுங்கள்.



அவ்வளவு தான். இப்போது நீங்கள் இணையத்தை உபயோகிக்கும் போது கண்டிப்பாக இணைய வேகத்தில் மாற்றத்தை உணர்வீர்கள். இந்த சிறிய Settings மாற்றமானது உங்கள் கணனியில் இருக்கும் இணைய வேக கட்டுபாட்டை மாற்றி, இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது.

பதவி வெற்றிடங்கள் (18) - வெளிக்கள / அலுவலக உத்தியோகத்தர்கள் - சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு..!

0 Views
vacancy

பதவி வெற்றிடங்கள் (18) - வெளிக்கள / அலுவலக உத்தியோகத்தர்கள் - சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு..!



முழு விபரம்:


srilanka-job-for-ministry-of-health















மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...