Latest
Loading...

04 October 2017

வாட்ஸ்ஆப்பில் ஆட்டோமெட்டிக்காக போட்டோக்கள் டவுன்லோட் ஆவதை தடுப்பது எப்படி?

0 Views
உலகெங்கிலும் 1.2 பில்லியன் மக்களால் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்படுகிறது, இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் அளவிற்க்கு அதிகமாக வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்படுகிறது. இது 2009 ஆம் ஆண்டு ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகிய இருவர்களால் இது உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் ஏற்கவே பணி புரிந்தவர்கள். இவர்கள் யாஹூ நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் பேஸ்புக் நிறுவனத்தில் பணி புரிவதற்காக விண்ணப்பித்திருந்தனர். எனினும் அது பேஸ்புக் நிறுவனத்தால் புறக்கணிக்கப்பட்டது.
இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட இருவராலும் உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் சேவையை பேஸ்புக் நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்க வேண்டியிருந்தது. தற்போது வாட்ஸ்ஆப்பில் உள்ள படங்கள், வீடியோக்கள் சேமிப்பதை நிறுத்துவது எப்படி எனப்பார்ப்போம்.

வாட்ஸ்ஆப்:



வைஃபை உடன் இணைக்கப்பட்டிருக்கும்போது வாட்ஸ்ஆப் கேலரியில் தானாகவே போட்டோ மற்றும் வீடியோவை பதிவிறக்கம் செய்துகொள்ளும். மேலும் அந்த வைஃபை செட்டிங்க்ஸ் சென்று படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றை வரமால் மாற்றி அமைக்கலாம்.

செட்டிங்க்ஸ் ;

முதலில் வாட்ஸ்ஆப் செட்டிங்க்ஸ் அமைப்பை தேர்ந்தேடுக்கவேண்டும். தரவு மற்றும் சேமிப்பக பயன்பாட்டில் சில அமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டும்.


ஆட்டோ:

இந்த மெனுவில், மேலே உள்ள மீடியா ஆட்டோ-பதிவிறக்க விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள்.

ஆவணங்கள்:



புகைப்படங்கள், ஆடியோ, வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, நெவர் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

கேமரா ரோல் :

அதன்பின் நீங்கள் கைமுறையாக பதிவிறக்க விரும்பும் போட்டோ மற்றும் வீடியோவை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
ஸ்மார்ட்போன் கேமராவில் ரோல்லின் தோற்றத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தடுக்க மிக எளிமையாக தேர்வுசெய்யலாம், அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது, அமைப்புகள் மெனுவில் செட்டிங்க்ஸ் சென்று கேமரா ரோல் மெனுவைத் திறந்து, அதை ஆப் செய்ய வேண்டும்.

உங்கள் புகைப்படத்தில் உள்ள பெர்சனல் விபரங்களை நீக்குவது எப்படி?

0 Views



இந்த விபரங்கள் ஒரு தேர்ந்த கேமிராவில் தானாகவே ஜிபிஎஸ் மூலம் பதிவு செய்யப்படும். தேதி, நெரம், கேமிராவின் மாடல், ஐஎஸ் ஓ வேகம் மற்றும் போகல் நீளம் ஆகிய விபரங்கள் ஒரு தேர்வு பெற்ற புரபொசனல் கேமிராமேனுக்கு உபயோகப்படும்.
ஆனால் அதே நேரத்தில் இந்த புகைப்படங்கள் பொதுவானவற்றிற்கு பயன்படுத்தும்போது இந்த விபரங்களை நீக்கிவிடுவது நல்லது. இந்த விபரங்களை எப்படி நீக்குவது என்பது குறித்து தற்போது பார்ப்போம்
ஸ்டெப் 1: முதலில் ரைட் க்ளிக் செய்து அதில் உள்ள பிராப்பர்ட்டீஸ் என்பதை செலக்ட் செய்ய வேண்டும்




ஸ்டெப் 2: பின்னர் டீடெய்ல்ஸ் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 3:
 இதில் நீங்கள் EXIF மெட்டாடேட்டை என்ற ஃபைலை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதில் உள்ள Remove Properties and Personal information என்பதை க்ளிக் செய்ய வேண்டும்
ஸ்டெப் 4: தற்போது Remove Properties செலக்ட் செய்து அதில் உள்ள ஃபைல்களை தேர்வு செய்ய வேண்டும்
ஸ்டெப் 5: அதில் எந்தெந்த பகுதிகளை நீக்க வேண்டும் அல்லது அனைத்தையும் நீக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள் ப
ஸ்டெப் 6: பின்னர் தேர்வு செய்தவுடன் ஓகே பட்டனை அழுத்தினால் நீங்கள் செலக்ட் செய்த விபரங்கள் மறைந்துவிடும்,

03 October 2017

'உங்கள் முகத்தை காட்டினால் தான் இனி பேஸ்புக் திறக்கும்'

0 Views
Facebook-to-introduce-facial-recognition-for-account



சான் பிரான்சிஸ்கோ :சமூக வலைதளமான பேஸ்புக் பக்கத்தில் கணக்கை தொடங்குவதற்கு முகத்தையே அடையாள அங்கீகாரமாகவும், பாஸ்வேர்டாகவும் பயன்படுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

தற்போது பேஸ்புக் பக்கத்தில் கணக்கு தொடங்க மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண் போன்றவற்றை நடைமுறையில் உள்ளது.   இதேபோல், பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டு விட்டாலோ, பாஸ்வேர்டு மறந்து விட்டாலோ, அதனைத் திரும்பப் பெறுவதற்கு மின்னஞ்சல், கைபேசி எண் போன்றவற்றை அளிக்க வேண்டும்.

இந்நிலையில் பேஸ்புக்கில் கணக்கு துவங்க  முகத்தையே பாஸ்வேர்டாகவும், அடையாள உறுதிச் சான்றாகவும் பயன்படுத்தும் முறையை செயல்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

முறைகேடுகள் நிகழாமல் தடுப்பதற்குரிய தொழில்நுட்ப பாதுகாப்புகளுடன், புதிய நடைமுறை வரும் மே மாதத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.

நைட் முழுக்க போனுக்கு சார்ஜ் போடலாமா என்ற கேள்வி உங்களுக்கும் இருக்கா?... அப்ப இத படிங்க...

0 Views
full-night-charging-right-or-wrong


அப்படி இரவு ழுமுக்க சார்ஜ் போட்டு காலையில் தான் சார்ஜிலிருந்து எடுப்போம். அவ்வாறு இரவு முழுக்க சார்ஜ் போடலாமா?... அப்படியே போட்டாலும் உங்கள் ஸ்மார்ட்போன் என்ன ஆகும்?

பொதுவாக எந்த போனாக இருந்தாலும் பேட்டரி ஓரளவுக்கு மேல் ஹீட் ஆகக்கூடாது. ஆனால் இப்போது வரும் போன்களில் புராசஸர் வேகம் அதிகமாக்குவதால் பேட்டரி அதிகமாக ஹீட் ஆகும் வாய்ப்பு உண்டு.

அதனால் எவ்வளவு நேரம் சார்ஜ் போடுவது  என்ற கேள்விக்கு குறிப்பிட்ட சில போன்களைப் பொருத்துதான் நமக்கு பதில் கிடைக்கும்.
பொதுவாக எந்த போனாக இருந்தாலும் பேட்டரி ஓரளவுக்கு மேல் ஹீட் ஆகக்கூடாது. ஆனால் இப்போது வரும் போன்களில் புராசஸர் வேகம் அதிகமாக்குவதால் பேட்டரி அதிகமாக ஹீட் ஆகும் வாய்ப்பு உண்டு. அதனால் எவ்வளவு நேரம் சார்ஜ் போடுவது என்ற கேள்விக்கு குறிப்பிட்ட சில போன்களைப் பொருத்துதான் நமக்கு பதில் கிடைக்கும். இதை எப்படி தெரிந்துகொள்வது? நீங்கள் ஓய்வாக இருக்கும்பொழுது, போனில் 20 சதவீதத்துக்கும் குறைவாக பேட்டரி இருக்கும்பொழுது சார்ஜில் போட்டுவிட்டு, அது முழுமையாக சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று பாருங்கள். சில போன்கள் 2 மணிநேரம் எடுக்கும். சில போன்கள் 5 மணிநேரம் எடுக்கும். அந்த நேர அளவைப் பொருத்து நீங்கள் இரவில் சார்ஜ் போடுங்கள். இப்போது வரும் சில போன்களில் ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் ஏறியதும் கரண்ட் சப்ளை கட் செய்யப்படும். அப்படிப்பட்ட போன் பயன்படுத்துபவர்கள் இரவு முழுக்க சார்ஜ் போடுவதால் எந்த பிரச்னையும் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். அதுவும் பிரச்னை தான். குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜ் போட்டு எடுத்துவிடுங்கள். அப்போதுதான் உங்கள் போனை அதிகமாக ஹீட் ஆவதிலிருந்து தடுக்க முடியும்.
இதை எப்படி தெரிந்துகொள்வது?

நீங்கள் ஓய்வாக இருக்கும்பொழுது, போனில் 20 சதவீதத்துக்கும் குறைவாக பேட்டரி இருக்கும்பொழுது சார்ஜில் போட்டுவிட்டு, அது முழுமையாக சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று பாருங்கள். சில போன்கள் 2 மணிநேரம் எடுக்கும். சில போன்கள் 5 மணிநேரம் எடுக்கும். அந்த நேர அளவைப் பொருத்து நீங்கள் இரவில் சார்ஜ் போடுங்கள்.

இப்போது வரும் சில போன்களில் ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் ஏறியதும் கரண்ட் சப்ளை கட் செய்யப்படும். அப்படிப்பட்ட போன் பயன்படுத்துபவர்கள் இரவு முழுக்க சார்ஜ் போடுவதால் எந்த பிரச்னையும் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். அதுவும் பிரச்னை தான்.

குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜ் போட்டு எடுத்துவிடுங்கள். அப்போதுதான் உங்கள் போனை அதிகமாக ஹீட் ஆவதிலிருந்து தடுக்க முடியும்.


வாட்ஸ்அப்ல நீங்க யார்கிட்ட அதிகமா சாட் பண்ணீங்கன்னு தெரிஞ்சிக்கணுமா?... இத க்ளிக் பண்ணுங்க...

0 Views
new-find-chat-memory-facilities-for-whatsapp


ஐபோனில் மட்டுமே இருந்த இந்தப் புதிய வசதி தற்போது ஆண்டிராய்டிலும் அறிமுகமாகி உள்ளது.

எப்படிக் கண்டுபிடிக்கிறது?

வாட்ஸ் அப்பில் 'செட்டிங்ஸ்' பகுதிக்குச் செல்லுங்கள். அங்கே புதிதாக இருக்கும் 'டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ்' பக்கத்தை க்ளிக் செய்யுங்கள் அங்கே எந்த எண்ணின் சாட்டுக்கு எவ்வளவு மெமரி தீர்ந்திருக்கிறது என்பதன் பட்டியலைக் காண முடியும்.

குறிப்பிட்ட சாட்டைக் க்ளிக் செய்து நாம் அனுப்பிய அல்லது நமக்கு வந்த குறுஞ்செய்திகள், தொடர்பு எண்கள், லொகேஷன், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றின் முழுத் தகவலைப் பெற முடியும்.



இந்த புதிய வசதியில் உள்ள 'மேனேஜ் மெசேஜஸ்' என்பதை கிளிக் செய்தால் அதன்மூலம் உங்கள் போனில் உள்ள மெசேஜ்களைத் தேர்ந்தெடுக்கவோ, அழிக்கவோ முடியும்.

அந்த மேனேஜ் மெசேஜ் லிஸ்ட்டைப் பார்த்தாலே நாம் யாருடன் மிக அதிகமாக சாட் செய்து நம்முடைய சாட் மெமரியை காலி செய்திருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த வசதி தற்போதைய v2.17.340 வாட்ஸ்அப் வெர்ஷனில் கிடைக்கிறது.


மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...